தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. பொட்டு அம்மான் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியும் என இலங்கையின் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஹொங்கொங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு இலங்கை இராணுவத்தினால் பல மாதங்களாக பொட்டு அம்மான் தேடப்பட்டு வந்ததாகவும் தற்போது ஹொங்கொங் நாட்டில் வைத்து இவரை கைது செய்துள்ளதாகவும் விரைவில் இவர் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளாரெனவும் அவ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் உறுதித்தன்மை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிடம் வினவிய போது நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு
அமைச்சின் பணிப்பாளரும் இராணுவ ஊடகப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவான் வணிக சூரிய இச்செய்தி பொய்யானதென மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;
விடுதலைப்புலிகளுடனான இறுதியுத்தத்தின் போது புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டு விட்டார். இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தரப்பில் இருந்து சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அவர் இறந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல் இவர்களின் எவரும் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை என்பதையும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் பொட்டு அம்மான் ஹொங்கொங் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் எம்மிடம் அவரை ஒப்படைக்கப் போகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளமை எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை. அதேபோல் இவ்வாறான செய்திகளை பரப்பும் சிலர் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவு செய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். சர்வதேசத்தின் தேவைக்காகவும் புலம்பெயர் அமைப்புக்களின் தேவைக்காகவும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
(ஆர்.யசி)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக