அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 5 ஜனவரி, 2015

லியோனாடோ டாவின்ஸி ஒரு சிறுகுறிப்பு

லியோனாடோ டாவின்சி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அவர் வரைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியங்களான மோனாலிசா (MONALISA) மற்றும் கடைசி இராப்போசன விருந்து (THE LAST SUPPER) என்பவைகளாகும். அவர் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மட்டுமல்ல புகழ்பெற்ற கட்டடக் கலைஞரும் கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளரும் சிற்பியும் ஆவார்.


ஆக மொத்தமாக அவர் ஒரு பல்துறைக் கலைஞராவார். எத்தனையோ ஓவியங்களை இவர் வரைந்திருந்தாலும் இன்றளவிலும் இவர் வரைந்த மோனா லிசா மற்றும் கடைசி இராப்போசன விருந்து ஓவியங்கள் உலகளாவிய ரீதியில் போற்றிப் புகழப் படுகின்றன. மட்டுமன்றி இவர் உடற்கூற்றியல் வானியல் மற்றும் குடிசார் பொறியியல் போன்ற துறைகளிலும் பெரும் பங்காற்றியுள்ளார். அத்துடன் பல்வேறு வகையான கண்டுபிடிப்புக்களையும் லியோனாடோ அறிமுகப்படுத்திய ஒருவராக இருந்தார்.

அதாவது தொழில்நுட்பவியல் சார்ந்த துறையிலும் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். லியோனாடோ டாவின்சி இத்தாலியிலுள்ள வின்ஸி என்ற இடத்தில் 1452ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் செர்பியரோ டாவின்சி என்பதாகும். தாயாரின் பெயர் கத்தரீனா. லியோனாடோ தனது தந்தையுடன் புளோரன்ஸ் நகரில் வசித்து வந்தார்.

அங்கு ஒரு ஓவியரின் கீழ் ஓவியக்கலை பயின்று வந்தார். அத்துடன் வாழ்நாள் முழுவதும் சைவ உணவுகளையே உட்கொண்டவராகவும் காணப்பட்டார். தொடர்ந்து பல்வேறு ஓவிய நிபுணர்களிடமும் ஓவியக்கலையில் மென்மேலும் பயிற்சி பெற்றார்.

அத்துடன் சிற்பக்கலை உலோக வேலை தச்சுவேலை மற்றும் வேதியல் வரைபு சாந்து வார்ப்பு தோல் வேலை என பல்வேறு துறைகளிலும் திறமை வாய்ந்தவராக காணப்பட்டார்.

1513 முதல் 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அதன் பின்னர் மிலான் நகருக்குச் சென்று தங்கினார்.

1519 இல் பிரான்ஸிலுள்ள குளோக்ஸ் என்ற இடத்தில் லியோனாடோ டாவின்சி காலமானார்.

டாவின்சினுடைய விருப்பப்படி அவரது சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்ட போது இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் 60 பிச்சைக்காரர்கள் தொடர்ந்து சென்றனர். அம்போயிஸ் கோட்டையிலுள்ள சென் ஹியூபெர்ட் சப்பலில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக