அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 செப்டம்பர், 2014

யாழ். நகரில் கோர விபத்து, தலை சிதறி வைத்தியர் பலி!

யாழ். கே.கே.எஸ். வீதியில் மிட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் நேற்று மதியம் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ். போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து உள்ளார்.



பின்னால் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை பந்தாடியதிலேயே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வைத்தியர் கோபிநாத் -வயது 30 அநியாயமாக சாக நேர்ந்தது. சடலம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவர் உரும்பிராயைத் சேர்ந்தவர் எனவும் மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமணம் ஆனவர் எனவும் கூறப்படுகிறது. இதேவேளை மோதித் தள்ளிய டிப்பர் சாரதி தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக