அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சிம்பிளான... தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

சாதம் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
முந்திரி - 5
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் சாதம் ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக