அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

சிறுவனின் கண்களை கரண்டியால் தோண்டியெடுத்த தாய்க்கும் உறவினர்களுக்கும் 30 வருட சிறை

உலகம் அழி­வ­டை­வது தொடர்­பில் சாத்­தா­னை திருப்திபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மதச்­ச­டங்­கொன்றின் போது, தனது 5 வயது மகனின் கண்­களை கரண்­டி­யொன்றால் தோண்­டி­யெ­டுத்த தாயொ­ரு­வ­ருக்கும் அவ­ரது 5 உற­வி­னர்­க­ளுக்கும் மெக்­ஸிக்கோ நீதி­மன்­ற­மொன்று தலா 30 வருட சிறைத்­தண்டை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



நெஸ­ஹுவல்­கொ­யொடல் நகரைச் சேர்ந்த பெர்­னாண்டோ கலெப் அல்­வ­ரடோ றியொஸ் என்ற சிறு­வனே தனது சொந்த தாயா­ரான மரி­யோடல் கார்மென் கார்­சியா றியொஸ்ஸால் கண்­களை இழந்­துள்ளான்.

சிறு­வனின் கண்­களை தோண்டி எடுப்­ப­தற்கு அவ­னது தாய்க்கு அவனது இரு மாமன்மார், தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் உத­வி­யுள்­ளனர்.

இச்­ச­டங்­கா­னது சாத்­தானை தமக்கு நெருக்கமாக்கி தம்மை பாரிய பூமி­ய­திர்ச்­சி­யொன்­றி­லி­ருந்து பாது­காக்கும் என சிறு­வனின் குடும்­பத்­தினர் நம்­பி­ய­தாக கூறப்­ப­டு­கின்­றது.

சிறு­வனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அய­ல­வர்கள், சிறுவனின் தாயையும் உறவினர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக