காலங்காலமாக பார்த்தால் நம்மவர்கள் பலர் தமது குடும்ப சொந்தங்களில் இருக்கும் உறவினர்களை திருமணம் செய்யும் வழமை இருந்து வருகின்றது. இதனை பலரும் சமூக கலாசார ரீதியாக சிறந்தது என நினைத்து மகிழ்ந்தாலும் மருத்துவ ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்தால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்து வருகின்றது. எனவே, சமூகங்கள் குடும்பங்கள் உறவினர்களுக்குள் திருமணங்களை காலம் காலமாக ஏற்றுக்கொண்டு அதனை செய்து வரும்போது, எமது மருத்துவ ஆலோசனை ரீதியாக இவ்வாறு செய்ய வேண்டாம். இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? நாம் சொல்ல வந்த கருத்துகளை சரியாக விளங்கிக் கொள்வார்களா ? என்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகையால் இந்த விடயம் குறித்து மக்கள் மத்தியில் சரியான கருத்துக்களை விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.
உறவினர்களுக்குள் திருமணங்கள் சமூகத்தில் விரும்பப்படுவது ஏன்?
சொந்தங்களில் திருமணம் செய்யும்போது பலர் நினைப்பது தமக்கு சிறு வயதில் இருந்து நன்கு தெரிந்தவர் என்றும் அவரது பெற்றோர்களும் தமக்கு தெரிந்தவர்களே என்றும் ஆகும். இதன்போது சம்பந்தப்பட்டவர்கள் நினைப்பது எங்கோ இருக்கும் தெரியாதவரை அல்லது தெரியாத குடும்பங்களில் திருமணங்கள் செய்வதை விட தமக்கு தெரிந்த உறவினர்களும் சொந்தக்காரர்களும் எவ்வளவோ சிறந்தது என்பதாகும். அது மட்டுமல்ல சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சிறுவயதில் இருக்கும் போதே தமது சொந்தங்களுக்குள் இருக்கும் ஒருவரை உரிமையாக்கி அவரையே இவருக்கு திருமணம் செய்வதாக முடிவாக்கி இருப்பார்கள். இதன் போது, சொந்தங்கள் மேலும் வலுவாக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல தமது சொத்துக்களும் பிரிந்து வேறு குடும்பங்கள் தெரியாதவர்கள் என போகாமல் தமது உறவினர்களிடமே இணைந்திருக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறுகின்றது. இவ்வாறு பலதரப்பட்ட சமூகக் காரணங்கள் இருப்பதால் சொந்தங்களுக்குள் திருமணங்கள் சமுதாயத்தில் நடந்த வண்ணமே உள்ளது.
சொந்தங்களுக்குள் திருமணங்களை மருத்துவ ரீதியில் எதிர்ப்பது ஏன்?
சொந்தங்கள் என்கின்ற போது, இங்கே நாம் இரத்த சொந்தங்கள் அதாவது, சந்ததி சந்ததியாக வந்த உறவு முறைகளையே குறிப்பிடுகின்றோம். இதன்போது இந்த இரத்த சொந்த சந்ததிகளில் ஒரே வகையான நிற மூர்த்த பரம்பரையலகுகள் இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ஒரே வகையான பரம்பரையலகு தன்மை கொண்ட உறவினர்கள் திருமணத்தில் இணையும் போது, உருவாகும் பிள்ளைகள் பற்றி பார்க்க வேண்டும். ஒரே வகையான சந்ததி பரம்பரையலகுகள் இணையும் போது மறைக்கப்பட்டிருந்த வேண்டப்படாத பின்னடைவான தன்மைகள் வெளிக்கொண்டு வரக்கூடிய நிலைமை உருவாகும். அவ்வாறு வெளிக்கொண்டு வரும் வேண்டப்படாத தன்மைகள் இவ்வாறான சொந்த திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்களில் வெளிப்படுகின்றன. இதனால் இந்த பிள்ளைகளில் பல விரும்பப்படாத வேண்டப்படாத நோய்களும் குண இயல்புகளும் குறைபாடுகளும் வந்துசேரக் கூடிய வாய்ப்புள்ளது.
இதற்காகத்தான் உறவினர்களுக்குள் செய்யப்பட்டு வரும் திருமணங்களை மருத்துவ கண்ணோட்டத்தில் எதிர்க்கப்படுகின்றது.
சொந்த உறவுகளுக்குள் செய்யப்படும் திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் பாதிக்கப்படுவார்களா?
இல்லை, சொந்த அதாவது, இரத்த சந்ததி உறவினர்களுக்குள் செய்து பிறக்கும் பிள்ளைகளில் பாதிப்புகள் நோய்கள் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. ஆனால், அப்படி பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள் என்று சொல்ல முடியாது. எத்தனையோ பிள்ளைகள் எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் பல அறிவாளிகளாகவும் பிறந்திருக்கிறார்கள். வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், பாதிப்புகள் வரக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இவ்வாறு குடும்பங்களில் குறையுடன் ஒரு பிள்ளை பிறந்தாலோ அந்த குடும்பத்தின் மகிழ்ச்சி போய் பல விதமான சிரமங்கள் கவலைகள் வந்து விடும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். இதனால் தான் வர முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
சொந்தங்களில் திருமணங்கள் தவிர்க்க முடியாது. நடந்தவர்கள் நடக்க இருப்பவர்கள் குறித்து என்ன பரிகாரம் உள்ளது?
சொந்த உறவுகளில் திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என நாம் வார்த்தையில் கூறினாலும் சிலர் விரும்பிவிட்டோம் மனதை பறி கொடுத்துவிட்டோம் என நினைத்து இணைபவர்கள் உள்ளனர். இவர்களை எம்மாலோ பெற்றோர்களாலோ பிரித்து வைத்து பார்க்க முடியாது. எனவே, இவ்வாறு திருமணமானவர்கள் கர்ப்பம் தரித்த பின்னர் ஒழுங்கான மருத்துவ பரிசோதனைகள் ஸ்கான் (SCAN) பரிசோதனைகள் மேற் கொண்டு கர்ப்பத்தில் வளரும் சிசுவுக்கு பாதிப்புகள் உள்ளதா என பார்த்து அதற்கான ஆலோசனைகளை சரியான நிபுணரிடம் கேட்க வேண்டும். எனவே, எதிர்காலத்தில் சந்ததியாக வரும் இரத்த சொந்தங்களுக்குள் செய்யும் திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
டொக்டர்: சுஜாகரன், நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக