அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 1 மே, 2015

தனித்தீவில் எழுதப்பட்ட தண்டனை சரித்திரம்

எல்லாம் முடிந்தாயிற்று!

இந்­தோ­னேசிய நுசா­கம்­பங்கன் தீவில் நடு­நி­சியில் ஒலித்த மரண ஓலங்­க­ளோடு அந்த உயிர்கள் உல­குக்கு விடை­கொ­டுத்­து­விட்­டன. பொழுது புலர்ந்­தாலும் மனி­தத்தை நேசிப்­போரின் மனதில் இன்னும் மௌனம் குடி­கொண்­டி­ருக்­கி­றது.



இனி அவர்கள் இங்­கில்லை. அவர்­களின் கன­வுகள் -எதிர்­பார்ப்­புகள் அனைத்­துமே கலைந்­து­போ­யின. உலகம் மீதி­ருந்த இறுதி நம்­பிக்­கை­யை யும் பிடி­மா­னத்­தையும் துப்­பாக்கி ரவைகள் தவி­டு­பொ­டி­யாக்­கி­விட்­டன.

ஆம்! பாலி ஒன்­பது என்று அழைக்­கப்­பட்ட குழுவில் அங்கம் வகித்த எண்மர் இந்­தோ­னே­சி­யாவில் துப்­பாக்­கியால் சுடப்­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டனர்.
அதி­காரம் மிக்க மேற்­கு­லக நாடு­களும் ஐக்­கிய நாடுகள் சபையும்,மனித உரிமை நிறு­வ­னங்­களும் தொடர்ச்­சி­யாக விடுத்த கோரிக்­கைகள் நிராக­ரிக்­கப்­பட்டு தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

உலகின் பெருந்­தொ­கை­யான மக்­களை கவ­லை­கொள்ளச் செய்த, நெகிழச் செய்த இச்­சம்­பவம் இந்த நிமிடம் வரை­யிலும் பர­ப­ரப்­பாக பேசப்­ப­டு­கி­றது.
இந்­தோ­னே­சி­யாவில் 1997 ஆம் ஆண்டு 5ஆம் இலக்க 59ஆவது பிரிவு சட்­டத்தின் பிர­காரம் போதைப்­பொ­ருளை உப­யோ­கித்தல், தயா­ரித்தல், கடத்தல் என்­பன திட்­ட­மிட்ட வகையில் நடை­பெ­று­வதால் அது மரண தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும். அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தண்­டனை வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

பயங்­க­ர­வாதம் உள்­ளிட்ட பிர­தான குற்றச் செயல்­க­ளுக்கு கல்லால் எறிந்து உயி­ரி­ழக்­கும்­வரை தண்­டனை வழங்கும் சட்­ட­மூலம் 1997 ஆண்டு இந்­தோ­னே­சி­யாவில் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் அது செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.
எனினும் தற்­போது அமு­லி­லுள்ள மரண தண்­ட­னை­யா­னது துப்­பாக்கிச் சூடு நடத்தி குற்­ற­வா­ளியை உயி­ரி­ழக்கச் செய்­வ­தாகும்.

பாலி ஒன்­பதில் பிர­தான குற்­ற­வா­ளி­க­ளாக கரு­தப்­பட்ட என்ரு சான் மற்றும் மயூரன் சுகு­மாரன் உட்­பட ஒன்­பது பேருக்கு இவ்­வாறே மரண தண்­டனை வழங்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

நேற்று முன்­தினம் தீவி­ர­மான ஏற்­பா­டுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன. மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த அவுஸ்­தி­ரே­லிய, பிரேசில், நைஜீ­ரிய, பிலிப்பைன்ஸ், இந்­தோ­னே­சிய கைதி­களின் சார்பில் இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி ஜோகோ விடோ­டோ­வுக்கு இறு­தி­யாக மனு­வொன்று அனுப்­பப்­பட்­டது. எனினும் அவ­ரி­ட­மி­ருந்து பதில் எதுவும் கிடைக்­க­வில்லை.

அன்­றைய தினம் மாலை 7 மணிக்கு மயூரன், சானின் உற­வி­னர்கள் சிறைச்­சாலை வளா­கத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்­டனர். மயூரன் சுகு­மாரன் அப்­போதும் சிரித்­துக்­கொண்டே இருந்தார். அவ­ரு­டைய முகத்தில் கவ­லைக்­கான அடை­யாளம் எதுவும் தெரிய­வில்லை. ஒரு சில ஆங்­கி­லப்­ப­டங்­களின் பெயர்களைக் கூறி இவற்றை நான் தவ­ற­வி­டப்­போ­கிறேன் என்­றுதான் கவ­லை­யாக இருக்­கி­றது என உற­வி­னர்­க­ளிடம் தெரிவித்­துள்ளார்.

அவ­ரு­டைய சகோ­தரி பிருந்தா சுகு­மா­ரனைப் பார்த்து "நான் எப்­போதும் உங்­க­ளு­ட­னேயே இருப்பேன். கவ­லைப்­பட வேண்டாம்" எனக் கூறி­யுள்ளார். தாய், தந்­தை­ய­ருடன் இருக்­கும்­போது பெரும்­பாலும் மௌன­மா­கவே இருந்­த­தாக அங்­கி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் தெரிவித்­துள்­ளனர்.

மயூ­ர­னுக்கும், என்­ரு­வுக்கும் பிரார்த்­தனை செய்­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து டேவிட் சொபர், கிறிஸ்டி புகிங்ஹாம் என்ற மத­போ­த­கர்கள் வர­வ­ழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
இறுதி வரை அவர்­க­ளுடன் அவ்­வி­ரு­வரும் இருந்­தனர்.

மரண தண்­ட­னைக்கு இரண்டு மணி­நே­ரங்­க­ளுக்கு முன்னர் அந்­நாட்டு சட்­டமா அதிபர் பிர­செட்­யோவால் உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டது. எனினும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஜேன் வெலோ­சோ­வுக்கு மரண தண்­ட­னை­யி­லி­ருந்து தற்­கா­லிக விலக்­க­ளிப்­ப­தாக அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து நுசா­கம்­பங்கன் தீவுக்கு நூற்­றுக்­க­ணக்­கான படை­யினர், பாது­காப்பு வாக­னங்கள் சகிதம் வருகை தந்­தனர். தீவின் சுற்­றுப்­புற கடல் பரப்பில் இரா­ணு­வத்­தினர் ரோந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­தனர். நீண்ட தூரத்­துக்கு நோட்­ட­மிடும் வெளிச்சம் சகிதம் சிறிய கடற்­படை பட­கு­களும் வலம் வந்­து­கொண்­டி­ருந்­தன.

நுசா­கம்­பங்­கனில் கைதி­களின் உற­வி­னர்கள் தங்­கி­ய­ிருப்­ப­தற்­கான இடம் அறி­விக்­கப்­பட்டு அங்கு அவர்கள் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். எனினும் என்ரு மற்றும் மயூ­ரனின் உற­வி­னர்கள் சிலாசெப் என்ற அரு­கி­லுள்ள நக­ரத்­துக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டனர். தண்­ட­னைக்குப் பிறகு சட­லங்­களை உட­ன­டி­யாக அடை­யாளம் கண்டு சொந்த நாட்­டுக்கு கொண்டு செல்­வ­தற்­கான ஏற்­பாட்­டுக்­கா­கவே அவர்கள் அங்கு அனுப்­பப்­பட்­டனர்.

அவர்­க­ளுடன் அவுஸ்­தி­ரே­லிய தூத­ர­கத்தின் சிறப்பு அதி­கா­ரிகள் சிலர் இருந்­தனர்.
நேரம் நள்­ளி­ரவை நெருங்­கும்­போது நுசா­கம்­பங்கன் தீவில் மரண தண்­டனை விதிக்­கப்­படும் பாது­காப்­பான தனி­யொரு காட்டுப் பகு­திக்கு சிறி­ய­ரக விமா­னத்தின் மூலம் கைதிகள் அழைத்துச் செல்­லப்­பட்­டனர்.

அங்கு தண்­ட­னைக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. மயூரன், என்­ரு­வுடன் வருகை தந்­தி­ருந்த போத­கர்­க­ளுக்கு உள்ளே செல்ல அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் அப்­போதும் பிரார்த்­தித்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

பன்­னி­ருவர் அடங்­கிய படை­யினர் துப்­பாக்­கி­க­ளுடன் வருகை தந்­தனர். அவர்­களில் மூவரின் கைக­ளி­லேயே ரவைகள் நிரப்­பப்­பட்ட துப்­பாக்­கிகள் இருக்கும். எனினும் தம்­மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­போ­கி­ற­வர்கள் யார் என்­பதை கைதிகள் அறிந்­தி­ருக்க மாட்­டார்கள்.

இந்­தோ­னே­சிய நேரப்­படி அதி­காலை 12.35 க்கு கைதி­களின் இத­யப்­ப­கு­தியில் உள்ள சிலுவை அடை­யா­ளத்தை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அமை­தி­யாக இருந்த தீவுக்­குள்­ளி­ருந்து ஒலித்த சத்தம் கைதி­களின் உற­வி­னர்­களை நிலை­கு­லையச் செய்­தது. அவர்கள் கதறிக் கதறி அழு­தார்கள்.

நுசா­கம்­பங்கன் சிறை வளா­கத்தில் கூடி­யி­ருந்த 500 க்கும் மேற்­பட்டோர் மெழு­கு­தி­ரி­க­ளையும் பதா­கை­க­ளையும் ஏந்­தி­ய­வண்ணம் பிரார்த்­தனை செய்­தார்கள்.
துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டதும் கைதிகள் இறந்­து­விட்­டதை உறுதி செய்ய வேண்டும். அவ்­வாறு உயி­ரி­ழக்­கா­விட்டால் தலையில் சுடப்­பட வேண்டும் என்­பதே விதி­மு­றை­யாகும்.

எனினும் சரி­யாக 27 நிமி­டங்­களின் பின்னர் அனை­வ­ரி­னதும் உயிர் பிரிந்­து­விட்­ட­தாக வைத்­தி­யரும் சிறைச்­சாலை அதி­கா­ரியும் உறு­திப்­ப­டுத்­தினர்.

"அவர்கள் இரு­வரும் புன்­ன­கைத்த வண்ணம் மர­ணித்­தி­ருந்­தார்கள். இறக்கும் தறுவா­யிலும் அவர்கள் பிரார்த்­தித்­துக்­கொண்­டி­ருந்­த­மையே அதற்குக் காரணம்" என சிறைச்­சாலை அதி­காரி அந்­நாட்டு ஊட­கங்­க­ளுக்கு தெரிவித்­துள்ளார்.

மயூரனின் ஆசைப்­படி அவர் சுடப்­ப­டும்­போது கண்­களை திறந்­து­கொண்­டி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் குறிப்­பிட்­டுள்­ளனர். இவ்­வி­டயம் சர்­வ­தேச ஊட­கங்­களில் பெரிதும் பேசப்­பட்­டது.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட எண்­மரின் சட­லங்கள் கழுவி தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்டு, அவர்­களின் இத­யப்­ப­கு­தியில் உள்ள ரவைகள் நீக்­கப்­பட்டு ஆடைகள் அணி­விக்­கப்­பட்­டன.

அதன் பின்னர் அவர்­க­ளுக்­கென பிரத்­தி­யே­க­மாக தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்த சவப்­பெட்­டியில் சட­லங்கள் வைக்­கப்­பட்டு கடும் பாது­காப்­புக்கு மத்­தியில் கொண்­டு­வ­ரப்­பட்­டன.
மயூரன், என்­ருவின் சட­லங்­களை அவுஸ்­தி­ரே­லிய தூத­ர­கத்தின் விசேட பிர­தி­நிதி மஜெல் ஹின்ட் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். அதன் பின்னர் சட­லங்கள் ஜகார்த்­தா­வுக்கு கொண்­டு­செல்­லப்­பட்டு அவுஸ்­தி­ரே­லி­யாவில் நல்­ல­டக்­கத்­துக்கு எடுத்துச் செல்­லப்­பட்­டன.

ஏனைய கைதி­களின் சட­லங்கள் அந்த நாட்டு அதி­கா­ரி­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­ட­துடன் இந்­தோ­னே­சிய கைதியின் சடலம் உற­வி­னர்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டது.

மரண தண்­ட­னைக்கு உள்­ளான எண்­மரில் மயூரன் சுகுமாரன் என்ரு சான் குறித்து ஊட­கங்கள் அதிகம் பேசு­கின்­றன. அதற்­கான காரணம் சிறைச்­சா­லையில் கடந்த 10 வரு­டங்­களில் அவர்­க­ளிடம் ஏற்­பட்ட மாற்றம் தான். உண்­மையில் மயூரன் சிறந்த சித்­திரக் கலை­ஞ­ரா­கவும் மற்­றோ­ருக்கு உதவி செய்யும் பண்­பு­டை­ய­வ­ரா­கவும் மாறி­யி­ருந்தார். அதே­போல என்ரு சிறைச்­சாலை தேவா­ல­யத்தில் போதனை செய்­வ­திலும் அதிக நேரத்தை பிரார்த்­தனை செய்­வ­திலும் கழித்தார்.

உயி­ரி­ழப்­ப­தற்கு ஒரு­சில மணி­நே­ரங்­க­ளுக்கு முன்னர் தனது காத­லி­யுடன் திரு­மண பந்­தத்தில் இணைந்­து­கொண்­ட­மையால் தான் சந்­தோஷம் அடை­வ­தா­கவும் மர­ணத்தைப் பற்றி இனி கவ­லைப்­படத் தேவை­யில்லை எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­தோ­னே­சி­யாவின் இந்த அதி­ரடி முடிவை உலக நாடுகள் பல கண்­டித்­துள்­ளன. குறிப்­பாக அவுஸ்­தி­ரே­லியா தனது கடும் தொனி­யி­லான எச்­ச­ரிக்கை விடுத்­தது.
அத்­துடன் மரண தண்­ட­னைக்குப் பின்னர் இந்­தோ­னே­சி­யா­வி­லுள்ள தனது தூது­வரை உட­ன­டி­யாக நாட்­டுக்கு அழைப்­ப­தாக அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் டொனி எபொட் அறி­வித்­துள்ளார்.

எனினும் தமது நாட்டு சட்ட விதி­மு­றை­க­ளி­லி­ருந்து ஒரு­போதும் மீறப்­போ­வ­தில்லை என இந்­தோ­னே­சியா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது.

இந்­தோ­னே­சியா அர­சாங்கம் இவ்­வாண்டு ஜன­வரி மாதம் 6 பேருக்கு மரண தண்­டனை வழங்­கி­யது. அதுவும் இவ்­வாறே துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்டு வழங்­கப்­பட்­டது.

1999 முதல் 2015 வரை இந்­தோ­னே­சி­யாவில் மரண தண்­ட­னை­களில் 50 வீத­மா­னவை வெளிநாட்டு கைதி­க­ளுக்கே வழங்­கப்­பட்­டுள்­ளன.

தனது நாட்டுப் பிரஜை பெரும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருந்­த­தா­கவும் தனது குடும்­பத்­தாரை நினைத்து வேத­னைப்­பட்­ட­தா­கவும் அவ்­வா­றான ஒரு­வரை சுட்­டுக்­கொலை செய்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் பிரேசில் தெரிவித்­துள்­ளது.

பாலி ஒன்­பது விவ­கா­ரத்தில் 10 வரு­டங்­க­ளாக புனர்­வாழ்வு பெற்­ற­வர்­களை மனித நேய­மற்ற முறையில் கொலை செய்து மரண தண்­டனை வழங்­கு­வ­தையே பல்­வேறு தரப்­பினர் எதிர்க்­கின்­றனர்.

சங்­கிலி வலைப்­பின்னல் போல் இவர்கள் இயங்­கி­ய­தா­கவும் இதனால் நாட்­டுக்கு பெரும் ஆபத்து ஏற்­பட்­ட­தா­கவும் இந்­தோ­னே­சியா இதனை நியா­யப்­ப­டுத்­து­கி­றது.

திட்­ட­மிட்ட குற்றச் செயல்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனினும் ஒரு­முறை திருந்தி வாழ்­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கலாம் என்­பதே மனி­தத்தை நேசிப்­போரின் வேண்­டு­கோ­ளாகும்.

மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டது. இந்த உலகம் இனி அவர்களுக்குச் சொந்தமில்லை. அவர்களுடைய வாழ்க்கையும் மரணமும் எமக்கு பாடங்களை கற்றுத்தரும் சரித்திரம்தான்!

–இராமானுஜம் நிர்ஷன்–

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக