அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மது­பாவனை ஏற்­ப­டுத்தும் உடல் நலப் பிரச்­சி­னைகள்

உச்­சந்­தலை முதல், உள்­ளங்கால் வரை உள்ள அனைத்து தொகு­தி­க­ளிலும், அதன் உறுப்­பு­க­ளிலும் நாட்­பட்ட பாதிப்­பு­களை மது­பா­வனை ஏற்­ப­டுத்­து­கி­றது. குறிப்­பாக உள்­ளெ­டுக்­கப்­ப­டு­கின்ற வாய்க்­குழி, அகத்­து­றிஞ்சல் நடை­பெ­று­கின்ற இரைப்பை, சிறு­குடல், பெருங்­குடல், உட்­பட்ட சமி­பாட்டு தொகு­தியில் உள்ள முக்­கிய சுரப்­பி­க­ளான ஈரல், சதையி என்­ப­வற்றில் இதன் பாதிப்­புக்கள் மிக அதிகம்.



இரத்­த­வாந்தி, வயிற்­றோட்டம், குடற்புண், ஈரல் அழற்சி, ஈரல் கருகல் நோய் ,குறை­யூட்டம், விற்­றமின் குறை­பாடு, சதையி அழற்சி என்­பன ஏற்­ப­டு­கின்­றன.

இரத்­த­வாந்தி

சமி­பாட்டுத் தொகு­தியில் அடங்­கு­கின்ற வாய்­குழி, குரல்­வளை, களம், இரைப்பை, சிறு­குடல் பகு­தி­களில் அதிக மது­பா­வ­னையால் மயிர்­துளை குழாய்­களின் பாதிப்பு உட­ன­டி­யாக இரத்­த­வாந்­தி­யாக மாறும். அவ­சர மருத்­துவ உதவி இல்­லாமல் புறக்­க­ணி­க்கும் போது இதுவே உயி­ரி­ழப்­பா­கவும் மாறும்.

குறை­யூட்டம்

மிகக்­கூ­டு­த­லாக மது­பா­விக்­கின்ற ஒரு­வரில் அவர் உட்­கொண்ட மதுவில் உள்ள உயர் கலோரிப் பெறு­மா­னத்தால் உடல் தனது சக்­தியை பெற்­றுக்­கொண்­ட­தாக எடுத்துக் கொள்ளும். எனவே, மது­பா­விக்­கின்ற ஒரு­வரில் பசியோ, உணவுத் தேவையோ அல்­லது அதற்­கான முன்­னு­ரி­மையோ கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை. காலப்­போக்கில் மது­பா­வித்­தவர் புரத கலோரி குறை­யூட்டம், உடல் மெலிவு, விற்­றமின் குறை­பாடு போன்­ற­வற்றால் பாதிக்கப் படுவார். அத்­துடன் மதுவின் இர­சா­யன செயற்­பாட்டால் உட்­கொள்ளும் உணவின் சமி­பாடு, அகத்துறிஞ்சல் என்­ப­னவும் பாதிக்­கப்­படும்.

குடற்­புண்கள்

இரைப்பை, சிறு­குடல் பகு­தி­களில் “எதனோல்” குடற்­புண்­களை ஏற்­ப­டுத்தும். மது­விற்கு அடி­மைப்­பட்­ட­வர்கள் தங்­க­ளது உடல்­நிலை குறித்து அதிகம் அக்­க­றைப் ­ப­டா­த­தாலும், மருத்­துவ உத­வியை உடன் நாடா­த­தாலும் இவை மிகப்­பெ­ரிய பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

சில வேளை­களில் குடற்­ப­கு­தி­களில் உட்­புற குரு­திப்­பெ­ருக்கு மர­ணத்­திலும் முடி­வ­துண்டு.

இரைப்பை புற்­றுநோய்

குடற்புண் ஏற்­பட்ட இடங்­க­ளிலும், ஏனைய இரைப்பை பகு­தி­க­ளிலும் புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் மிக அதிகம்.

ஈரலில் கொழுப் பு சேமிப்பு

“எத­னோலின்” ஈரல் நஞ்சு நிலை ,குறை­யூட்டம் என்­ப­வற்றால் உடலின் ஏனைய உறுப்­பு­களில் சேமிக்­கப்­பட்ட கொழுப்பு அங்­கி­ருந்து அகற்­றப்­பட்டு படிப்­ப­டி­யாக ஈரலில் சேமிக்­கப்­படும். மித­மான, அதிக குடி இதனை ஏற்­ப­டுத்தும். அத்­துடன் இதற்கு நீண்ட நாட்கள் குடிக்க வேண்டும் என்றும் இல்லை. குறு­கிய காலப்­ப­கு­தி­யி­லேயே ஈரல் பாதிப்­புக்கள் ஏற்­படும்.

ஈரல் அழற்சி

“எத­னோலின்” இர­சா­யன விளை­வாக ஈரலில் ஏற்­படும் மற்­று­மொரு ஆபத்­தான பாதிப்பு ஈரல் அழற்­சி­யாகும். இதன் அறி­கு­றி­க­ளாக பசி­யின்மை, ஓங்­காளம், வயிற்றுக் குத்து, காய்ச்சல், மாறாட்டம் என்­பன காணப்­ப­டலாம். பொது வைத்­திய நிபு­ணரை உடன் நாட­வேண்­டிய தீவிர பிரச்­சி­னை­யாகும். காலம் தாம­தித்தால் நாட்­பட்ட ஈரல் பாதிப்­பாக மாறி­விடும்.

ஈரல் கருகல் நோய்

நாட்­பட்ட மது­பா­வனை ஈரல் கருகல் நோயை ஏற்­ப­டுத்தும். இந்­நிலை மீள முடி­யா­தது. எனவே, ஈரல் செய­லி­ழப்பு உயி­ரி­ழப்­பாக மாறும். இது­வரை ஈரல் மீள பதிந்தல் பெரி­தாக வெற்றி பெறா­த­தாலும். அதிக செல­வா­கின்ற ஒரு மருத்­துவ சிகிச்சை என்­ப­தாலும், ஈரல் பாதிக்­கப்­பட்­டவர் பெரும்­பாலும் மர­ண­ம­டை­வதே வழமை. முற்­றாக ஈரல் செய­லி­ழந்த ஒருவர் இறுதி காலங்­களில் நிறை­மாத கர்ப்பி­ணி­யாக மருத்து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருப்­பதை காணலாம்.

ஈரல் புற்­றுநோய்

ஈரல் புற்­று­நோயை ஏற்­ப­டுத்தும் Hepatitis - B, Hepatitis - C வைரஸால் பறப்­படும் என்­ப­வற்­றுடன் மது­பா­வ­னையும் முக்­கிய இடம்­பெ­று­கின்­றது.

களப்­ப­குதி இரத்த குழாய் புடைப்பு

ஈரல் கருகல் நிலைக்கு பின்னர் களப்­ப­கு­தியில் உள்ள இரத்த குழாய்கள் அதிகம் பருத்த நிலைக்கு உட்­படும். இவற்றில் ஏற்­ப­டு­கின்ற இரத்த அமுக்­க­மாற்றம் நாள­டைவில் குரு­திப்­பெ­ருக்­காக மாறும், அவ­சர சத்­தி­ர­சி­கிச்சை இல்லை எனில் அதிக இரத்த இழப்பு உயி­ரி­ழப்­பாக முடி­வ­டையும்.

சதை­யச்­சு­ரப்பி அழற்சி

நாட்­பட்ட மது­பா­வ­னை­யா­ளர்­களில் சதை­ய­சு­ரப்பி அழற்சி ஏற்­ப­டலாம். சதை­ய­சு­ரப்பி சமி­பாட்டு நொதி­யங்கள், குரு­தியில் வெல்ல அளவை கட்­டுப்­ப­டுத்தும் இன்­சுலின் என்­ப­னவை உட்­பட ஏரா­ள­மான இர­சா­ய­னங்­களை சுரப்­பதால் நேரி­டை­யா­கவும். மறை­மு­க­மா­கவும் ஒரு மனி­தனின் அனு­சேப தொழிற்­பா­டுகளை குறு­கிய, நாட்­பட்ட அளவில் பாதி­க்கும்.

சதை­யச்­சு­ரப்பி புற்­றுநோய்

சதை­யச்­சு­ரப்­பியில் புற்­று­நோயை ஏற்­ப­டுத்தும் காரணிகளில் மதுபாவனையும் பிரதானமானது.

.
டாக்டர் .பா. யூடி­ரமேஸ் ஜெயக்­குமார்
சிரேஷ்ட உள­நல மருத்­துவர்,
உள­நலச் சேவைகள், மட்­டக்­க­ளப்பு
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக