அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

சிங்­கத்­திடம் அகப்­பட்ட குழந்­தையை இலா­வ­க­மாக பறித்­தெ­டுத்த தாய்

சிங்கம் ஒன்று குழந்­தையை கடித்து இழுத்த போது குழந்­தையின் தாய் இலா­வ­க­மாக குழந்­தையைப் பறித்­தெ­டுத்த சம்­பவம் ஒன்று ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.



ரஷ்­யாவில் தாய் ஒருவர் நிக்­கிதா (வயது 4) என்ற குழந்­தையை அழைத்து கொண்டு 'ட்ரகான்' பூங்­கா­விற்கு சென்­றுள்ளார், இந்­நி­லையில் கூண்டில் அடைக்­கப்­ப­டமால் சங்­கி­லியில் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்த சிங்கம் ஒன்று குழந்­தையை தாவிப் பிடித்­துள்­ளது.

இதனைக் கண்ட குழந்­தையின் தாய், சிங்­கத்தின் பிடியில் இருந்து குழந்­தையை காப்­பாற்­றி­யுள்ளார்.

'ட்ரகான்' பூங்­காவில் நடந்த இந்த சம்­ப­வத்தை அலக்சி (வயது 27) என்­பவர் தனது கெமெ­ராவில் பதி­வு­செய்­துள்ளார்.

இது­கு­றித்து அலக்சி கூறு­கையில், தான் மிருங்­களை காண அருகில் மெ­ரா­வுடன் சென்­ற­தா­கவும், ஆனால் சிங்கம் திடீ­ரென்று தாவி­யதால் அதிர்ச்சி கொண்­ட­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

இந்த சம்­ப­வத்தில் குழந்­தைக்கு எந்­த­வித பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை என்றாலும், தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக