பெற்றோர்களே, இது உங்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும். சிறுவர்கள் சிறுநீர் கழிக்கும் போது, இந்த அவலம் உங்கள் பிள்ளைகளுக்கும் ஏற்படலாம்!
விளையாட்டுத்தனம் மாறாத சிறுவர்களை பிளே ஸ்கூல், கின்டர் கார்டன் பள்ளிகளில் சேர்த்து அவர்களை அவஸ்தைக்குள்ளாக்குவது ஒருபுறமிருக்க, சிறுவர்களின் சீருடையிலுள்ள ஸிப் ஓர் ஆபத்தான விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கோவை நகரின் பெயர் பெற்ற தனியார் பாடசாலை அது. சில நாட்களுக்கு முன் மதிய உணவு இடைவேளையின் போது, கின்டர் கார்டன் குழந்தைகள் வகுப்பிலிருந்து பெரும் அலறல். ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ந்து போய் அங்கே ஓட, காற்சட்டையில் இருந்து இரத்தம் வழிய யு.கே.ஜி மாணவன் தரையில் புரண்டு கதறிக் கொண்டிருந்தான். அவனைத் தூக்கிப் பார்த்த போது தான் தெரிந்தது, காற்சட்டை ஸிப்பில் சிக்கியிருக்கும் விடயம். சிறுநீர் கழித்து விட்டு சிறுவன் ஸிப்பை இழுத்த வேகத்தில் மென்மையான தோல் பகுதியில் ஸிப்பின் இரண்டு அடுக்குகள் சரசரவென ஏறியிருக்கின்றன. விவரமறியாத சிறுவன் பயத்தில் மேலும் வலுவாக இழுத்ததில் இன்னமும் ரணமாகியிருக்கிறது. உடனே அவனைப் பாடசாலை வாகனத்தில் கொண்டுபோய் ஆஸ்ப்பத்திரியில் சேர்த்து ஒரு சத்திரசிகிச்சைக்குப் பிறகு ஸிப்பை பிரித்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் கோவை, பல்லடம், திருப்பூர், நீலகிரி, ஈரோடு சுற்று வட்டாரத்தில் இதுபோல் எட்டுச் சம்பவங்கள் நடந்திருகின்றன. கோவையில் நடந்த இன்னொரு சம்பவத்தில் சிக்கிய ஸிப்பை எடுக்க முயற்சிக்காமல் வலியில் முனங்கிக்கொண்டே சில மணிநேரங்களை கழித்ததன் விளைவாக அவனது சிறுநீர் உறுப்பின் முன்பகுதி வீங்கிச் சொல்ல முடியாத அவதிக்குள்ளாகியிருக்கிறான்.
இந்த விவகாரத்தை வைத்து பொதுநல வழக்குப் போடத் தயாராகி வருகின்றார் கோவை வழக்கறிஞரான லோகநாதன்.
ஆண்குழந்தைகளுக்கு சிறுநீர் உறுப்பு எவ்வளவு சென்சிடிவ் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. சிறுவர்களுக்கு பக்குவமான வயது வரும் வரைக்கும் ஸிப் வைத்த காற்சட்டை, முழுக்காற்சட்டை அணிவிப்பது கூடாது. ஆனால் கணிசமான தனியார் பள்ளிகள் தங்களோட சீருடையில் ஸிப் வைத்துப் தைத்து போடும்படி சொல்வது தான் வேதனை என்கிறார் அவர்.
பாடத்திட்டம், ஸ்கூல் டைமிங், பயிற்சி முறை என்று கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வந்துவிட்டோம். அப்படியிருக்கும் போது, ஆண் குழந்தைகளின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயத்தில் விளையாடக் கூடாது. விதிவிலக்காக சில பள்ளிகள் ஸிப் முறைக்கு தடை விதித்திருப்பது சந்தோசம் தான். ஆனால், சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்கு காரணம் சீருடை காற்சட்டைகள் ஸிப் முறையில் இருந்தது தான். காயப்படும் குழந்தைகள் மனரீதியாகவும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.
இது போல் பாதிக்கப்பட்ட என்னுடைய நண்பரின் மகன் காயம் ஆறிய பிறகும் சிறுநீர் போகவே நடுங்குகிறான். பாடசாலை சீருடையை பார்த்தால் அழுகை, பாடசாலைப் போக பயம் என சிக்கல்கள் தொடர்ந்துகொண்டே போகின்றது எனச் சொல்லி மனதுடைந்து பேசினார்.
பெரிய பள்ளிகளில் ஆயாக்கள் இருந்தாலும் சிறுநீர் கழிக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்களால் உதவி செய்ய முடியாது. ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு ஒரே முற்றப்புள்ளி அரசாங்கம் மருத்துவர்கள் குழு ஒன்றை அமைத்து அவர்கள் பரிந்துரைக்கும் வயது வரைக்கும் ஆண் குழந்தைகளுக்கான சீருடை காற்சட்டையில் ஸிப் முறை இருக்கவே கூடாது என்ற சட்டத்தை கொண்டுவரவேண்டும். அத்தனை தனியார் பள்ளிகளும் அதை பின்பற்ற வேண்டும்.
ஸிப் காற்சட்டை விஷயத்தில் பள்ளிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய அதே நேரத்தில், ஒவ்வொரு பெற்றோரும் தங்களோட ஆண் குழந்தைக்கு குறிப்பிட்ட பருவம் வரை ஸிப் ரக உடைகளை வாங்காமல் இலாஸ்டிக் உடைகள் அணிவித்தல் மிகவும் நல்லது என்றார்.
சிறுவர்கள் சந்திக்கும் இந்தச் சிக்கல் குறித்து சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணரான டாக்டர் சக்திகுமார் கூறும் போது, 'குழந்தைகளுக்கு ஏற்படும் இது போன்ற காயங்களை ஸிப்பர் இன்ஜூரீஸ்னு சொல்லுவொம்.
ஸிப் வைத்த காற்சட்டைகள் உடுத்தும் குட்டிப் பசங்களுக்கு கண்டிப்பா உள்ளாடை போட்டுத்தான் காட்சட்டை போடணும். அப்படியே போட்டு விட்டாலும் கூட சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் உள்ளாடையை இழுத்துவிட்ட பிறகே ஸிப்பை போடவேண்டும் என அவர்களுக்கு தெரிவது இல்லை. இங்கே தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. விளையாட்டுத் தனம், அவசரம், பிரெண்ட்ஸ் கூட ஜாலிப் பேச்சுன்னு சட்டுன்னு ஸிப்பை இழுத்துடுவாங்க. பொதுவா உறுப்பின் தோல் பகுதி சிக்கினால் அத தாங்க முடியாத வேதனையைத் தரும்.
உறுப்பு ஸிப்பில் சிக்கிவிட்டதென்றால் உடனடியாக சிறுநீரக அறுவைச் சிகிச்சை வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு செல்லவேண்டும். அப்படிப்பட்ட வசதி இல்லையென்றால் ஒரு வைத்திய நிபணரிடம் அழைத்துப் போய் தோலிலோ, சதையிலோ வலுவா ஏறியிருந்தா ஸிப்பை லாவகமாக துண்டித்து எடுத்துவிடலாம். நீங்கள் எடுக்க முயற்சி செய்வது, பிடித்து இழுத்தல், அசைத்தல் போன்ற வேலைகளைச் செய்தால் பிரச்சினை மேலும் பெரிதாகலாம்.
பொதுவாக இரண்டாம் வகுப்பு வரை சிறுவர்களுக்கு ஸிப் வடிவிலான சீருடையை தவிர்ப்பது நல்லது. ஸிப்புக்கு பதிலாக பொத்தான், இலாஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆபத்தை உணர்ந்து சில பள்ளிகள் இவ்வாறான முறைகளை மாற்றிவிட்டன. இதை மற்றப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்” என்றார்.
தகவல்: ஷண்பா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக