அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

உருளைக்கிழங்கு கிச்சடி

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
பட்டாணி - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
கல் உப்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 21/2-3 கப்



செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், சீரகம், ஏலக்காய், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் அரிசியைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும், குக்கரை மூடி தீயை குறைத்து, 2-3 விசில் விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு கிச்சடி ரெடி!!!
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக