அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

எழுபது நாடுகளில் 30 கோடி வேடுவர்கள்

இன்று எழு­பது நாடு­களில் முப்­பது கோடி வேடுவர் வசிக்­கின்­றனர். இது மொத்த சனத்­தொ­கையில் நான்கு சத­வீ­த­மாகும். உலகில் வாழும் அனைத்து ஆதி­வா­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் இன்று பெரும் அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு நிற்­கி­றார்கள்.



நக­ரங்­களின் விரி­வாக்கம் ஆதி­வா­சி­க­ளது வாழ்­வா­தா­ரங்­களும் அவர்­க­ளது வாழ்க்கை முறையும் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது மற்றும் ஆதி­வா­சி­களின் புதிய தலை­முறை நவீன வாழ்க்­கை­யினை விரும்­பு­வது ஆகி­ய­வற்றின் விளை­வாக ஆதி­வா­சி­களின் எண்­ணிக்கை வெகு­வாகக் குறைந்து வரு­கி­றது. உலக ஆதி­வா­சிகள் தினம் ஆகஸ்ட் ஒன்­பதாம் திகதி என ஐக்­கிய நாடுகள் சபை 1994 ஆம் ஆண்டு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. உலகில் வாழும் பல்­வே­று­பட்ட ஆதி­வா­சிகள் மற்றும் அவர்­க­ளது பிரச்­சி­னைகள் தொடர்­பிலும் அவர்கள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் உலக ஆதி­வா­சிகள் தினம் International Day of The World's Indigenous Peoples பெரிதும் துணை­நிற்கும்.

வேடுவர் எனப்­ப­டுவோர் காடு­களில் வேட்­டை­யாடி வாழும் வாழ்க்­கையை பழக்­க­மாகக் கொண்டு வாழும் மனி­தர்­க­ளாவர். இலங்கையின் பழங்குடி மக்களான இவர்கள் ஆரி­யரின் வரு­கைக்கு முன்­ன­ரே, இலங்­கையின் வர­லாற்றுக் காலம் முதல் வசிப்­ப­வர்கள் என்­றும், இவர்கள் தென்­னிந்­திய பழங்­குடி மர­பி­ன­ருடன் ஒத்த தன்மை கொண்­ட­வர்கள் என்றும் வர­லாற்று ஆய்­வாளர் வில்ஹெய்ம் கெய்கர் தெரி­வித்­துள்ளார்.

சாதா­ரண மனி­தர்­களின் வாழ்க்­கைக்கு பண்­ப­டா­த­வர்­க­ளா­க காணப்பட்டாலும், அண்மைக் காலமாக சாதா­ரண மனி­த­வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்­றிக்­கொண்டு, ஏனைய சமு­தா­யத்­தி­னரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வரு­கின்­றனர். இருப்­பினும் தற்­போதும் காட்டு வாழ்க்­கைக்கே பழக்­கப்­பட்­ட­வர்­க­ளாக வேடு­வ­ராக வாழ்­வோரும் உள்­ளனர்.

அம்­பாறை மாவட்­டத்தின் போல்­லே­பெட்ட மற்றும் ஹென­னி­க­ல, பதுளை மாவட்­டத்­தின் தம்­பனை, பொல­ந­றுவை மாவட்­டத்தின் டலு­கன மற்றும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வாகரை ஆகிய பகு­தி­களில் இலங்கையின் வேடுவர் சமூ­கத்­த­வர்கள் வாழ்ந்து வரு­கி­றார்கள். சிறு சிறு குழுக்­க­ளாக இணைந்து வாழும் இவர்கள் இன்­னமும் கோட­ரி, அம்­பு, வில் ஆகி­ய­வற்றை வைத்­தி­ருக்­கி­றார்கள். இந்த வேடுவச் சமூ­கத்­த­வர்­களில் குறிப்­பிட்ட சிலர் மாத்­திரம் வெளியே வந்து ஏனைய மக்­க­ளுடன் கலந்து வாழ்­வ­தோடு உயர் கல்­வி­யினை தொட­ரு­கின்­ற­ போ­தும், ஏனை­ய­வர்கள் தங்­க­ளது கலாச்­சார ரீதி­யி­லான வழ­மை­க­ளைப் பின்­பற்றி வாழவே விரும்­பு­கி­றார்கள்.

எவ்­வா­றி­ருப்­பி­னும், இலங்­கை­யி­னது வேடுவர் சமூ­கத்­தி­னது தொகை பெரிதும் குறை­வ­டைந்து வரு­கி­றது. 1921ஆம் ஆண்டு 45,010 ஆக இருந்த இவர்­க­ளது தொகை 1946ஆம் ஆண்டு 2,361ஆகக் குறைந்­தி­ருந்­தது. வேடு­வரின் உத்­தி­யோ­க­பூர்வ கிரா­ம­மாக மகி­யங்­கனைப் பிர­தே­சத்தின் தம்­பனை கிராமம் காணப்­ப­டு­கி­றது. தம்­ப­னையில் சுமார் 350 வேடுவக் குடும்­பங்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். இவர்­களின் தற்­போ­தைய பிர­தான தொழில் விவ­சா­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது. மேலும் சிலர் படித்­து, தொழில் புரி­கின்­றனர்.

ஆதி­வா­சிகள் வசிக்கும் கிரா­மங்­க­ளுக்கு நீர்­வ­ச­தி­யினைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­து, அவர்­க­ளது சிற்­ப­ வே­லைப்­பா­டு­களைச் சேக­ரித்து அவற்றைப் பாது­காத்­தல், இவர்­க­ளது கலாச்­சார நிகழ்­வுகளை ஊக்­கு­வித்­தல், ஆதி­வா­சி­க­ளது உணவுப் பழக்­கங்கள் மற்றும் ஆயூள்­வேத சிகிச்­சை­மு­றைகள் தொடர்­பான இளந்­த­லை­மு­றை­யி­ன­ருக்குக் கற்­பிப்­ப­தோடு இது­ தொ­டர்­பான புத்­த­கங்­களைத் தயா­ரித்து ஆவ­ணப்­ப­டுத்­துதல் மற்றும் இலங்­கை­யி­னது ஆதி­வா­சி­களின் வர­லாறு தொடர்­பான அனைத்துச் சான்­று­க­ளையும் கொண்­டி­ருக்கும் நூத­ன­சா­லை­யினை அமைக்கும் திட்­டங்­களும் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஆதி­வா­சி­க­ளது மொழி மற்றும் அவர்­க­ளது வாழ்க்கை முறை ஆகி­யன தொடர்பில் இவர்­க­ளது இளம்­த­லை­மு­றை­யி­ன­ருக்குக் கற்­பிக்கும் வகையில் பழங்­கு­டி­யின பாட­சாலை மகி­யங்­கனைப் பிர­தே­சத்தின் தம்­பனை பகு­தியில் காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்­களில் மட்­டு­மன்றி பின்­னரும் தொடர்ந்து இன்­று­வரை தங்கள் வாழ்க்கை முறை­யை­யும், அடை­யா­ளத்­தையும் பேணிக்­கொள்­வ­தற்குப் பெரும் இடர்­களை எதிர்­கொண்டு வரு­கி­றார்கள். முக்­கி­ய­மாக நாடு விடு­தலை பெற்­ற­பின்­னர், அர­சாங்கம் முன்­னெ­டுத்த நீர்ப்­பா­சன மற்றும் குடி­யேற்றத் திட்­டங்கள் இவர்­க­ளு­டைய வாழ்­நி­லங்­களில் பெரும்­ப­கு­தியை விழுங்­கி­விட்­டன. 20 ஆம் நூற்­றாண்டின் நாற்­ப­து­களின் இறு­தியில் நிறை­வேற்­றப்­பட்ட கல்­லோயா அபி­வி­ருத்தித் திட்டம் இவர்­க­ளு­டைய வேட்­டைக்கும் உணவு சேக­ரிப்­புக்கும் உரிய பெரு­ம­ளவு காட்­டுப்­ப­கு­தி­களை அழித்­து­விட்­டன.

சமு­தா­யத்­தினால் ஒதுக்­கப்­பட்­டு, அந்­தஸ்து இழந்து காணப்­பட்ட வேடு­வர்­க­ளுக்கு அந்­தஸ்­த­ளித்த இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தி­களில் ஒரு­வ­ரான ரண­சிங்க பிரே­ம­தா­சாவின் ஆட்­சியின் போது பெரு­ம­ள­வான வேடு­வர்­களைச் சாதா­ரண குடி­மக்­க­ளாக மாற்றி அவர்­க­ளுக்கு குடி­யுரிமை தகு­தி­க­ளையும் வழங்­கினார்.

காலப் போக்கில் காடு­களின் அளவு நாக­ரீகம் என்ற பெயரில் குறை­வ­டைய ஆரம்­பித்ததை அடுத்து வேடுவ சமூ­கத்­தினர் கிரா­மத்து மக்­களைப் போன்று தங்கள் வாழ்க்­கையை மாற்றி அமைத்துக் கொண்­டார்கள். அவர்கள் மரங்­க­ளை­யும், மரக்­குற்­றி­க­ளை­யும், பல­கை­கள், களிமண் போன்­ற­வற்றைப் பயன்­ப­டுத்தி சிறு வீடு­களை அமைத்துக் கொண்­டார்கள். இலுக் மற்றும் மனா என்ற புல் இனத்தைப் பயன்­ப­டுத்தி இவர்கள் அந்த வீடு­களின் கூரை­களை அமைத்­தார்கள்.

கடல் வேடு­வர்­களின் பழைய வீடுகள் குட்­டை­யாக தென்னம் ஓலை­க­ளி­னாலும் காட்டுப் புல்­லி­னாலும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

அந்த வீடு­களில் ஒரு சில சமையல் பாத்­தி­ரங்­க­ளும், ஒரு பாயும், மீன் பிடிப்­ப­தற்­கான சில வலை மற்றும் தூண்டில் மாத்­தி­ரமே இருந்­தன. அவர்கள் தங்கள் வீடு­களை அடுத்­துள்ள களை­களை அகற்­றி­விட்டு சோளம், மஞ்சள் பூச­ணிக்காய் போன்ற காய்­க­றி­களை செய்கை பண்­ணி­னார்கள். இவை இல­குவில் வள­ரக்­கூ­டிய காய்­க­றிகள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

வேடு­வர்கள் அன்று நோய்­வாய்ப்­பட்டு, காய­ம­டைந்­த, வயிற்றில் குட்­டி­களை வைத்­தி­ருக்கும் மிரு­கங்­களை வேட்­டை­யா­டு­வதே இல்லை. தண்ணீர் குடிக்கும் மிரு­கங்­க­ளையோ அல்­லது குட்­டி­க­ளுக்கு பாலூட்டும் மிரு­கங்­க­ளையோ அவர்கள் கொல்­வ­தில்லை.

காடு­களில் உள்ள மருந்து மூலி­கை­களை சேக­ரித்­து, பாரம்­ப­ரிய மருந்து வகை­களை தயா­ரித்­தல், கைப்­பணிப் பொருட்­கள், மிரு­கங்­களின் எலும்­பு­கள், கற்கள் மற்றும் மரங்­களின் இலை, குழை­களை பயன்­ப­டுத்தி பொருட்­களை தயா­ரிப்­பது வேடுவ சமூ­கத்தின் முக்­கிய வாழ்­வா­தா­ர­மா­க இருந்து வரு­கின்­றது. கிழக்­கி­லுள்ள வேடு­வர்கள் மீன்­பி­டி, விவ­சா­யம், குள­வி­களின் தேன் பாணியை சேக­ரித்தல் போன்ற பல­த­ரப்­பட்ட தொழில்­களில் ஈடு­ப­டு­கி­றார்கள்.

இவர்கள் ஆரம்ப காலத்தில் காடு­களில் உணவை தேடி­ய­லையும் மனி­தர்­க­ளாக விளங்­கி­னார்கள். கடந்த 50 ஆண்டு காலத்தில் வேடு­வர்­களின் வாழ்க்கை மாறி­விட்­டது. இவர்­களை காடு­களில் இருந்து வெளி­யேற்றி கிரா­மங்­களில் குடி­ய­மர்த்­தி­யதும் பிர­தான கார­ண­மாகும். அவர்­களின் பாரம்­ப­ரிய வாழ்க்கை முறை தவிடு பொடி­யா­வ­தற்கும் இது­வொரு முக்­கிய கார­ணி­யாகும். இதனால் அவர்­களின் பாரம்­ப­ரி­ய­மான வாழ்க்கை முறை பெரும் பாதிப்­பிற்­குள்­ளா­கி­யது.

கிரா­மங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்ட இவர்கள் பாரம்­ப­ரி­ய­மாக வேட்டையாடி உணவைத் தேடும் வாழ்வாதா­ரத்தை இழந்­து, அவர்கள் சமூ­கத்தின் ஏனை­யோ­ருடன் ஒன்­றாகக் கலந்­து­கொள்ள வேண்­டிய ஒரு பெரும் சவா­லையும் எதிர்­நோக்­கியுள்ளனர். இந்த நிலை இலங்­கையின் மத்தியிலுள்ள வேடு­வர்­க­ளை­யும், கரை­யோரத்தில் உள்ள வேடு­வர்­க­ளையும் பெரிதும் பாதித்­தன. சிங்­கள மற்றும் தமிழ் பாரம்­ப­ரிய கலா­சா­ரத்தின் செல்­வாக்கும் இந்த ஆதிக்­கு­டி­களின் வாழ்க்­கையில் மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு ஒரு வலு­வான செல்­வாக்­காக மாறி­யது.

இலங்­கையின் ஆதி­வா­சி­களின் மத்­தியில் வாரிக சபா என்ற அமைப்பு இருந்து வரு­கின்­றது. இந்த அமைப்புக்களின் மூலமே தங்களது பிரச்சினைகளை கலந்தாலோ சித்து தீர்மானங்களை எடுப்பர்.

இது போன்று இப்­போது இலங்­கையில் உள்ள வேடுவர் சமூ­கத்­தினர் வருடம் ஒரு தடவை ஒன்­றி­ணைந்து தங்கள் தலைவர் ஊர், குலத்தைச் சேர்ந்த தலை­மையில் வாரிக சபா கலந்­து­ரை­யாடல் மூலம் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வார்கள். கடந்த பல ஆண்­டு­க­ளாக இந்த ஒன்­று­கூடல் தம்­பனையில் நடை­பெற்­றது. தற்­போது கிடைத்­துள்ள தகவல்களின்­படி இலங்­கையில் உள்ள ஆதிவாசி­களின் பெரு­ம­ளவு எண்­ணிக்­கை­யினர் இன்று கிழக்கு மாகா­ணத்தில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். ஆதி­வா­சிகள் எங்­க­ளது வர­லாறும் மர­பு­ரி­மையும் ஆகும். அவர்­க­ளையும் அவர்­க­ளது வாழ்க்கை முறை­யி­னையும் பேணிக்­காப்­பது எங்கள் அனை­வ­ரதும் கட­மை­யாகும்.

நிஷாயா இக்பால் – பாணந்துறை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக