அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 1 மே, 2015

வர­லாற்றில் இடம்பிடித்­தி­ருக்கும் 19ஆவது திருத்த சட்டம்

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யி­லுள்ள அதி­கா­ரங்­களை குறைக்கும் வகை­யிலும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறுவும் வகை­யி­லான சரத்­துக்­களை உள்­ள­டக்­கிய 19ஆவது திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.



இந்த சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வாக கட்சி பேத­மின்றி 215 உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­துள்­ளனர். சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் வீர­சே­கர வாக்­க­ளித்­த­துடன் சுயா­தீ­ன­மாக செயற்­படும் ஜன­நா­யக தேசிய கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித்­கு­மார வாக்­கெ­டுப்பில் நடு­நிலை வகித்­துள்ளார்.

இந்த வாக்­கெ­டுப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பஷில்­ரா­ஜ­பக் ஷ, பிரேம்லால் ஜய­சே­கர ஜனக்­க­பண்­டார தென்­னக்கோன், ஜகத் பால­சூ­ரிய, எல்­லா­வல மேதா­னந்த தேரர், கெஹெ­லிய ரம்­புக்­வெல, அப்­பாத்­துரை விநா­ய­க­மூர்த்தி ஆகிய 7 பேரும் கலந்து கொள்­ள­வில்லை.

சபா­நா­யகர் சமல் ராஜ­பக் ஷ தவிர்த்து 224 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் 215 பேர் சட்­ட­மூ­லத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளமை வர­லாற்றில் முக்­கிய நிகழ்­வாக பதி­வா­கி­யுள்­ளது.

கடந்த ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம் பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்­டி­ருந்­த­போது பொது எதி­ர­ணியின் சார்பில் ஜனா­தி­பதி தேர்­தலை முன்­னிட்டு வெளியி­டப்­பட்ட தேர்தல் விஞ்­ஞா­பனம் மற்றும் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் பிர­தான அம்­ச­மான நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை தொடர்­பான அதி­கா­ரங்­களை குறைத்தல் மற்றும் 17 ஆவது திருத்த சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை மீளவும் ஏற்­ப­டுத்தல் போன்ற விட­யங்கள் முக்­கிய இடம் வகித்­தி­ருந்­தன.

இந்த விட­யங்­களை உள்­ள­டக்கி 19 ஆவது திருத்த சட்­ட­மூ­லத்­தினை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் சமர்ப்­பித்­தி­ருந்தார். ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து புதிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை ஜன­வரி மாதம் 12 ஆம் திகதி பத­வி­யேற்­றி­ருந்­தது. அர­சாங்கம் பத­வி­யேற்று 100 நாட்­க­ளுக்குள் 19 ஆவது திருத்த சட்­டத்தை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்கம் முயற்சி எடுத்­தி­ருந்­தது.

ஆனால் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையின் அதி­கா­ரங்­களை குறைப்­பது மற்றும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வு­வது தொடர்­பி­லான இந்த திருத்த சட்­டமூலத்­திற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி எதிர்ப்பு தெரி­வித்து வந்­தி­ருந்­தது. 19 ஆவது திருத்த சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மென்றும் தேர்தல் முறை மாற்றம் தொடர்­பி­லான 20 ஆவது திருத்த சட்­ட­மூ­லமும் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்டு இரு சட்­ட­மூலங்­களும் ஒரே தட­வையில் விவா­திக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டு­மென்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

இத­னை­விட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணயில் அங்கம் வகிக்கும் விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான மக்கள் ஐக்­கிய முன்­னணி, வாசு­தேவ நாண­யக்­கார தலை­மை­யி­லான ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, திஸ்ஸ விதா­ரண தலை­மை­யி­லான லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி ஆகி­ய­னவும் இந்த திருத்த சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தன.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இந்தக் கட்­சிகள் அங்கம் வகித்­தாலும், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ­வுக்கு ஆத­ர­வான அணி­யி­ன­ரா­கவே இவர்கள் செயற்­பட்டு வந்­தனர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்றின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன பதவி வகித்து வரு­கின்­ற­போதிலும் இந்த இரு கட்­சி­யி­னரும் 19 ஆவது திருத்த சட்­டமூலத்தை நிறை­வேற்­று­வ­தற்கு தொடர்ந்தும் முட்­டுக்­கட்­டை­க­ளையே போட்டு வந்­தனர்.

இந்த நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை சந்­தித்து 19 ஆவது திருத்த சட்­டத்­தினை ஆத­ரிக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்தி வந்தார்.

19 ஆவது திருத்த சட்­டத்தின் மீதான விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தாக இருந்­த­போதிலும், இரண்டு தட­வைகள் சர்ச்­சைகள் கார­ண­மாக அந்த விவாதம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்தே கடந்த திங்கள் மற்றும் செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் விவாதம் நடத்­தப்­பட்டு பெரும் சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் திருத்­தங்­க­ளுடன் இந்த சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே நாட்டின் ஜன­நா­யக விழுமி­யங்­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஏற்ற வழி­மு­றை­களை 19 ஆவது திருத்த சட்டம் கொண்­டுள்­ளது. இந்த சட்­டமூலத்­திற்கு இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கி­ய ­தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­யன ஒன்­றி­ணைந்து ஆத­ர­வ­ளித்­தமை வர­லாற்றின் முக்­கி­யத்­துவம் பெற்ற விட­ய­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. தற்­போது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் என்ற பெயரில் ஆட்­சியை நடத்தி வரு­கின்­ற­னவே தவிர சகல விட­யங்­க­ளிலும், இரு­த­ரப்­பிற்கும் இடையே முரண்­பா­டு­களே அதி­க­ரித்­துள்­ளன.

இவ்­வா­றா­ன­தொரு சூழலில் முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும், 19 ஆவது திருத்த சட்டம் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டமை உண்­மை­யி­லேயே வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டா­கவே அமைந்­துள்­ளது. தனது அதி­கா­ரங்­களை குறைக்கும் வகை­யி­லான சட்ட திருத்தம் மீதான விவாதத்­தினை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஆரம்­பித்து வைத்தார். அத்­துடன் தனது அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கு சகல கட்­சி­களும் ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டு­மென்றும் அவர் கோரி­யி­ருந்தார். இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யொ­ருவர் நடந்­து­கொண்­டுள்­ளமை பாராட்­டத்­தக்க செயற்­பா­டா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

1994 ஆம் ஆண்டு சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­போது நிறை­வேற்று அதி­கா­ரங்­களை இல்­லாது ஒழிப்பேன் என்று உறுதி அளித்­தி­ருந்தார். இதேபோல் 2005 ஆம் ஆண்டு மஹிந்­த ­ரா­ஜபக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட போதும் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் ஒழிக்­கப்­படும் என்று உறுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் இவர்­க­ளது காலத்தில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை பாது­காக்­கப்­பட்­டதே தவிர எந்­த­வ­கை­யிலும் அதி­கா­ரங்­களை குறைக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் உறு­தி­ய­ளித்­த­தைப்­போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்றார். ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஐந்து வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­டுள்­ள­துடன் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய நிலையும் புதிய சட்ட திருத்தத்தின் மூலம் உரு­வா­கி­யுள்­ளது.

அத்­துடன் நான்­கரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­ப­தியால் தன்­னிச்­சை­யாக கலைக்க முடி­யாத சூழலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இரண்டு தட­வை­களே ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க முடியும் என்றும் அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 30 ஆகவும், பிரதி அமைச்­சர்­களின் எண்­ணிக்கை 40 ஆகவும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை பாராளுமன்றம் தீர்மானிக்க முடியும் என்றும் 19 ஆவது திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் 17 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் 17 ஆவது திருத்த சட்டம் ஒழிக்கப்பட்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு வலுசேர்க்கும் வகையில் 18 ஆவது திருத்த சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்பட்டது. ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் பதவி வகிக்கலாம் என்ற திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது.

தற்போது 18 ஆவது திருத்த சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டு 19 ஆவது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனநாயக விழுமியங்கள் கட்டிக்காக்கும் நிலைமை ஓரளவிற்காவது உருவாகி யிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக