அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 1 மே, 2015

இந்­தோ­னே­சிய மர­ண­தண்­டனை கைதி அன்ட்றூ சானை திரு­மணம் செய்த பெண் மதபோதகராக சேவை­யாற்­றிய இள­வ­ரசி

இந்­தோ­னே­சி­யாவில் போதை­வஸ்து கடத்தல் குற்­றச்­சாட்டில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான 8 கைதி­களில் ஒரு­வ­ரான அன்ட்றூ சானை மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு முன் சிறைச்­சா­லையில் வைத்து திரு­மணம் செய்­ததன் மூலம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட பெப்­யன்தி ஹெர­விலா என்ற பெண் இந்­தோ­னே­சிய ஜாவா பிராந்­திய இள­வ­ர­சி­களில் ஒருவர் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.



பெபி என அழைக்­கப்­படும் அவர் கடந்த திங்­கட்­கி­ழமை அன்ட்றூ சானை சிறைச்­சா­லையில் வைத்து திரு­மணம் செய்­தி­ருந்தார்.

மத்­திய ஜாவா­வி­லுள்ள யொக்­ய­கர்த்­தாவைச் சேர்ந்த அவர் அரச குடும்­பத்தைச் சேர்ந்த தாயொ­ரு­வ­ருக்கு பிறந்­த­வ­ராவார்.

சுமார் 5 வருட காலம் மத­போ­தகர் ஒரு­வ­ராக சிங்­கப்­பூரில் சேவை­யாற்­றிய அவர் பின்னர் தாய்­நாடு திரு ம்பி மேலும் 5வரு­டங்­க ளுக்கு தனது சேவையைத் தொடர்ந்­துள் ளார்.

அவர் பாலி மற்றும் ஜகர்த்­தாவில் கிறிஸ்தவ அமைப்­பொன் றின் உறுப்­பி­ன ராக சேவை­யாற்­றினார்.

இந்­நி­லையில் அவர் 2012 ஆம் ஆண்டு பாலி­யி­லுள்ள கெரோ­போகன் சிறைச்­சா­லையில் மத போத­னை­களை மேற்­கொண்ட போது அன்ட்றூ சானை முதன்­மு­த­லாக சந்­தித்தார்.

இதன் போது அன்ட்றூ சான், “நீ உனது ஆத்ம நண்­பரைத் தேடி இங்கே வந்தாயா?” என வேடிக்­கை­யாக பெபி­யி டம் வின­வி­ய­தாக அன்ட்றூ சானுடன் சிறை­வாசம் அனு­ப­வித்த பிறி­தொரு சிறைக்­கை­தி­யான மத்­தியுஸ் ஆரிப் மர்ட்­ஜ­ஜயா தெரி­வித்தார்.

அந்த சிறைச்­சா­லை­யி­லி­ருந்த அனைத்து சிறைக்­கை­தி­க­ளி­டமும் பரிவு காட்டும் ஒரு­வ­ராக விளங்­கிய பெபி, அன்ட்றூ சானிடம் தனி அக்­க­றையை காண்­பித்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் அன்ட்றூ சான் பெபியை திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை அவ­ரிடம் வெளி­யிட்­டுள்ளார்.

அன்ட்றூ சான் எந்­நே­ரமும் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளாகக் கூடிய கைதி என்­பதை தெளி­வாக அறிந்­தி­ருந்த போதும் பெபி உட­ன­டி­யாக அவ­ரது காதலை ஏற்றுக் கொண்­டுள்ளார்.

தொடர்ந்து அந்த சிறைச்­சா­லைக்கு முறை­யாக விஜயம் செய்த பெபியின் மத போத­னை­களை ஆர்­வத்­துடன் செவி­ம­டுப்­பதில் அன்ட்றூ சான் ஈடுபட்டு வந்துள்ளார்.

அன்ட்றூ சான் விடுதலையாவாரானால் இருவரும் இணைந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து பிள்ளை களை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக மத்தியுஸ் தெரிவித்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக