ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளுக்கு எதிராக போராடி வரும் எதிர் போராளி குழுவொன்றின் சீருடையை அணிந்த 8 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடைய சிறுவன் ஒருவன் வாகனமொன்றில் பொருத்தப்பட்ட ஏவுகணையை ஏவுவதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் இடம்பெறும் வன்முறை மோதல்களில் சிறுவர்கள் எவ்வாறு பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு மேற்படி புகைப்படம் உதாரணமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ். போராளிகளுக்கு எதிரான போராட்டத்தில் சிரிய மற்றும் ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஷியா போராளி குழுவான அஸாயிப் அஹ்ல் அல்– - ஹக் போராளி குழுவின் ஆடையை அணிந்திருந்த சிறுவனே இவ்வாறு ஏவுகணையை இயக்கியுள்ளான்.
இதற்கு முன் ஐ.எஸ். போராளிகளே சிறுவர் படைவீரர்களை மோதல்களில் பயன்படுத்தி வருவதாக நம்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக