அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 14 ஜூன், 2015

உங்களுக்கும் இப்படி ஏற்படலாம்

அவ­ளது கழுத்தின் குரல்­வளை மிதப்பின் சற்றுக் கீழே ஒரு அடை­யாளம். பிறப்பு மச்சம் அல்ல. நெற்­றியில் பொட்டு இட்ட பெண்ணின் கழுத்­திலும் மற்­றொரு பொட்டா என மயங்­காதீர்கள். பல பெண்­களின் வழக்­கம்­தானே இது என்­கி­றீர்­களா?



இது பொட்டு இல்­லைத்தான். ஆனால் பொட்­டிட்ட கழுத்தில் அழிக்க முடி­யாத பொட்டு போலா­கி­விட்­டது.

ஆம். தினமும் நெற்­றியில் குங்­குமப் பொட்டு வைத்த பின்னர் அதே கையால் அதே குங்­கு­மத்தால் கழுத்­திலும் ஒரு பொட்டு வைப்­பது அவ­ரது வழக்­கமும் கூட.

சில காலத்தின் பின்னர் அந்த இடம் சற்றுக் கறுத்துக் கொண்டு வந்­தது. சற்று அரிப்பும் இருந்­தது.

ஆம் தோலில் அழற்சி ஏற்­பட்­டது. இதை contact Dermatitis இதை என்­பார்கள். ஊறு விளை­விக்கக் கூடிய எந்த பொரு­ளுக்கும் எதி­ரான சரு­மத்தின் எதிர்­வி­னை­யாக அழற்சி ஏற்­ப­டு­கி­றது.

பெரும்­பாலும் அப்­பொருள் சரு­மத்­துடன் தொடர்­புறும் அந்த இடத்­தி­லேயே ஏற்­படும்.

அந்­நியப் பொருள் சரு­மத்தில் படும்­போது ஏற்­படும் அழற்­சியை அந்­நியப் பொருட் தொடர்பு தோல் அழற்சி எனலாம்.. ஒட்டுக் கிரந்தி என்று பேச்சு வழக்கில் சொல்­லலாம்.

சரு­மத்­திற்கு ஒவ்­வாத பொருளால், அதா­வது அலர்­ஜி ஏற்­ப­டு­வ­தாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்­வாமை தோல­ழற்சி Allergic contact Dermatitis என்­பார்கள்.

Betamethazone போன்ற ஸ்டீரொயிட் கிறீம் மருந்­து­களை அவ்­வி­டத்தில் பூசிவர ஒவ்­வாமை அழற்சி குண­மாகும். ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்தும் பொருள் மீண்டும் சரு­மத்தில் தொடர்­பு­ப­டாது வைத்­தி­ருப்­பதே முக்­கி­ய­மா­னது.

"போகுது வரு­குது போகுது வரு­குது போய்ப் போய் வரு­கி­றது......"

" ...எத்­தனை மருந்­து­களைப் பூசி­விட்டேன்

மறை­வது போல ஏய்ப்புக் காட்டி மீண்டும் மீண்டும் வரு­கி­றது.."

நாற்­பதை அண்­டிய அவள் தனக்கு சுகர், கொலஸ்ட்ரோல், பிரஸர் ஏதா­வது வந்­து­விட்­டதா எனப் பார்க்க வந்­தி­ருந்தாள்

ரிப்­போட்­டு­களைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்­றவள் மீண்டும் இருந்தாள்.

“இதையும் காட்ட வேணும் என்று நினைச்­சனான் மறந்து போனன்” என்று மூக்கைக் காட்­டினாள்

கறுத்து சொரப்­பாக மூக்கின் மேற்­பாகம் அசிங்­க­மாகக் கிடந்­தது.

"ஒரு வகை எக்­ஸிமா ஒட்டுக் கிரந்தி" என்றேன்

ஆனால் "மருந்து பூசியும் மாறு­தில்­லையே" என்றாள்

"கண்­ணாடி போடு­ற­னீங்­கள்­தானே. இப்ப ஒருக்கா போடுங்க பார்ப்பம்" என்றேன்.

நான் நினைத்­தது சரி

மூக்கில் அழுத்திக் கொண்­டி­ருக்கும் நோஸ்பாட் (nose pad)) கண்­ணா­டியால் ஆனது எனவே அது அடை­யா­ளத்­திற்குக் கார­ண­மல்ல. கண்­ணாடி பிரேமின் ரிம்தான் காரணம். அது மெட்­டலால் (metal) ஆனது.அந்த மெட்­ட­லுக்­கான ஒவ்­வா­மை­யா­ல்தான் அலர்ஜி ஏற்­பட்­டி­ருக்­கி­றது

அத­னால்தான் மீண்டும் மீண்டும் வரு­கி­றது

"கண்­ணா­டியை மாற்­றுங்கள் ஆனால் அது பிளாஸ்டிக் பிரேம் உள்­ள­தாக இருக்க வேண்டும்" என்றேன். அடுத்த முறை அவளைக் கண்­ட­போது மூக்கு அழ­காக இருந்­தது சரு­மத்­திற்கு ஒவ்­வாத பொருளால் ஒவ்­வாமை ஏற்­ப­டு­வ­தாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்­வாமை தோல­ழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்­பார்கள்.

பல்லி எச்­ச­மிட்ட புண்­களா?

"பல்லி எச்சம் இட்­டு­விட்­டது போலி­ருக்­கி­றது. வலிக்­கி­றது" என்றாள். தனது உத­டு­களைச் சுட்­டி­ய­படி.அவ­ளது உதட்­டிலும் அதை அண்­டிய முகத்தின் பகு­தி­யிலும் சிறு சிறு கொப்­ப­ளங்கள் காணப்­பட்­டன

"பல்லி ஏன் உங்­க­ளது உதட்டைத் தேடி வந்து எச்­ச­மிட்­டது" என நான் கேட்­க­வில்லை.

ஆனால் "ஏன் எல்­லோ­ரது உதட்டை மட்டும்; தேடிப் போய் எச்­ச­மி­டு­கி­றது" என்ற சந்­தேகம் மருத்­துவம் படிக்கு முன்னர் என்­னிடம் இருந்­தது என்­பதை மறுக்க முடி­யாது.

உண்­மையில் இதற்கும் பல்லி எச்­சத்­திற்கும் எந்தத் தொடர்பும் கிடை­யாது. இது ஒரு தொற்­றுநோய். Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிரு­மியால் ஏற்­ப­டு­கி­றது.

வாயைத் திறந்து நாக்கை நீட்­டினார். நாக்கின் ஓர­மாக இரு சிறு புண்கள் அவ­ருக்கு இருந்­தன. புண்­க­ளாக மட்­டு­மின்றி ஆடை படர்ந்த புள்­ளிகள் அல்­லது படைகள் போன்ற அடை­யா­ளங்­களும் இருக்­கலாம்.

சூட்டுப் புண்கள் என எண்­ணி­விட்டார். மாறி மாறி பார்­ம­சியில் கொடுத்த மருந்­து­களைப் பூசிப் பார்த்தார். பயன் இல்லை. வலியும் இல்லை என்­பதால் அக்­கறை எடுக்­க­வில்லை.

நாக்கில், வாயின் உட்­பு­றங்­களில் ஏற்­படும் இத்­த­கைய புண்கள் அலட்­சி­யப்­ப­டுத்தக் கூடி­யவை அல்ல. அப்­பாவி போலக் கிடந்த அந்தப் புண் ஆய்வு கூடப் பரி­சோ­த­னையில் புற்று நோய் என்­பது நிரூ­ப­ண­மாகி இருக்­கி­றது.

இது ஒரு மூதாட்­டிக்கு நடந்­தது.

ஆனால் எவ­ருக்கும் வரக் கூடிய ஆபத்­தான நோய். புகைத்தல் வெற்­றிலை சப்­புதல், அதி­க­மாக மது அருந்­து­வது போன்­ற­வற்றால் வரு­வ­தற்­கான சாத்­தியம் மிக மிக அதிகம்.எனவே வாயில் மற்றும் நாக்கில் ஏற்­படும் எத்­த­கைய புண்­க­ளையும் அலட்­சி­யப்­ப­டுத்த வேண்டாம்.

எதை எதற்குள் வைப்­பது எனத் தெரி­யாது வைத்துத் திண­று­ப­வர்கள் முது­வ­ய­தினர் மாத்­தி­ர­மல்ல. இளை­ஞர்கள் முதல் முதி­ய­வர்கள் வரை எந்தப் பரு­வத்­திலும் தொடர்­கி­றது

இவற்றில் பல ஆபத்­திலும் முடி­வ­துண்டு.இந்தச் சுட்டிப் பையனும் வைத்­து­விட்டான்.

எடுத்­து­வி­டு­கிறேன் என்று முயன்ற தாயாரால் முடி­ய­வில்லை. இன்னும் உள்­ளுக்குத் தள்­ளி­ய­துதான் மிச்சம்.சும்மா பார்த்தால் தெரி­கி­றதா. இல்­லவே இல்லை.நீண்ட சுரங்கப் பாதை போல இருள் அப்பிக் கிடந்­தது.ஒளியைப் பாய்ச்­சி­ய­போது ஏதோ வெண்­மை­யாகத் தெரிந்­தது. காய்ந்த காதுக் குடு­மியா, கல்லா, உருட்­டிய பஞ்சா இதை எடுப்­ப­தற்கு பல உப­க­ர­ணங்கள் இருக்­கின்­றன.

இதன் நுனியை அந்­நியப் பொருளின் பிற்­பு­ற­மாகக் கொண்டு சென்ற பின் மறு­பு­றத்தில் உள்ள படியை அழுத்த நுனியில் உள்ள கொழுக்கி விரியும்

மெது­வாக பிற்­பு­ற­மாக நகர்த்த அந்­நியப் பொருளை இழுத்துக் கொண்டு வந்­து­விடும்.

காது மென்­மை­யான பகுதி. சிறு காயம் பட்­டாலும் வலி ஏற்­படும். கிருமி தொற்­றலாம்.

தாயின் பொறு­மையும் மருத்­துவத் தாதி­களின் உத­வியும் சேர வெளியே வந்­து­விட்­டது அந்த அந்­நியப் பொருள். வேறொன்றும் இல்லை. மடித்துச் சுருட்­டிய பேப்பர் துண்டு..

பெற்­றோர்­களே..குழந்­தையின் காதிற்குள் அந்­நியப் பொருள் போய்­விட்டால் நீங்­க­ளாக எடுக்க முயல வேண்டாம்.

துர­திஸ்­ட­வ­ச­மாக பிற்­புறம் தள்­ளுப்­பாட்டால் செவிப்­பறை காய­ம­டை­யலாம். காது கேட்­பதே பாதிப்­பு­றலாம்.

***

அவ­தா­ன­மாக இருங்கள் வயதில் மூத்­த­வர்­களே.

அவர் ஒரு மூதாட்டி. பார்க்­கின்சன் நோயும் கூட இருக்­கி­றது. அதனால் கை நடுக்கம் இருக்­கி­றது. நடக்­கும்­போது சம­நிலை பேணு­வதில் சிர­மப்­ப­டு­கிறார். இரவு கழி­வறை சென்று திரும்ப முய­லும்­போது கீழே விழுந்­து­விட்டாள். விழும்­போது கைகளை ஊன்­றி­யதில் மணிக்­கட்டில் கை எலும்பு உடைந்­து­விட்­டது. வயது ஆகும் போது எலும்­பு­களின் உறுதி குறைந்துவிடுகிறது. ஓஸ்ரியோபொரோசிஸ் ஏற்படலாம்.

அதனால் சிறு விழுகைகள் கூட எலும்புகளை உடைத்து விடும். மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தங்கள் எலும்புகள் திடமாக இருக்கிறதா என்பதை முதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் அவதானம் மிக முக்கியம்

நடை தளம்பினால் ஊன்று தடி உபயோகிக்க வேண்டும். எனக்கு ஏன் கைதடி என வீம்பு காட்டாதீர்கள். வெட்கப்படாதீர்கள்.

விழுந்து இடுப்பு எலும்பை உடைத்து விட்டால் படுக்கையாகக் கிடக்கவும் நேரலாம்.
  
டொக்டர்.எம்.கே.முருகானந்தன். குடும்ப மருத்துவர்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக