அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 டிசம்பர், 2014

பொது இடங்களில் வை பி (wifi) இணைப்பு....

இப்போதெல்லாம், விடுதிகள், விமான நிலையங்கள், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், வை பி (Wifi) இணைப்பு கிடைக்கிறது. சில இடங்களில் பாஸ்வேர்ட் இல்லாமலும், மற்ற இடங்களில், பாஸ்வேர்ட் கேட்டு வாங்கிப் போடும் வகையிலும் உள்ளன. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த இணைப்புகளில், நம் சாதனங்களைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினை மேற்கொண்டு, நம் வேலைகளை மேற்கொள்வது பாதுகாப்பான ஒன்றாக இருக்குமா?



மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில், நமக்கு இணையம் வழி முக்கியமான வேலை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் மட்டுமே பயன்படுத்தலாம். இணையத்திலிருந்து தகவல்களைப் பெற, இணைய தளங்களுக்குச் சென்று, நம் சாதனங்களில் பதிந்து கொள்ளலாம்.

நிதி சார்ந்து, வங்கித் தளங்களை அணுகுவது, வர்த்தக இணைய தளங்களில் பொருட்கள் வாங்குவது போன்ற வேலைகளைச் சற்று கவனத்துடன், அந்த நெட்வொர்க் எத்தகையது என்பதனை அறிந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதே நெட்வொர்க்கினை மேலும் பலர் பயன்படுத்திக் கொண்டிருப்பதாலும், அந்த இணைப்பின் பாதுகாப்பு எத்தன்மையது எனத் தெரியாததாலும், நம் தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு.

இது போன்ற சந்தர்ப்பங்களில், முன்பே இப்பகுதியில் கூறியிருந்தபடி, நம் சாதனங்கள் மற்றும் இணைய அக்கவுண்ட்களின் தன்மை கீழ்க்கண்டவாறு இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

1. உங்கள் கம்ப்யூட்டர் அல்லது சாதனத்தினை பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கவும்.

2. உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம், அன்றைய நாள் வரை அப்டேட் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

3. உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் அன்று வரை அப்டேட் செய்திருக்க வேண்டும்.

4. பயர்வால் பாதுகாப்பினை இயக்கவும். விண்டோஸ் சிஸ்டத்தில் ஒரு பயர்வால் டூல் உள்ளது. ஆனால், தர்ட் பார்ட்டி பயர்வால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

5. உங்கள் கம்ப்யூட்டரில் பைல் பகிர்ந்து கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருந்தால், முதலில் அதனை மாற்றி அமைக்கவும்.

பொதுவாக, இது போன்ற பொது இணைய இணைப்புகளில், வங்கி நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாதீர்கள். https:// எனப் பாதுகாக்கப்பட்ட முன்னொட்டு உள்ள முகவரிகளைக் கொண்ட தளங்களை மட்டும் காண்பது நல்லது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக