அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

BIOS என்பதும் Firmware என்பதும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா?

BIOS என்பது கம்ப்யூட்டர்களுக்கான Firmware. BIOS என்பதை Basic Input/Output System என விரிக்கலாம். இதனை இன்னும் விரிவாகச் சொல்கையில், பல வகைகள் இருப்பதனைக் காணலாம். அவை System BIOS, ROM BIOS, or PC BIOS. கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், அதாவது பூட் செய்கையில், கம்ப்யூட்டரைத் தயாரித்த நிறுவனம் பயன்படுத்தும் அதனுடைய Firmware தான், BIOS. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் உள்ளாக இந்த BIOS Firmware அமைக்கப்படுகிறது.



இந்த பெயர், டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படுவதற்கு முன்னால், பயன்படுத்தப்பட்ட CP/M ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே, 1975 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது.

Firmware என்பது, அழியாமல் இருக்கும் மெமரி, புரோகிராம் குறியீடுகள் மற்றும் அதில் பதியப்படும் சார்ந்த டேட்டா ஆகியவற்றைக் குறிக்கும்.

ட்ராபிக் லைட், நுகர்வோர் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் அல்லது டிஜிட்டல் சாதனங்கள், டிஜிட்டல் கடிகாரங்கள், கம்ப்யூட்டர்கள், கம்ப்யூட்டர் துணை சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்களில் இந்த Firmware அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சாதனங்களில் அமைக்கப்படும் Firmware, இந்த சாதனங்களைக் கட்டுப்படுத்தும் புரோகிராம்களாக அமைகின்றன.

பயாஸ் என்பது, இந்த வகையில், மதர்போர்டுக்கான Firmware ஆகும்.

பழைய கம்ப்யூட்டர்களில் இவை இடம் பெற்றன. இப்போது, நவீன கம்ப்யூட்டர்களில், UEFI or EFI என அழைக்கப்படும் புதிய Firmware இடம் பெற்றுள்ளன.

இரண்டிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாட்டினைக் கூறுவதென்றால், அது ஒரு சாதனத்தைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும், மதர் போர்டில் இயங்கும் Firmware.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக