நாட்டில் அண்மைக்காலமாக நடந்தேறும் மனிதப் படு கொலைகள், திரைப்படங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளை அடியொற்றியவாறு அமைந்திருப்பதைக் காணலாம். சினிமா நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்று சொல்லப்படுவதுண்டு. சில திரைப்படங்களின் கதை உண்மைச் சம்பவங்களைத் தழுவியதாய் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
சில தருணங்களில் திரையில் சித்திரிக்கப்பட்டு காட்சிப் பிழம்பாகக் காட்டப்படுபவை நிஜ வாழ்க்கையிலும் அவ்வகையான சம்பவங்கள் நடைபெற கால்கோளாக அமைந்துவிடுகின்றன. அம்மாதிரியான திரைப்படங்களில் பச்சிளங்குழந்தைகள் முன்னே, அல்லது ஓரளவுக்கு விவரம் தெரிந்த பிள்ளைகளின் கண்ணெதிரே அவர்களது தந்தையையோ தாயையோ கொடூரமாக கொலைசெய்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
அவர்களது தாய், தகப்பனின் கழுத் தைத் திருகி, முகத்தைத் தலையணை யைக் கொண்டு அழுத்தி மூச்சைத்திணறடித்து, கத்தியால் குத்தி, துப்பாக்கியால் சுட்டு, வாயை அகல விரித்து விஷத்தை ஊற்றிக் கொலை செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இவை பார்ப்பவர் மனதில் ஒருவித பாதிப்பையும் சலனத்தையும் தோற்றுவித்துவிட வல்லனவாகும்.
சமீபத்தில் நான் பார்க்க நேரிட்ட திரைப்படமொன்றில் ஒரு பெண் ஆணுடன் சரசமாடிக் கொண்டே அவனது கழுத்தில் இலாவகமாக சுருக்குமாட்ட, மறுமுனையில் பிறிதொரு பெண் மரத்தில் ஏலவே கட்டப்பட்ட கயிற்றை வலுக்கொண்ட மட்டும் பிடித்து இழுப்பாள். அதன் போது சடுதியாக அந்த ஆடவனை விட்டு வரும் சரசமாடிய பெண்ணும் சேர்ந்து அக்கயிற்றை இழுப்பாள். பின்னர் சரசம் விளையாடிக்கொண்டிருந்த ஆண் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலைசெய்யப்படுவான்.
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சத்தியராஜ் நடித்த 6.2 என்ற திரைப்படம் இவ்வாறானதொரு பின்னணியிலேயே அமைந்திருந்தது. அதில் சிறுவனாக இருந்த சத்தியராஜின் தந்தையிடம் அவரது உறவுக்கார சகோதரர்கள், பிழைப்புக்காக தஞ்சம் கோரி அவரது வீட்டுக்கு வருவார்கள். அப்போது ஓர் நாளிரவு வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்ற பின்னர் உறவுக்கார சகோதரர்கள் சத்தியராஜின் தாயையும் தந்தையையும் கூரிய ஆயுதத்தால் அடித்தே கொலை செய்வார்கள்.
இதனை சிறுவனாக இருக்கும் சத்தியராஜும் அவரது சகோதரியும் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். தம் கண்ணெதிரே பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதைப் பார்த்து யாதொன்றும் செய்ய இயலாதவர்களாக விழி பிதுங்கி நிற்பார்கள். இத்திரைப்படம் திரைக்கு வந்து பல வருடங்களாகின்ற போதிலும், தற்போது அதனைப்பார்க்க நேர்ந்தால் திரைப்படத்தில் வரும் இக்காட்சி பார்ப்பவரின் மனதில் ஏதோ ஒருவித பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிடுமென்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பை வகித்த ஒருவர் கூட, அக்காலத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட "டெல்டா போஸ்" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கொலைக்காட்சியை மையமாக வைத்தே கொலை செய்யப்பட்டாரெனக் கூறப்படுகின்றது. எனவே, திரைப்படங்களில் நடக்கும் சம்பவங்கள் சில நேரம் நிஜவாழ்வுடன் தொடர்புறாமல் இருந்தாலும், சில தருணங்களில் அவற்றின் பாதிப்பில் சில சம்பவங்கள் நிஜவாழ்வில் அரங்கேறத்தான் செய்கின்றன. அவ்வாறு ஒரு சம்பவம் நிஜ வாழ்வில் நடந்து ஒரு குடும்பத்தையே நிர்க்கதியான நிலைமைக்குள்ளாக்கிய கதையே இம்முறை பதிவாகின்றது.
ஆம். களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பாத்த, வெல்பொல, புன்சிரிபுர பகுதியில் சில ஏக்கர் நிலப்பரப்புக்குச் சொந்தமான தேயிலைத் தோட்ட உரிமையாளரொருவர் தமது மனைவி, பிள்ளைகளுடன் தனது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ளார். அவர் தேக நலம் சற்று குன்றிய, அடிக்கடி நோய்வாய்ப்படும் ஒருவராக இருந்துள்ளாரென களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் பிரஷான் சில்வா தெரிவித்தார்.
இதன் காரணமாக அடிக்கடி மருந்து வாங்கவும், வைத்திய சிகிச்சைகளுக்காகவும் மருந்தகங்களையும் வைத்தியசாலைகளையும் நாடுபவராக இருந்துள்ளார். இவரது குடும்பம் ஊரின் மத்தியில் சற்று பிரபலம் பெற்ற ஒன்றாகவே இருந்துள்ளது. குறித்த நபருக்கு மூன்று பிள்ளைகள், மூவருமே ஆண்கள். மூத்த பையனுக்கு 15 வயதாகின்றதென பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் தாய் தொழில் எதுவும் செய்யாத நிலையில், பிள்ளைகளையும் கணவனையும் கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்துள்ளார்.
இவர்களது வீட்டில் மற்றவர்கள் உதவி என்று வருவதும் அவர்களுக்கு இக்குடும்பம் உதவிசெய்வதும் வாடிக்கையாகவே இருந்துள்ளது. எவ்வித பிரச்சினையும் சிக்கல்களும் இல்லாமல் அவர்களது வாழ்க்கை மலர்ப் பாதையில் காலடி எடுத்து வைத்துப் பயணித்துள்ளது. ஆனால் அப்பாதையில் தூவப்பட்ட மலர் ரோஜா என்றும் அதனுடன் முள்ளும் இருக்குமென்பதை அறியாமல் கால் வைத்ததன் விளைவு இவர்களது வாழ்க்கையையே திசைமாறிய ஓடமாக மாற்றிவிட்டது.
ஆம். இவ்வாறிருந்த போது தான் குறித்த நபரின் மனைவியிடம் ஒரு அவசரத் தேவையெனக் கூறி சந்தேக நபர் ஆயிரம் ரூபாவைக் கைமாற்றலாக (கடனாக) பெற்றுள்ளார். அந்நபரின் மனைவி இக்கட்டான சூழ்நிலையில் அப்பணத்தைக் கொடுத்துள்ளார். ஏனென்றால் சந்தேக நபர் ஒரே ஊரைச் சேர்ந்தவர்.
அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வந்து போகும் ஒருவராக இருந்துள்ளார். அவசரத் தேவையெனக் கேட்பதால் கொடுக்காமல் இருந்தால் அவர் என்ன நினைப்பார் என்ற எண்ணமும் சந்தேக மும் அந்நபரின் மனைவியை உள்ளூர வாட்டியுள்ளது. உடனே அச்சந்தேகநபர் கேட்ட ஆயிரம் ரூபாவைக் கொடுத்துள்ளார். சந்தேகநபரும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார். அதன் பிறகு அப்பணத்தை உரிய நேரத்தில் குறித்த நபரின் மனைவியிடம் கொடுக்காது காலம் தாழ்த்தி வந்துள்ளாரென களுத்துறை வடக்குப் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பிரஷான் சில்வா தெரிவித்தார்.
குறித்த நபரின் மனைவியும் பொறுத் துப் பொறுத்து பார்த்துவிட்டு, ஒருநாள் சந்தேகநபரின் வீட்டுக்கே சென்றுள்ளார். அங்கே சென்று சந்தேக நபரிடம் தன்னிடம் கைமாற்றலாக (கடனாக) வாங் கிச் சென்ற பணம் தொடர்பிலும் அதனைத் திருப்பித் தர மறுத்தமைக்கான காரணம் தொடர்பிலும் வினவியுள்ளார். அச்சமயத்தில் சந்தேகநபர் அதனை அமைதியாக செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்துள்ளார்.
ஆனால், இதனையொரு சிறிய விடயமாகக் கருதி சந்தேகநபர் மறந்துவிடவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினமான கடந்த 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு நிறைபோதையில் குறித்த நபரின் வீட்டுக்கு சந்தேக நபர் சென்றுள்ளார். குறித்த நபரின் மனைவி தனது வீட்டுக்கு வந்து கொடுத்த பணத்தைக் கேட்டதை எண்ணி எண்ணி மனதுக்குள் ஏசிக்கொண்டே அவ்வீட்டுக் கதவை தட்டியுள்ளார்.
அச்சமயம் கதவு தட்டும் சத்தம் கேட்டு குறித்த பெண் வந்துள்ளார். கதவை திறந்து பார்த்த போது நிறைபோதையில் கதவோரமாக தள்ளாடியபடி காணப்பட்ட சந்தேகநபர் தனது வாய்க்கு வந்தபடி அவளைத் திட்டியுள்ளார். இடைவிடாது கத்திக் கூச்சலிட்டுள்ளார். அந்நேரம் பார்த்து குறித்த நபர் வீட்டில் இருக்கவில்லை.
அவர் சுகவீனமுற்றிருந்தமையின் காரணமாக மருந்து வாங்குவதற்காக அருகாமையிலிருந்த தனியார் மருத்துவசிகிச்சை நிலையத்திற்குச் சென்றுள்ளார். சந்தேக நபர் அங்கு வந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்நபர் அங்கே வந்துவிட்டார். சந்தேகநபர் தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டு மது அருந்திவிட்டு வந்து மனைவி பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதைக் கண்டு கோபம் கொப்பளிக்க சந்தேகநபரை நோக்கி வேகமாக வந்துள்ளார். சுகவீனம் காரணமாக அவரது உடல் சற்று தெம்பிழந்து பலவீனமாகவே இருந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
சந்தேநபரை தடுத்துநிறுத்தி என்னவென விசாரித்துள்ளார். “பணம் தராவிட்டால் பரவாயில்லை" அங்கிருந்து சென்றால் போதுமென குறித்த நபர் எவ்வளவோ தூரம் சந்தேகநபரிடம் கெஞ்சாத குறையாக கேட்டுப்பார்த்துள்ளார். ஆனால் சந்தேகநபர் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லையென குறித்த நபரின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக சகிக்க முடியாத வண் ணம் தீயவார்த்தைக் கணைகளை சரமாரியாகப் பொழிந்துள்ளார். பொறுத்திருந்து பார்த்த குறித்த நபரின் பொறுமை எல்லை தாண்டியுள்ளது. இதனால் வாய்த்தர்க்கம் முற்றி சிறிது நேரத்திற்கெல்லாம் வாய்த்தர்க்கம் கைகலப்பாக பரிமாற்றமடைந்துள்ளது. இதன்போது சந்தேகநபர் தாக்கியதில் குறித்த நபர் வீட்டிற்கு முன்னாலுள்ள கானில் விழுந்துள்ளார்.
கோபத்தின் உச்சாணிக்கொம்புக்கே சென்றுவிட்ட சந்தேக நபர் அவரை கானிலிருந்து வெளியே இழுத்தெடுத்து அவரது கழுத்தை தனது முழங்கையால் வலுக்கொண்ட மட்டும் இறுகப்பற்றி கழுத்தை நெரித்துள்ளதாக வடக்கு களுத்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பிரஷான் சில்வா தெரிவித்தார். இதனால் மூச்சுத்திணறி குறித்த நபர் ஸ்தலத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததுடன், சந்தேகநபர் தனது பிடியைத் தளர்த்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளார்.
இதனை கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருந்த அவரது குடும்பம் அதிர்ச்சியால் உறைந்து நிலைதடுமாறி கத்திக்கூச்சலிட்டு அலறியுள்ளது. இருந்தும் பயனில்லை. சிறிதும் தாமதிக்காமல் தான் இக்கட்டில் மாட்டிக்கொண்டதை உணர்ந்த சந்தேகநபர், அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். அங்கிருந்து ஓடியதுடன் அப்பகுதியிலுள்ள வீடொன்றின் அறைக்குள் ஒளிந்துகொண்டதுடன், சில நாட்கள் யாரும் அறியாதவாறு தலைமறைவாகியுள்ளார்.
பொலிஸ் இரகசிய தகவல் தொடர்பாளர் ஒருவரின் உதவியால் சந்தேகநபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் பிரஷான் சில்வாவின் வழிக்காட்டலுக்கமைவாக குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான தலைமை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உபபொலிஸ் பரிசோதகர் பத்மினி குலதுங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள் ளப்படுகின்றன.
கே.நிரோஷ்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக