அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 செப்டம்பர், 2014

தலைமை ஏற்கும் நேரம் வந்துவிட்டது: விஜய்க்கு ரசிகர்கள் அழைப்பு

தமிழகத்தில் முதல்வர் பதவியில் தற்போது யாரும் இல்லாத நிலையில், இதுதான் தலைமைக்கு தக்க நேரம் என்று விஜய் ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். தலைவா திரைப்படத்தில் Time to lead என்ற சப்-தலைப்பு வைத்திருப்பார்கள். இதனாலேயே அப்போது தலைவா படத்தை ஆளும்கட்சி வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.


இதையடுத்து ஜெயலலிதாவிடம் சமரசமாக சென்று தலைவா படத்தை வெளியிட செய்ய வேண்டியதாயிற்று விஜய்க்கு. படத்தில் பஞ்ச் வசனம் பேசும் விஜய் நடைமுறை வாழ்க்கையில் இவ்வளவு இறங்கி போனதை அவரது ரசிகர்கள் அப்போது அவ்வளவாக ரசிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் தங்களது விஜய் அபிமானத்தை மீண்டும் காண்பிக்க தொடங்கியுள்ளனர். இதற்காக Time to lead ஹேஸ்டேக்குடன் டிவிட்டரில் களமிறங்கியுள்ளனர். அதில் விஜயை போற்றி டிவிட் செய்துவருகின்றனர். யாருக்குமே தெரியாத பன்னீர் செல்வம் முதல்வராகும்போது, விஜய் ஏன் ஆகக்கூடாது என்று ஒரு டிவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஏற்க இதுதான் தக்க தருணம் என்றும் டிவிட் செய்துள்ளனர். ஏற்கனவே கத்தி பட ஆடியோ ரிலீசின்போதும் இதுபோல ஹேஸ்டேக் உருவாக்கி அகில இந்திய அளவில் டிரெண்ட் ஏற்படுத்தி கலக்கினர் இளைய தளபதி ரசிகர்கள். இப்போது மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளனர். விஜயை அரசியலுக்கு இறக்காமல் விடமாட்டார்கள் போல உள்ளது அவரது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக