அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 1 மே, 2015

வேர்ட் 2007ல் குறிப்பிட்ட இடங்களில், அன்றைய தேதியை அமைக்க

வேர்ட் இதனை மிக எளிமையான வழிகளில் அமைக்க வசதி தந்துள்ளது. தேதியை டெக்ஸ்ட்டில் இடைச் செருக அல்லது அமைக்க, கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.



எந்த இடத்தில் தேதி அமைக்கப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும்.

ரிப்பனில், Insert டேப் அழுத்தவும்.

அடுத்து, Text குரூப்பில், Date-  Time டூல் மீது கிளிக் செய்திடவும்.

வேர்ட் Date and Time டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு அமைக்கப்பட இருக்கும் தேதிக்கான பார்மட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த டயலாக் பாக்ஸின் கீழாக, "Update Automatically" என்று இருப்பதை, அங்குள்ள செக் பாக்ஸில் டிக் ஏற்படுத்தி தேர்ந்தெடுத்தால், தேதியானது ஒரு பீல்டாக மாறும். அது கம்ப்யூட்டர் இயங்கும் போதெல்லாம், தேதியை அப்டேட் செய்திடும். நீங்கள் கடிதங்கள் போல அமைக்க டெம்ப்ளேட் அமைக்கையில், இது உங்களுக்கு உதவியாய் இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக