நைஜீரியாவில் தற்கொலை மேலங்கியை அணிந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட 13 வயது சிறுமியொருவர், தனது பெற்றோர் தன்னை தற்கொலைக் குண்டுதாரியாக பயன்படுத்த போகோ ஹராம் போராளிகளிடம் கையளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி கனோ நகரில் ஏனைய இரு சிறுமிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து ஸஹ்ராயு பபன்கிடா என்ற மேற்படி சிறுமி கைது செய்யப்பட்டார்.
வட கனோ மாநிலத்திலுள்ள கிடான் ஸனா நகருக்கு அண்மையில் மறைந்திருந்த போராளிகளிடம் தன்னை தனது பெற்றோர் அழைத்துச் சென்றதாக பபன்கிடா தெரிவித்தார்.
போராளி குழுத் தலைவர் ஒருவர் தன்னிடம் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் தெரியுமா என வினவியதாகவும் பின்னர் நீ எமக்காக தாக்குதலை நடத்துகிறாயா எனக் கேட்டதாகவும் தான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
"நீ இதைச் செய்தால் சொர்க்கத்துக்கு செல்வாய் என அவர்கள் கூறினர். நான் முடியாது என்று தெரிவித்தேன்" எனக் கூறிய அவர், அதைச் செய்யாவிட்டால் தன்னை துப்பாக்கியால் சுட்டு இருண்ட நிலவறையொன்றில் தள்ளி விடப்போவதாக அவர்கள் அச்சுறுத்தியதாக தெரிவித்தார்.
இறுதியில் அந்தத் தாக்குதலை நடத்தும் நோக்கம் இல்லாமலேயே போராளிகளது கோரிக்கைக்கு தான் இணங்கியதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக