அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

சமையல் டிப்ஸ்

* நெல்­லிக்காய் ஊறுகாய் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க ஒரு வழி உண்டு. நெல்­லிக்­காயை உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து வேக வைத்து, அந்த உப்பு நீரி­லேயே வைத்­தி­ருக்க வேண்டும். தேவைப்­ப­டும்­போது எடுத்து, நறுக்கி, சூடான எண்­ணெயில் கடுகு தாளித்து, மிளகாய் தூள், வெந்­தயத் தூள், பெருங்­காயத் தூள் சேர்த்துக் கிளறி உப­யோ­கிக்க வேண்டும். இப்­படிச் செய்தால் கெட்டுப் போகாது. மொத்­த­மாகத் தாளித்து வைத்தால் கெட்டுப் போய்­விடும்.



* புடலை, பீர்க்­கங்காய், பரங்­கிக்காய் கூட்டு செய்யும் போது, ஒரு டீஸ்பூன் பால் சேர்த்தால் சுவை­யாக இருக்கும். சூடான தோசைக்­கல்லில் சிறிது புளித்த மோரும் உப்பும் தடவி தேய்த்தால் தோசைக்­கல்லில் பிசு­பி­சுப்பு இருக்­காது.

* பச்சைமிளகாய் வாங்கி வந்­த­வுடன் காம்பைக் கிள்­ளி­விட்டால் பச்சை மிளகாய் அழு­காமல் இருக்கும்.

* பாகற்­காயை அரிந்து, சிறிது நேரம் அரிசி களைந்த நீரில் ஊற வைக்­கவும். பிறகு சமைக்­கவும். கசப்பு இருக்­காது.

* சேனை, சேப்­பங்­கி­ழங்கு, உரு­ளைக்­கி­ழங்கு வகை­களை எண்ணெய் விட்டு வதக்கி கறி செய்யும் போது, சிறி­த­ளவு பொட்டுக் கடலை மாவைத்   தூவினால் மொறு மொறுப்­பா­கவும் சுவை­யா­கவும் இருக்கும்.

*அடைக்கு அரைக்கும் போது, ஒரு சிறிய துண்டு பரங்­கிப்­பிஞ்சு அல்­லது பரங்­கிக்­காயை சேர்த்து அரைக்­கவும். அடை மிரு­து­வாக பஞ்சு போல இருக்கும்.

*ஆப்ப மாவைக் கரைத்­ததும் சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றி வைத்தால் ருசி­யா­கவும் மென்­மை­யா­கவும் இருக்கும்.

*முருங்­கைக்­கீ­ரையை சமைக்கும் போது சிறிது சர்க்­க­ரையைச் சேர்த்துக் கொண்டால், ஒன்­றோடு ஒன்று ஒட்டிக் கொள்­ளாமல் உதிரி உதி­ரி­யாக இருக்கும்.

*எலு­மிச்சம் பழத்தை இரண்டு நிமிடம் வெந்­நீரில் போட்டு வைத்து விட்டு எடுத்து, பிறகு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழி­வதும் சுலபம்.

*முட்­டை­களின் மேல் சிறிது எண்ணெய் தடவி வைத்தால் சீக்­கிரம் கெட்டுப் போகாது.

*கிழங்­கு­களை உப்புப் போட்டு வேக வைத்தால் கிழங்கு சரி­யாக வேகாது. சேனையை தோல் எடுத்­து­விட்­டுத்தான் வேக வைக்க வேண்டும்.

*கொத்­த­மல்லி சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, மிளகாய்க்கு பதிலாக மிளகை வறுத்துச் சேர்த்தால் சுவை கூடும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக