அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 1 மே, 2015

இணைய இணைப்பை (LAN)வை பியாக (WIFI) மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும்

உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம்.



இதனை மிக எளிமையான நெட்வொர்க் அமைப்பின் மூலம் செயல்படுத்தலாம். கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.

கண்ட்ரோல் பேனல் சென்று அங்கு கிடைக்கும் பிரிவுகளில் Network and Sharing Center செல்லவும்.

இங்கு ” Setup a new connection or network“ என்பதில் கிளிக் செய்திடவும்.

பின் மீண்டும் “Setup a wireless ad-hoc network” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த இணைப்பிற்கு ஒரு பெயர் (SSID) கொடுக்கவும்.

அதற்கான நெட்வொர்க் கீ ஒன்றையும் அமைக்கவும்.

இதில் காட்டப்பட்டுள்ள internet connection sharing என்பதை இயக்கத்தில் வைக்கவும்.

இனி இந்த குறிப்பிட்ட Wi-Fi AP ஐ லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் தேடிப் பெறலாம்.
இணைய இணைப்பிற்கான செட் அப் கிடைத்தவுடன், செட் செய்த கீயை அதில் எண்டர் செய்து இணைய இணைப்பினைப் பயன்படுத்தவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக