அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஒரு லிட்டருக்கு 480 கிலோமீட்டர் செல்லும் கார்!

பெட்ரோல் விலையை நினைச்சாலே பலருக்கு காரை தினமும் உபயோகிக்க தயக்கம் காட்டும் இந்த காலகட்டத்தில் பல கண்டுபிடிப்புகளை எல்லோரும் செய்து கொண்டிருக்கும் போது அமெரிக்காவின் மிசிகின் மாநிலத்தில் உள்ள பி ஒய் யூ பல்கலைகழ்க ஆராய்ச்சி மாணவர்கள் ஒரு இலகு வகை காரை உருவாக்கியுள்ளனர். இது ஏரோ டைனமிக் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.



இதன் எஞ்சின் நமது தோட்டத்தின் புல்லை சமம் செய்யும் லான் மோவர் என்னும் சிறிய வகை மோட்டார் தான் எஞ்சின். ஒரு லிட்டர் போட்டா இதன் மைலேஜ் எவ்வளவு தெரியுமா சுமார் 480 கிலோமீட்டராம். இதன் சோதனையோட்டம் முடிந்து இப்போது இதை செயல்வடிம் கொடுத்து நமது சாலைகளில் செல்லும் வகையில் தயாரிக்க போகின்றனர். என்ன ஒன்னு இதன் வேகம் 40 கிலோமீட்டர் தான். ஆனாலும் இந்த டிராஃபிக் சூழ் நிலையில் இந்த 40 கிலோமீட்டர் கூட என்னை கேட்டால் மிக அதிகம்.

ஒரு லிட்டருக்கு 480 கிலோமீட்டர் மற்றும் இதன் பராமரிப்பு செலவு என்று ஒன்றும் இல்லாத காரணத்தினால் இது சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் மாற்று கருத்தில்லை. இதெல்லாம் சும்மா சார் பேப்பர் லெவலில் மட்டுமே சாத்தியம்னு சொல்றவங்களுக்கு – இதன் செயல் முறை விளக்க வீடியோ


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக