அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 30 ஜூலை, 2014

உலகமே எதிர்பார்த்த ஒரு வழக்கின் தீர்ப்பு

 Kuram Shaikah Zaman (32)
"107 வருட சிறை தண்டனையை 
20 வருடங்களுக்குள் 
அனுபவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்"

தங்­காலை, மெடில்லே வீதியில் உள்ள த நேச்சர் ரிசேவ் ஹோட்­டலில் பிரித்­ தா­னிய பிர­ஜை­யான குராம் ஷேய்க் என்­ப­வரை படு­கொலை செய்­து­விட்டு அவ­ரது காத­லி­யான ரஷ்­யாவை சேர்ந்த விக்­டோ­ரியா அலெக்ஸ்­ சான்­ரா­னோவை கூட்டுப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வ­மா­னது கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்­தன்று பதி­வா­கி­யி­ருந்­தது. இந்த சம்­பவம் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சாட்­சி­ யங்­களை திரட்டி விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதிமன்றில் சந்­தேக நபர்­களை நிறுத்தி அவர்­ களில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட நால்­வ­ருக்கு கடந்த 18 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை 20 வருட கடூ­ழிய சிறை தண்­டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்­றினால் தீர்ப்பும் வழங்­கப்­பட்­டது.



குராம் ஷேய்க் பிரித்­தா­னிய பிரஜை. இதனை விட அவ­ருக்கு இன்­னொரு அடை­யா­ளமும் உள்­ ளது. அதா­வது சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் ஊழியர் என்ற அடை­யா­ளமே அது. பல வரு­டங்க­ளுக்கு முன்னர் வட­கொ­ரியா சென்ற குராம் ஷேய்க் அங்கு யுத்­ததின் பின்­ன­ரான நட­வ­டிக்­கைகளில் செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் சமூகப் பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார்.

இந் நிலையில் தான் ரஷ்­யாவை சேர்ந்த விக்­ டோ­ரியா அலெக்ஸ்­சான்­ரானோ வட­கொ­ரி­யா­வுக்கு வரு­கின்றார். கொரிய - ரஷ்ய நட்­பு­றவு சங்­கத்­ துடன் விக்­டோ­ரி­யாவின் குடும்­பத்­தினர் நெருங்­ கிய தொடர்­புள்­ள­வர்­க­ளாக இருந்­ததன் விளைவே விக்­டோ­ரியா வட­கொ­ரி­யா­வுக்கு வரக் கார­ண­மாக இருந்­தது. மொழிகள் தொடர்­பான கற்­கை­களை வட­கொ­ரி­யாவில் உள்ள பல்­க­லைக்­க­ழகமொன்றில் மேற்­கொள்­ளவே விக்டோ­ரியா அங்கு செல்ல நேர்ந்­தது. எனினும் விதி, அங்கு வைத்து விக்­டோ­ரி­யா­வுக்கு அவ­ரது வாழ்க்கை துணை­யையும் தேடிக்­கொ­டுத்­தது.

இந் நிலையில் பிரித்­தா­னிய - ரஷ்ய காத­ லர்கள் வட­கொ­ரியா மண்ணில் தமது காதலை தொடர்ந்­தனர். இந் நிலையில் தான் பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்­துக்கு குராம் ஷேய்க் செல்ல வேண்டி ஏற்­ப­டு­கின்­றது. அங்கு செஞ்­சி­லுவை சங்­ கத்தின் பணி­களை முன்­னெ­டுக்க குராம் சென்ற போதும் குராம் - விக்­டோ­ரியா காதல் தொடர்ந்­ தது. நவீன தொழில் நுட்­பத்தின் உத­வி­யுடன் வளர்ந்த காதலில் ஒரு­வரை ஒருவர் நேர­டி­யாக சந்­தித்­துக்­கொள்ள ஆர்வம் மேலிட்­டது. அதன் பிர ­தி­ப­ல­னாக இரு­வரும் சந்­திப்­புக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டனர்.

இதன்­படி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­ கொண்டு இலங்­கையில் இரு­வரும் சந்­தித்­துக் ­கொள்­வது என அவர்கள் தீர்­மா­னித்­தனர். இலங்­ கையின் இயற்கை அழ­குடன் தமது காதலை சங்­க­மிக்கச் செய்­வது அவர்­களின் எதிர்ப்­பார்ப்­பாக இருந்­தி­ருக்­கலாம்.

இத­னி­டையே குராம் - விக்­டோ­ரியா காதல் விவ­காரம் இரு வீட்­டா­ருக்கும் தெரிந்­தி­ருந்த நிலையில் விக்­டோ­ரியா ஏற்­க­னவே இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் செய்­தி­ருந்தார். இதன் கார­ண­மா­க அவர்கள் தமது காதல் மொழி பேச ஏற்ற சூழ­லாக இலங்­கையை கருதி தெரிவு செய்­தி­ருக்க வேண்டும்.

இந் நிலையில் தான் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி இரு வேறு நாடு­க­ளி­லி­ருந்து இரு வேறு விமா­னங்­களில் குராமும் விக்­டோ­ரி­யாவும் கட்டுநாயக்க விமான நிலையம் வந்­த­டைந்­துள்­ ளனர்.

இணையம் ஊடாக ஏற்­க­னவே இலங்­கையில் தங்­கு­மி­டங்­களை தயார் செய்­தி­ருந்த இவ்­வி­ரு­ வரும் அதன் பிர­கா­ரமே தங்­காலை த நேச்சர் ஹோட்­ட­லுக்கு செல்­கின்­றனர். இந் நிலையில் வாடகை வாகனம் ஒன்றின் மூலம் தங்­காலை நேச்சர் ஹோட்­டலை அடைந்த விக்­ டோ­ரியா - குராம் ஜோடி அங்கு சுமார் 9 நாட்கள் வரை தங்­கி­யி­ருந்து தமது எதிர்­கால திட்­ட­மி­டல்­களை மேற்­கொள்­ள­லா­யினர். அவ்­வ­ளவு நட்­க­ளாக இருந்­த­தாலோ என்­னவோ அந்த ஹோட்­ட­லி­ லேயே உள்­ள­வர்கள் போன்று இந்த ஜோடி மாறி­விட்­டது.

இந் நிலையில் தான் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி காலை குராம் விக்­டோ­ரியா தங்­கி­ருந்த அறை பகு­திக்கு சென்ற நேச்சர் ஹோட்­டலின் முகா­மை­யாளர் ' இன்று மாலை எமது ஹோட்­டலில் ஒரு நிகழ்வு உள்­ளது. கண்­டிப்­பாக நீங்கள் இரு­வரும் அதில் கலந்­து­ கொள்ள வேண்டும்' எனக் கூறி அழைப்­பி­தழை வழங்­கி­யுள்ளார். இதனை தொடர்ந்து நிகழ்­வுக்­ காக ஹோட்டல் ஊழி­யர்கள் ஹோட்­டலை அழகு படுத்­திக்­கொண்­டி­ருந்த போது குராமும் விக்­டோ­ ரி­யாவும் இணைந்து அந்த பணி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பும் வழங்­கி­யுள்­ளனர்.

இதனைத் தொடர்ந்து தமது அறைக்குச் சென்று ஓய்­வெ­டுத்­துக்­கொண்ட இந்த ஜோடியினர் மீண்டும் மாலை நிகழ்வில் கலந்­து­கொள்ள தயாராகி சந்­தோ­ஷ­மாக ஹோட்டல் நிகழ்வுப் பகு­திக்கு வருகை தந்­தனர். ஹோட்­ட­லில் உணவு ஏற்­பா­டுகள் பூர்த்­தி­யா­கி­யி­ருந்த நிலையில் கிறிஸ்மஸ் மரமும் நெருப்பு குண்டம் ஒன்றும் நிகழ்வை அலங்­க­ரித்­திருந்தனர்

உணவு விடு­தி­ய­ருகே மதுபானங்கள் விருந்­துக்­காக ஏற்­பா­டு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் அந்த மதுபான நிலை­யத்தை நடத்தி வந்­த­வ­ருடன் குராம் கதை வளர்த்­துள்ளார். அதா­வது மதுபான நிலையம் ஒன்றை எப்­படி நடத்­து­வது என்­பது தொடர்­பி­லேயே அந்த கலந்­து­ரை­யாடல் அமைந்­ துள்­ளது. இந்த கலந்­து­ரை­யா­ட­லா­னது விக்­டோ­ரி­ யா­வுக்கு தொடர்­பில்லை என்­பதால் அவர் நெருப்பு மூட்­டப்­பட்­டி­ருந்த பகு­திக்கு சென்று சிறிது நேரம் இருந்த பின்னர் ஹோட்­ட­லுக்கு பின் பக்­க­மாக இருந்த கடற்­க­ரைக்கு சென்று அலை­களை ரசித்­ துள்ளார்.
Charges were filed against Vidanapaitharana and five other suspects [AFP]
பின்னர் மீண்டும் குராம் பேசிக்­கொண்­டி­ருந்த இடத்­துக்கு வந்த போது ' எங்கு சென்றீர்? ஏன் என்­னிடம் சொல்­லாமல் சென்றாய்?' என குராம் பாசம் கலந்த கோபத்தில் கேட்க விக்­டோ­ரி­யாவின் மனது சற்று வலித்­துள்­ளது. இந் நிலையில் கண்கள் கலங்க விக்­டோ­ரியா மீண்டும் கடற்­க­ ரைக்கு சென்று அலை­க­ளு­டனேயே உற­வாட ஆரம்­பித்­துள்ளார்.

இத­னி­டையே வேறு ஒரு உண­வகம் ஒன்றின் உரி­மை­யா­ள­ரான ரயன் அக­லங்க என்­ப­வரும் அந்த நிகழ்­வுக்கு வந்­துள்ளார். இந் நிலையில் ரயன் அந்த நிகழ்வை கொண்­டா­டிக்­கொண்­டி­ ருந்த போது ஒரு குழு அவ­ரிடம் சென்று அவரை வம்­புக்கு இழுத்து அவர் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது.

செஞ்­சி­லுவை சங்க ஊழி­ய­ரான குராம் மனித நேயம் மிக்­கவர். இத­னாலோ என்­னவோ ரயனை காப்­பாற்றும் நோக்­கோடு அல்­லது சண்­டையை விலக்க சண்டை இடம்­பெற்ற இடத்தை நோக்கி குராம் சென்­றுள்ளார். எனினும் ஹோட்டல் முகா ­மை­யாளர் தில்­ருக்க்ஷி, குராமை அங்கு செல்­வதை தடுத்த போதும் அவர் அதனை உதா­சீனம் செய்­து­ விட்டு அந்த இடத்­துக்கு சென்­றுள்ளார்.

இந் நிலையில் தான் ரயனை தாக்­கிய கும்பல் குராமை தாக்க தொடங்­கி­யுள்­ளனர். இத­னி­டையே கடற்­க­ரையில் தனி­மையில் குராமை நினைத்து அழுது கொண்­டி­ருந்த விக்­டோ­ரி­யா­விடம் வந்த குழு ' ஏன் அழு­கின்­றீர்கள்? ஏதேனும் உதவி தேவையா?' என கேட்­டுள்­ளனர்.

' இது எனது பிரச்­சினை. நீங்கள் தலை­யிட வேண்டாம்' என அவர்­க­ளுக்கு பதி­ல­ளித்­துள்ள விக்­டோ­ரியா திடீ­ரென ஏற்­பட்ட அச்சம் கார­ண­ மாக தனது இரு பாத­ணி­க­ளையும் கையி­லெ­டுத்த வண்ணம் ஹோட்­டலை நோக்கி ஓடி­யுள்ளார்.

எனினும் அப்­போது ஹோட்­டலின் உணவு விடு ­தி­ய­ருகே பெரும் குழப்­ப­க­ர­மான நிலை­மை இருந்­துள்­ளது. இந் நிலையில் திடீ­ரென தாக்­கு­த ­லுக்கு விக்­டோ­ரி­யாவும் உள்­ளா­கி­யுள்ளார். அது ஹோட்­டலின் அருகே உள்ள நீச்சல் தடா­கத்தில் வைத்­தகும். இதனால் தடு­மாறி நீச்சல் தடா­கத்தில் விழுந்த விக்­டோ­ரியா அதில் இருந்து வெளியே வர முடி­யாத வண்ணம் தாக்­கப்­பட்­டுள்ளார். இதனை விட போத்­தல்­களால் வெட்­டப்­பட்­டு­முள்ளார். தன்னை தாக்­கிய சந்­தேக நபர்­களை விக்­டோ­ரியா வழக்கு விசா­ர­ணையின் போது அடை­யா­ளமும் காட்­டினார்.

ஒரு­வாறு நீச்சல் தடா­கத்­தி­லி­ருந்து மீண்­டுள்ள விக்­டோ­ரியா குராம் குராம் என அழைத்தவாறு தனது காத­லனை ஹோட்டல் முழுதும் தேட ஆரம்­பித்­துள்ளார். நீச்சல் தடா­கத்தை அண்­மித்த பகு­தி­யொன்றில் குராம் விழுந்து கிடப்­பதை கண்ட விக்­டோ­ரி­யாவின் கண்­களை அவ­ரா­லேயே நம்ப முடி­யாது போயுள்­ளது. குராம் இரத்த வெள்­ளத்தில் மிதக்க குராமை ஓடிச்­சென்று கட்­டி­ய­ணைத்த விக்­டோ­ரியா ' மை லைப்...மை லைப்..' என கதற ஆரம்­பித்­துள்ளார். இந் நிலையில் இரத்­ததில் தனது காத­லனை கண்ட விக்­டோ­ரி­யா­வுக்கும் சுய நினைவு அற்­றுப்­போ­னது. அவரும் குராமின் இடத்­தி­லேயே தரையில் சாய்ந்தார்.

இதன் பின்னர் விக்­டோ­ரி­யாவின் உள்­ளா­டைகள் உள்­ளிட்­டவை கலை­யப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அவ­ரது மர்ம பிர­தே­சங்­களில் மனித பற்­களின் பதி­வு­களும் காணப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணி­யி­லேயே ஹோட்டல் ஊழி­யர்­கள் அவ்­வி­ரு­வரையும் உட­ன­டி­யாக மாத்­தறை வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்­றனர். அங்கு விக்­டோ­ரி­யா­வுக்கு தலையில் பரிய காயம், இருந்த நிலையில் விஷேட சத்­திர சிகிச்­சையும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எனினும் குராமின் கழுத்­துப்­ப­கு­தியில் பலத்த வெட்­டுக்­கா­யங்கள் இருந்த நிலையில் அவ­ரது மூளைக்­கான இரத்த ஓட்டம் துண்­டிக்­கப்­பட்­டதால் குராம் உயிர் பிழைப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாகிப் போனது.

இதன் பின்­ன­ணி­யி­லேயே பொலிஸார் விசா­ ர­ணை­களை ஆரம்­பிக்­க­ளா­யினர். தங்­காலை பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ரணை உட­ன­டி­யா­கவே குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கைமாற்­றப்­பட்­டது. புல­னாய்வுப் பிரி­வினர் சாட்­சி­யங்­களைத் தேடினர். பலரை விசா­ரணை செய்­தனர். விக்­டோ­ரியா, ஹோட்டல் முகா­மை­யாளர், ஊழி­யர்கள் என பல்­ வேறு நபர்­க­ளிடம் வாக்கு மூலம் பதிவு செய்­தனர். இதனை தொடர்ந்து சந்­தேக நபர்­களை அடை ­யாளம் கண்ட பொலிஸார் அவர்­களை கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் தங்­காலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு அடை­ யாள அணி­வ­குப்பில் அடை­யாளம் காணப்­பட்­டனர். மஜிஸ்­திரேட் விசா­ர­ணை­களும் நிறை­வ­டைய கைது செய்­யப்­பட்­டி­ருந்த 8 சந்­தேக நபர்­களில் இருவர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். எட்டு பேரில் எச்.ரீ. நுவான், எதி­ரி­சூ­ரிய பட்­ட­பெ­திகே நதீர சாமன் ஆகிய இ­ரு­வரும் நிர­ப­ரா­திகள் என விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

பின்னர் சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தனக்­குள்ள விஷேட அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி தங்­காலை மேல் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட வேண்­டிய வழக்கை கொழும்பு மேல் நீதி­மன்­றுக்கு மற்றி ட்ரயல் அட்பார் முறை மூல­மான விசா­ரணை ஒன்றை கோரினார். அது தொடர்பில் ஆறு பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட மா திபர் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி துஷித்த முத­லிகே குற்றப் பத்­தி­ரி­கை­யினை தாக்கல் செய்தார்.

சட்ட மா அதிபர் பாலித்த பெர்னாண்­டோ­ வினால் கொழும்பு மேல் நீதி­மன்­றுக்கு தாக்கல் செய்­யப்­பட்ட குற்­றப்­பத்­தி­ரி­கையில் பிர­தி­வா­தி­க­ ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த லஹிரு கெலும்,சமன் தேசப்­பி­ரிய,முன்னாள் தங்­காலை பிர­தேச சபை தலைவர் சம்பத் சந்­திர புஷ்ப விதான பத்­தி­ரண, பிரகீத் சத்­து­ரங்க, எம்.சரத் அலியஸ்சான் மற்றும் டப்­ளியூ. சத்­து­ரங்க ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக 17 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன. அத்­துடன் சுமர் 83 சாட்­சி­யங்கள் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக உள்­ள­தாக சட்ட மா அதிபர் சார்பில் மன்­றுக்கு தெரி­விக்­கப்பட்டே விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் ட்ரயல் அட் பார் முறை மூலம் கொழும்பு மேல் நீதி­மன்­றினால் விசா­ர­ணைக்கு இந்த வழக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அது சுமார் 33 தடை­வைகள் இந்த வழக்­கா­னது தவணை விசார­ணை­களை சந்தித்­தி­ருந்த நிலை­யி­லேயே சுமார் மூன்­றரை மாதங்­களில் இந்த தீர்ப்பு நீதிவான் ரோஹினி வல்­க­ம­வினால் அறி­விக்­கப்­பட்­டது.

எனினும் சட்­டமா அதிபர் தாக்கல் செய்­துள்ள குற்­றப்­பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள பிரித்­ தா­னிய பிரஜை குராம் ஷேக்கை கொலை செய்­தமை, அவ­ரது காத­லி­யான விக்­டோ­ரியாவை கொலை செய்ய முயற்­சித்­தமை, அவரை கூட்டு பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை, சட்­ட­வி­ரோத குழு­வொன்றின் உறுப்­பி­ன­ராக இருந்­தமை, தங்­காலை த நேச்சர் ஹோட்­ட­லுக்கு ஒரு இலட்­சத்து 60 ஆகியம் ரூபா­வுக்கு சேதம் விளை­வித்­தமை, அந்த ஹோட்­டலில் இருந்த 41 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான மது­பான போத்­தல்­ களை கொள்­ளை­யிட்டு சென்­றமை, அனு­ம­திப்­ பத்­திரம் இன்றி தன்­னி­யக்க துப்­பாக்கி ஒன்றை உடன் வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட 17 குற்­றச்­சாட்­ டுக்­க­ளிலும் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த லஹிரு கெலும்,சமன் தேசப்­பி­ரிய,முன்னாள் தங்­ காலை பிர­தேச சபை தலவர் சம்பத் சந்­திர புஷ்ப விதான பத்­தி­ரண, பிரகீத் சத்­து­ரங்க ஆகி­யோரை குற்­ற­வா­ளி­க­ளாக கண்ட நீதிவான் அவர்­க­ளுக்­குரிய தண்­ட­ணையை அறி­வித்தார்.

ஏனைய இரு பிர­தி­வா­தி­க­ளான 5 ஆவது பிர­தி­வா­தி­யான எம்.சரத் அலியஸ் சான் மற்றும் 6 ஆவது பிர­தி­வா­தி­யான டப்­ளியூ சத்­து­ரங்க ஆகி­யோ­ருக்கு எதி­ரான சாட்­சி­யங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­ததால் அதனை கருத்தில் கொண்டே நீதிவான் அவ்­வி­ரு­வ­ரையும் விடு­தலை செய்தார்.

இது தொடர்­பான தீர்ப்­பா­னது கடந்த வெள்­ளி­யன்று நீதிவான் ரோஹினி வல்­க­ம­வினால் வழங்­கப்­பட்­டது. தீர்ப்­பினை அறி­விக்க முன்னர் திறந்த நீதி­மன்றில் நீதிவான் ரோஹினி வல்­கம விஷேட கருத்­துக்கள் சில­ வற்றை தெரி­வித்தார். அதில் ­இந்த வழக்கில் வழ­மையை விட தான் அதிக சவால்­களை எதிர்­கொண்­ட­தாக குரிப்­பிட்டார். அத்­துடன் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வழக்கை சிறப்பு வழக்­காக தான் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்­ட­தாக சுட்­டிக்­காட்­டிய நீதிவான் ரோஹினி வல்­கம, மூன்­றரை மாதங்­க­ளாக தனி­யாக இந்த வழக்கை விசா­ரணை செய்­த­தாக குறிப்­பிட்டார். ஏனைய வழக்­கு­களைப் போலல்­லாது சிறப்பு இடம் வழங்­கப்­பட்டு தனி­யாக ட்ரயல் அட்பார் மூலம் இந்த விசா­ர­ணை­களை நிறைவு செய்யத்தான் தன்னை அர்ப்­பணம் செய்­த ­தா­கவும் அவர் இதன் போது சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் முறைப்­பாட்­டா­ளர்கள் மற்றும் பிர­தி­வா­திகள் சார்ப்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­ க­ளுக்கும் நீதிவான் நன்றி தெரி­வித்தார். அதற்கு மேல­தி­க­மாக சாட்சிப் பட்­டி­யலை தயா­ரித்­த­வர்கள் மற்றும் வழக்கை விசா­ரணை செய்து முடிக்க உத­ வி­ய­வர்கள் என அனை­வ­ருக்கும் நீதிவான் நன்றி தெரி­வித்தார்.

இந்த வழக்­கினை தனது கடமை என்­ப­தை­ விட கடவுள் அளித்த பொறுப்பு என எண்­ணியே முன்­னெ­டுத்­த­தாக நீதிவான் ரோஹினி வல்­கம சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் ஊட­கங்கள் வாயி­லா ­கவும் மேலும் பல வகை­க­ளிலும் இந்த வழக்கு தொடர்பில் பல்­வேறு வித­மான செய்­திகள் பரப்­பப் பட்டு வந்த நிலையில் அது எத­னையும் கருத்தில் கொள்­ளாது பார­பட்சம் இன்றி தீர்ப்பு வழங்க வேண்டும் என்­பதில் தான் கவ­ன­மாக இருந்­ த­தா­கவும் தனது தீர்ப்­பினை கேள்­விக்கு உட்­ப­ டுத்தி மேன் முறை­யீடு செய்­வ­தாயின் அவ்­வாறு செய்வோர் தமது மன­சாட்­சியை தட்டிக் கேட்கும் படியும் குறிப்­பிட்டார்.

இதனை தொடர்ந்து தீர்ப்­பிணை அறி­வித்த நீதிவான் பின்­வ­ரு­மாறு தண்­ட­னையை அறி­ வித்தார்.

1- முத­லா­வது குற்­றச்­சாட்­டான ரயன் அக­லங்­கவை தாக்­கி­யமை மற்றும் சட்­ட­வி­ரோத கூட்டம் தொடர்பில் தண்­டனை சட்­டக்­கோ­வையின் 140 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட பிர­தி­வா­தி­க­ளுக்கு 6 மாத கடூ­ழிய சிறை.

2- குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் முதல் குற்றச் சாட்டில் குறிப்­பிட்ட சட்ட விரோத குழுவில் அங்­கத்­த­வ­ரக இருந்த தென­கம விதா­ரண ரயன் அக­லங்­க­ர­வுக்கு பொல்­லுகள், உடைந்த போத்­தல்கள்,கதிரை, சீமெந்து கட்­டைகள், ரீ 56 துப்­பாக்கி மற்றும் கை, கால்­களால் கடு­மை­யான தாக்­குதல் நடத்­தி­யமை மற்றும் பொது இடத்தில் சட்ட விரோத கூட்டம் சேர்த்து இவ்­வா­றான குற்றச் செயல்­களை செய்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளான பிர­தி­வா­தி­க­ளுக்கு தண்­டனை சட்டக் கோவையின் 146 ஆவது அத்­தி­யா­யத்தின் 317 ஆவது விதப்­பு­ரைக்கு அமைய 2 வருட கடூ­ழிய சிறை

3- குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் குராம் சமான் ஷேய்க்கை கொலை செய்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளான பிர­தி­வா­தி­க­ளுக்கு தண்­டனை சட்டக் கோவையின் 146 ஆவது அத்­தி­யா­யத்தின் 296 ஆவது விதப்­பு­ரைக்கு அமைய 20 வருட கடூ­ழிய சிறை

4- குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் விக்­டோ­ரியா அலெக்ஸ்­சான்­ரா­னோவை கதிரை, பொல்­லு­க­ளாலும் தீ பந்­தத்­தி­னாலும் மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் படி­யான தாக்­கு­தலை மேற்­கொண்­டமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட பிர­தி­வா­தி­க­ளுக்கு தண்­டனை சட்­டக்­கோ­வையின் 146 ஆவது அத்­தி­யா­யத்தின் 300 ஆவது விதப்­பு­ரைக்கு அமைய 10 வருட கடூ­ழிய சிறை.

5- ரயன் அக­லங்­க­வுக்கு தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் செய்த குற்றச் செயல் தண்­டனை சட்­டக்­கோ­வையின் 32 ஆவது அத்­தி­யா­யத்தின் 317 ஆவது விதப்­பு­ரைக்கு அமைய குற்றச் செய­லாகும். அது தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட பிர­தி­வா­தி­க­ளுக்கு தலா 2 வருட கடூ­ழிய சிறை.

6- குராம் ஷேய்க்கை கொலை செய்­தமை தொடர்பில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்ட பிர­தி­வா­திகள் தண்­டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்­தி­யா­யத்தின் 296 ஆவது விதப்­பு­ரையின் கீழும் குற்­ற­மி­ழைத்­த­வர்­க­ளாவர். எனவே அதன் கீழ் 20 வருட கடூ­ழிய சிறை தண்­டனை.

7- அத்­துடன் விக்­டோ­ரி­யாவை மர­ணத்தை ஏற்­ப­டுத்த வல்ல முறையில் தாக்­கி­யமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்­தி­யா­யத்தின் 300 ஆவது விதப்­பு­ரையின் கீழ் குற்­ற­வா­ளி­க­ளான சந்­தேக நபர்­க­ளுக்கு தலா ஒரு வருட சிறை

8- முத­லா­வது பிர­தி­வாதி விக்­டோ­ரி­யாவை தாக்­கி­யமை உறு­தி­யா­கிய நிலையில் அவ­ருடன் இணைந்து 2,3,4 ஆவது பிர­தி­வா­திகள் கூட்­டாக சேர்ந்து விக்­டோ­ரி­யாவை பாலியல் ரீதி­யாக துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­மை­யா­னது தண்­டனை கோவை சட்­டத்தின் 364 (2) (உ) அத்­தி­யா­யத்தின் கீழ் தண்­ட­ணைக்­கு­ரிய குற்­ற­மாகும். இதனால் அந்த குற்­றச்­சாட்­டுக்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 20 வருட கடூழிய சிறை மற்றும் 20 ஆயிரம் ரூபா அபராதம். அத்துடன் தலா 2 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க வேண்டும்.

(இது தொடர்பில் பிரதிவாதிகளுக்கு தனித்தனியாக தண்டனை அறிவிக்கப்பட்டது.)

9- தங்காலை த நேச்சர் ஹோட்டலுக்கு 160255 ரூபா சொத்து சேதத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் தண்டனை சட்டக்கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 410 ஆவது விதந்துரைக்கு அமைய குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா ஒரு வருடம் கடூழிய சிறை.

10- குறித்த நேரத்தில் த நேச்சர் ஹோட்டலுக்கு சொந்தமான 41526.80 ரூபா பெறுமதியான மது போத்தல்களை கொள்ளையிட்டமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 32 ஆவது அத்தியாயத்தின் 383 ஆவது விதப்புரையின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 5 வருட கடூழிய சிறை.

11- தன்னியக்க துப்பாக்கியொன்றை அனுமதியின்றி வைத்திருந்த குற்றத்திற்காக 1996 ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க திருத்தப்பட்ட துப்பாக்கிச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்ட பிரதிவாதிகளுக்கு தலா 10 வருட கடூழிய சிறை.

இவ்வாறு தீர்ப்பை அறிவித்த நீதிவான் குற்றவாளிகளான பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட 107 வருடங்களும் 6 மாதங்களுமான கடூழிய சிறை தண்டனையை 20 வருடங்களில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பும் பிரித்தானியாவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள நிலையில் தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்யப் போவதாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

இந் நிலையில் உலகமே எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட்டு தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக