அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

crdownload என்னும் பெயர் கொண்ட பைல்கள்

நீங்கள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி, பைல்களை, அது ஆடியோ அல்லது வீடியோ என எதுவாக இருந்தாலும், தரவிறக்கம் செய்கையில் முதலில் இந்த துணைப் பெயருடன், பைல் இறங்கத் தொடங்கும்.



தொடர்ந்து தரவிறக்கம் செய்திடுகையில், இந்த பைலின் அளவு பெரிதாகிக் கொண்டு வரும். இறுதியில், தரவிறக்கம் செய்து முடித்தவுடன், இந்த பெயர் மாற்றப்பட்டு, அந்த பைலுக்கான பெயராக இருக்கும்.

எடுத்துக் காட்டாக, நீங்கள் “Song.mp3″ என்ற பைலைத் தரவிறக்கம் செய்திட முயற்சிக்கையில், குரோம் பிரவுசர், “Song.mp3.crdownload” என்ற பெயருடன் தரவிறக்கத்தினைத் தொடங்கும்.

பின்னர், பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும் பணி நடக்கையில், இந்த பைலின் அளவு அதிகரிக்கும்.

முடிந்தவுடன் பைலின் பெயர் “Song.mp3 என்று மாற்றப்பட்டு முழுமையாக இருக்கும்.

இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் டவுண்லோட் செய்வதனைப் பாதியிலேயே விட்டுவிட்டால், அப்படியே “Song.mp3.crdownload” என்ற பெயருடன் அந்த பைல் இருக்கும்.

அதனை நீங்கள் இயக்கவும் முடியாது. ஏனென்றால், பைல் முழுமையாக இறக்கப்பட்டிருக்காது.

.crdownload என்ற துணைப் பெயர், அந்த குறிப்பிட்ட பைல் முழுமையாக இறக்கப்படவில்லை என்பதனைக் காட்டுகிறது.

நீங்கள் ஒரு பைலைத் தரவிறக்கம் செய்கையில், இடையிலேயே அதனை வேண்டாம் என நிறுத்தி விட்டால், இந்த .crdownload என்னும் துணைப் பெயர் கொண்ட பைல் தானாகவே நீக்கப்படும்.

நீங்கள் தரவிறக்கம் செய்வதனைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், இந்த பைல் தொடர்ந்து இருக்கும். மீண்டும் இந்த பைல் தரவிறக்கத்தினைத் தொடரலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக