அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், வரிசையாக இல்லாமல், குறிப்பிட்ட பக்கங்களை மட்டும், பிரிண்ட் செய்திட

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த பக்கங்களை அச்செடுக்க வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். எடுத்துக் காட்டாக, பக்கங்கள் 4,8,10 அச்சடிக்க வேண்டும் என்றால், முதலில் ஒர்க்ஷீட் 4 தேர்ந்தெடுத்து, பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஒர்க்ஷீட் 8, பின் 10 எனத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், நீங்கள் அச்சிடுகையில், இந்த பக்கங்கள் மட்டுமே அச்சாகும்.



இதற்குப் பதிலாக, ஒரே ஒர்க்ஷீட்டில் உள்ள வெவ்வேறு பக்கங்களை அச்செடுக்க வேண்டுமெனில், சற்று சிக்கலான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். இதற்கு ஓர் தீர்வு என்னவென்றால், அச்செடுக்க விரும்பாத பக்கங்களை மறைத்து (hide) வைத்து, பின் மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுப்பதாகும். இன்னொரு எளிய வழியையும் இங்கு தருகிறேன்.

1. ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க்ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும்.

3. இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

5. இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

6. தொடர்ந்து, கண்ட்ரோல் + பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.

7. எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

8. ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக