அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தேங்காய் பொடி சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு


தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

அரைப்பதற்கு...

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தும், சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்பு அத்துடன் சாதம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கி, 15 நிமிடம் மூடி வைத்து பின் பரிமாறினால், சுவையான தேங்காய் பொடி சாதம் ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக