அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 டிசம்பர், 2014

தற்கொலைக் குண்டுதாரியாக பயன்படுத்த என்னை எனது பெற்றோர் போராளிகளிடம் கையளித்தனர் -13 வயது நைஜீரிய சிறுமி

நைஜீ­ரி­யாவில் தற்­கொலை மேலங்­கியை அணிந்த நிலையில் கைதுசெய்­யப்­பட்ட 13 வயது சிறு­மி­யொ­ருவர், தனது பெற்றோர் தன்னை தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யாக பயன்­ப­டுத்த போகோ ஹராம் போரா­ளி­க­ளிடம் கைய­ளித்­திருந்த­தாக தெரி­வித்­துள்ளார்.



பொலி­ஸாரின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி கனோ நகரில் ஏனைய இரு சிறு­மி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்­டுத் ­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து ஸஹ்­ராயு பபன்­கிடா என்ற மேற்­படி சிறுமி கைது செய்­யப்­பட்டார்.

வட கனோ மாநி­லத்­தி­லுள்ள கிடான் ஸனா நக­ருக்கு அண்­மையில் மறைந்­தி­ருந்த போரா­ளி­க­ளிடம் தன்னை தனது பெற்றோர் அழைத்துச் சென்­ற­தாக பபன்­கிடா தெரி­வித்தார்.

போராளி குழுத்­ த­லைவர் ஒருவர் தன்­னிடம் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் தெரி­யுமா என வின­வி­ய­தா­கவும் பின்னர் நீ எமக்­காக தாக்­கு­தலை நடத்­து­கி­றாயா எனக் ­கேட்­ட­தா­கவும் தான் அதற்கு மறுப்புத் தெரி­வித்­த­தாகவும் அவர் கூறினார்.

"நீ இதைச் செய்தால் சொர்க்­கத்­துக்கு செல்வாய் என அவர்கள் கூறினர். நான் முடி­யாது என்று தெரி­வித்தேன்" எனக்­ கூ­றிய அவர், அதைச் செய்­யா­விட்டால் தன்னை துப்­பாக்­கியால் சுட்டு இருண்ட நில­வ­றை­யொன்றில் தள்ளி விடப்­போ­வ­தாக அவர்கள் அச்­சு­றுத்­தி­ய­தாக தெரி­வித்தார்.

இறுதியில் அந்தத் தாக்குதலை நடத்தும் நோக்கம் இல்லாமலேயே போராளிகளது கோரிக்கைக்கு தான் இணங்கியதாக அவர் கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக