அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில், அனுப்பிய மெயிலை திரும்பப் பெற

1. உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்ட் தளத்தில் நுழையவும். கிடைத்தவுடன், உங்கள் திரையில் வலது மூலையில் மேலாகக் காணப்படும் ஐகான் அருகே செல்லவும். அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், 'Settings' என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.



2. மீண்டும் திரையில் வலது பக்க மூலையில் உள்ள 'Labs' என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

3. இப்போது கிடைக்கும் விண்டோவில், கீழாகச் செல்லவும்.

4. இங்கு “Undo Send” என்ற ஆப்ஷன் கிடைக்கும் வரை செல்லவும். இதனை இயக்கும் வகையில் enable செய்திடவும்.

5. தொடர்ந்து திரையின் கீழாகச் சென்று 'Save Changes' என்பதில் கிளிக் செய்திடவும்.

இனி, நீங்கள் ஜிமெயில் தளத்தில், மின் அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், மேலாக, “Your message has been sent” என்பதன் அருகே, Hit 'Undo' to recall your email என்று ஒரு செய்தி கிடைக்கும்.

10 விநாடிகளுக்குள், இந்த இடத்தில் கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்பட மாட்டாது.

இந்த கால நேரத்தை அதிகப்படுத்த விரும்பினால், மீண்டும் 'Settings' சென்று, அங்கு General ஆப்ஷனில் “Enable Undo Send” ஆப்ஷன்ஸ் பகுதியில், இந்த நேரத்தினை 30 விநாடிகள் வரை நீட்டிக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக