அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

கண்­களில் சுருக்­கங்­களா..?

பொக்­கி­ஷ­மாக பாது­காக்க வேண்­டிய பொருட்­களை கண் மாதிரி பாது­காக்க வேண்டும் என சொல்­வது வழக்கம். கண் பத்­தி­ர­மாக, பொக்­கி­ஷ­மாகப் பாது­காக்க வேண்­டிய உறுப்பு. ஏனென்றால், உள்­ளத்து உணர்ச்­சி­களை அப்­ப­டியே கண்­ணாடி போன்று பிர­தி­ப­லிப்­பவை கண்கள். கண்­களில் உண்­டா­கிற பிரச்சி­னைகள் ஆரோக்­கி­யத்­திற்கு மட்­டு­மின்றி, அழ­குக்கும் நல்­ல­தல்ல. கண்­ண­ழகு தொடர்­பான சில பிரச்சி­னை­க­ளும், அவற்­றிற்­கான தீர்­வு­களும்...



சுருக்­கங்கள் மற்றும் கோடுகள்: கண்­களைச் சுற்­றி­யுள்ள சருமம் மிக மென்­மை­யாக இருக்கும். சீக்­கி­ரமே வறண்டு போய்­விடும். 25 வய­தி­லி­ருந்தே கண்­களைச் சுற்றி வரும் சுருக்­கங்­களை விரட்­டலாம். கண்­களைச் சுற்றி ஐ கிரீம் அல்­லது கண்­க­ளுக்­கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெது­வாக மசாஜ் செய்­யலாம்.

கண்­களில் அரிப்போ, எரிச்­சலோ இருந்தால் கைகளால் கண்­களை கசக்­கக்­கூ­டாது. அது சுருக்­கங்களை உண்­டாக்­கி­விடும். சுருக்கம் அதிகம் இருந்தால் தர­மான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்­லது பாதாம் ஒயில் பயன்­ப­டுத்­தலாம். மோதிர விரலால் மிக மென்­மை­யாக மசாஜ் செய்து துடைக்­கலாம்.

தேயிலை கொதித்து வைத்த தண்­ணீரை வடி­கட்டி அதில் பஞ்சை நனைத்து, கண்­களின் மேல் ஒத்­தடம் கொடுத்தால் சுருக்­கங்கள், கோடுகள் மறையும். இதை போன்று தினமும் செய்­யவும்.

கரு­வ­ளையம்: சரு­மத்தின் எல்லா இடங்­க­ளிலும் பர­வி­யி­ருக்கும் ஹைப்போ டெர்மிஸ் கண்களை சுற்­றி­யுள்ள பகு­தியில் மிக குறைவு. பரம்­பரை வாகு, தூக்­க­மின்மை, சரி­வி­கித உணவு உண்­ணா­தது, கம்ப்­யூட்டர், டி.வி முன் அதிக நேரம் இருப்­பது என கரு­வ­ளை­யங்கள் உரு­வாக காரணம். தொடக்­கத்­தி­லேயே கவ­னித்து சிகிச்சை மேற்­கொண்டால் சரி செய்­யலாம். முதலில் 8 மணி நேரம் தூக்கம் தேவை. பகல் நேரத்தில் உள்­ளங்கை குவித்து கண்­களின் மேல் வைத்து மூடி­ய­படி அடிக்­கடி செய்­யலாம். கண்­களை வேக­மாக மூடித் திறந்தால் அது ஒரு­வித மசாஜ்.

கண்­களை இறுக மூடவும், பிறகு அக­ல­மாகத் திறக்­கவும். இதைப்­போன்று 5 முறை செய்­யவும். புரு­வங்­களை குறுக்­காமல், கண் இமை­களை மட்டும் மூடி, மூடி திறக்­கவும். நெற்றி, முகத் தசைகள் சாதா­ர­ண­மாக இருக்­கட்டும். இந்த பயிற்சி கண்­களைச் சுற்­றி­யுள்ள தசை­க­ளுக்­கான பயிற்சி. கரு­வ­ளை­யத்தை போக்க இதை தொடர்ந்து செய்­யலாம். கரு­வ­ளையம் அதி­க­மாக இருந்தால் பியூட்டி பார்­லர்­களில் ஐ மசாஜ் செய்தால் பல­ன­ளிக்கும்.

கண்­க­ளுக்­கான மேக்கப்பை நீக்க வேண்­டியது

அவ­சியம்: இரவு படுக்கும் முன் கண்­களில் போட்ட மேக்கப்பை முற்­றிலும் அகற்­ற­வேண்டும். செயற்கை இமைகள் பொருத்­தி­யி­ருந்தால் அதையும் அகற்­ற­வேண்டும். தற்­போது, ஐ மேக்கர் ரிமூ­வரும் கிடைக்­கி­றது. பஞ்சைத் தொட்டு கண்­களை மூடி­ய­படி வெளி­யி­லி­ருந்து உள்ளே மூக்கை நோக்கி துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்­படிச் செய்­யவும். பிறகு கண்­களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்­களின் உள் பக்­கத்­தையும், கீழ் இமை­க­ளையும் சுத்­தப்­ப­டுத்த வேண்டும். கண்ணில் மேக்கப் முழுக்க அகற்­றப்­ப­டா­விட்டால், அது எரிச்­சலை உண்­டாக்கி கண்கள் சிவந்து போகு­மாறு செய்யும்.

சிவந்து, கண்ணீர் வடியும் கண்கள்: கண்­க­ளுக்கு உப­யோகிக்­கின்ற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்­காரா போன்ற ஏதேனும் அலர்­ஜி­யானால் இப்­படி கண்ணீர் வடி­யலாம்.

வாயில் துணியை வைத்து ஊதி கண்­களின் மேல் வைக்­கக்­கூ­டாது. எச்சில் மூலம் தொற்றுக் கிரு­மிகள் கண்­க­ளுக்குள் போகும். கண்­களை கழுவி விட்டு அப்­ப­டியே காத்­தி­ருக்­கலாம். அலர்ஜி கார­ண­மாக உண்­டா­கி­யி­ருந்தால் அதற்­கான சிகிச்­சையை மேற்­கொள்­ளலாம். கண்­க­ளுக்­கான மேக்கப் சாத­னங்கள் தரம் வாய்ந்­த­வை­யாக இருக்க வேண்டும்.

கண்­களை பரா­ம­ரிக்க சில டிப்ஸ்: சுத்­த­மான தண்­ணீரால் அடிக்­கடி கண்­களை கழு­வவும். சாதா­ரண மையில் ஆரம்­பித்து, ஐ லைனர், ஐ ஷேடோ, மஸ்­காரா என எல்­லாமே தர­மான தயா­ரிப்­பு­க­ளாக இருக்க வேண்டும்.

கம்ப்­யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். கண்களுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பச்சை, நீல நிறங்களை சிறிது நேரம் பார்க்கலாம். தினமும் 8 மணி நேர தூக்கம் மற்றும் 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடித்தால் நல்லது. பின்னர், கண்கள் வசீகரமாக தோற்றமளிக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக