அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

கழுத்தில் படரும் கரு­மைக்கு......

பெண்கள் எப்­போதும் தங்கள் முகத்தை பற்றி மட்­டுமே அக்­கறை கொள்­வ­துண்டு. முகத்தை பள­ப­ளப்­பாக்க என்­ னென்ன செய்ய வேண்­டுமோ அதை மட்­டுமே செய்வர் , அதற்­காக எவ்­வ­ளவு பணத்தை செலவு செய்­யவும் தயங்­கு­வ­தில்லை . ஆனால் உடம்பின் ஏனைய பகு­திகள் பளபளப்­பின்­றியும் மெரு­கின்­றியும் காணப்­பட்டால் முகம் என்­னதான் பள பளப்­பாக இருந்­தாலும் எடு­ப­டு­வ­தில்லை . அதனால் முகத்தை போலவே கழுத்­தையும் அக்­க­றை­யுடன் பரா­ம­ரிக்க வேண்டும்.



*சில­ருக்கு கழுத்து பகுதி கறுத்து காணப்­படும். இந்த கரு­மையை நீக்க இயற்கை பிளீச்­சாக எலு­மிச்சை பயன்­ப­டு­கி­றது. தினமும் குளிப்­ப­தற்கு அரை மணி நேரம் முன்பு எலு­மிச்சை சாறை கழுத்தில் கரு­மை­யான பகு­தி­களில் தடவி ஊற­விட்டு குளிக்க வேண்டும். இதனால் படிப்­ப­டி­யாக கருமை மறையும்.

*பால் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்­துக்­கொள்­ளவும். இதை தேன், எலு­மிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல கலக்­கவும். இந்த கல­வையை கழுத்தில் தடவி அரை மணி நேரம் ஊற­விட்டு வெது­வெ­துப்­பான நீரில் கழுவி வரவும். வாரம் ஒரு­முறை இதுபோல் செய்தால் கழுத்து பள­ப­ளக்கும்.

தயிர், தக்­காளி ஜூஸ் அல்­லது மஞ்­சள்தூள், கறி­வேப்­பிலை, எலு­மிச்சை சாறு சேர்த்து அரைத்து பூசலாம். கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து பூசலாம். பின்னர் வெது­வெ­துப்­பான தண்­ணீரில் கழுவ வேண்டும்.

*செம்­ப­ருத்தி பூ, ஆவாரம் பூ, மஞ்சள் கரி­ச­லாங்­கண்ணி, அவரி இலை போன்­ற­வற்றை தினமும் சாப்­பிட்டு வந்தால் உடல் நிறம் கூடும்.

*குங்­கு­மப்பூ, வால்­மி­ளகு, லவங்கம், ஓமம், சாம்­பி­ராணி தலா 25 கிராம் எடுத்து பொடி­செய்து வைத்துக் கொள்­ளவும். இதில் அரை ஸ்பூன் எடுத்து சில சொட்டு பால் விட்டு கலந்து முகம், கழுத்தில் பூசிவர சிகப்பழகு கூடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக