அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 டிசம்பர், 2014

இணையப் பயன்பாட்டில் Ping செய்தல் என்றால் என்ன?

என் நண்பர் சேட்(chat) விண்டோவில் தொடர்பு கொள்கையில், அல்லது, மின் அஞ்சலில், தேவைப்பட்டால் தன்னை 'பிங்' செய்திடுமாறு சொல்கிறார். இதன் பொருள் என்ன?

தொழில் நுட்ப ரீதியில் இந்த சொல்லுக்கும், நண்பர்களிடையேயான தொடர்பில் பயன்படுத்தப்படும் பொருளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனை இங்கு காண்போம்.


உங்கள் நண்பர் அவரை ping செய்திடுக என்று கூறுவது, அவரை தொடர்பு கொள்வதுதான்.

எடுத்துக் காட்டாக, பேஸ்புக்கில் நீங்கள் இருவரும் நண்பர்களாகத் தொடர்பு வைத்திருந்தால், சேட் விண்டோவில், அவருடைய பெயருக்கு மெசேஜ் அனுப்பலாம்.

அதே போல ஜிமெயில் அக்கவுண்ட்டினை இருவரும் கொண்டிருந்தால், நீங்கள் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரும் பார்த்துக் கொண்டிருந்தால், ஜிமெயில் விண்டோவில் அவருடைய பெயரைக் கிளிக் செய்து, சேட் விண்டோவில் தொடர்பு கொள்வது அவரை Ping செய்வதாகும்.

செய்தியைப் பெறும் அவரும் உங்களுடன் தொடர்பு கொள்வார்.

தொழில் நுட்ப ரீதியாக, ஓர் இணைய தளத்தினைத் தொடர்பு கொள்வதும் ping செய்வதாகும்.

இது ஒரு கட்டளைச் சொல்லாகப் பயன்படுகிறது. ஓர் இணைய தளம் நமக்கு பிரவுசரில் கிடைக்கவில்லை என்றால், அந்த தளம் சரியாக இயங்கி, நாம் அணுக விரும்பும் கட்டளைய ஏற்று, நமக்குப் பதில் அனுப்புகிறதா என்று அறிய இந்த கட்டளைச் சொல்லைப் பயன்படுத்தலாம்.

நாம் அவ்வாறு அனுப்பும் வேண்டுகோளை Echo Request எனக் கூறுவார்கள்.

அதாவது, நாம் அனுப்பும் வேண்டுகோளுக்கு எதிரொலி போல, ஒரு பதில் தானாக வர வேண்டும். அத்துடன் நாம் அனுப்பி எவ்வளவு நேரத்தில் பதில் வருகிறது போன்ற தகவல்கள் அப்போது கிடைக்கும். ஒன்றுமே தகவல் இல்லை என்றாலும், அதுவும் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக