அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

வெள்ளை மாளிகை, பென்டகன மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை

கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தொடர்ந்தும் தூண்டிவிட்டால் அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.



1950-53 ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போர் நினைவுதினம் நேற்று வடகொரியாவில் கடைபிடிக்கப்பட்டது. அப்போது ராணுவ வீரர்களிடையே பேசிய கொரிய ராணுவ மூத்த தளபதி க்வாங் பியாங், அமெரிக்கா ஏகாதிபத்தியம் நமது இறையான்மைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்தால் நமது படையினர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவர்" என்றார்.

இந்த பேச்சு அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பானது. வடகொரியா இப்படி மிரட்டுவது ஒன்றும் புதிது அல்ல.

பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் மேலாதிக்கம் செலுத்தி வரும்போதெல்லாம் இத்தகைய மிரட்டல்களை வடகொரியா விடுத்துக் கொண்டிருக்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக