குறும்பு செய்த மூன்று வயது குழந்தையை பெற்ற தாயே கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பிரித்தானியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் இடன்பெர்க் நகரை சேர்ந்த அடிகோயா (வயது 34) தனது மூன்று வயது குழந்தை உடன் உணவகம் ஒன்றில் உணவு அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். வீடு சென்ற குறித்த குழந்தை குறு ம்பு செய்ததால் கோபமடைந்த தாய் அக் குழந்தையை கொடூரமாக அடித்துள்ளார்.
இதனால் குழந்தையின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. எந்தவித சிகிச்சையும் அளிக்காததால் 24 மணி நேரத்திற்கு பின்னர் குழந்தை இறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையை பெட்டி ஒன்றில் போட்டு காட்டில் வீசியுள்ளார். அத்துடன், குழந்தை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தாய் கூறும் காரணங்கள் போதாமல் இருந்தமையினால் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். இந்நிலையில் குறித்த தாய் தனது குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டதையடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக