இந்தியாவில் எழுந்துள்ள புதிய சர்ச்சை!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு தனி இடம் உண்டு. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டும். அதற்கு ஒரே வழி போர்! அதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நம்பியவர் நேதாஜி. அந்தத் தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டக் களத்தில் குதிக்க வைத்தது; துப்பாக்கி ஏந்த வைத்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் இந்திய தேசிய இராணுவப்படை பிரிட்டனுக்கு எதிராகப் போரிட்டது.
போர் சூழலில் நேதாஜியின் போர் வியூகங்களும், தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானதாக அமைந்திருந்தன. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு பிரித்தானிய இராணுவமே அதிர்ந்தது; நேதாஜியின் அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது; அவரைப் பாராட்டியது. இப்படி உலகமே அதிர்ந்த, இந்திய விடுதலைக்காகப் போரிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கை வரலாற்றில் அவரது மரணம் மாத்திரம் புரியாத புதிராக இருந்துவருகிறது.
பிறப்பு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இந்தியாவின் ஒரிஸா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக, எட்டு சகோதரர்களுடனும் ஆறு சகோதரிகளுடனும் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராவார். இவரின் தாய் தெய்வபக்தி மிக்கவராக விளங்கினார். இவர்கள் வங்காள இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.
ஆரம்ப வாழ்க்கை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தன்னுடைய ஆரம்பக் கல்வியை, கட்டாக்கிலுள்ள பெப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். பின்னர், 1913 இல் கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார். சிறுவயதிலிருந்தே சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார்.
1915 ஆம் ஆண்டு கொல்கத்தா பிரெசிடெனன்சி கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படித்துக்கொண்டிருக்கையில், சி.எஃப்.. ஓட்டன் என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறினார். இதன்போது ஆசிரியர் மீது கடும்கோபம் கொண்டார். இதனால் பெரும் தர்க்கம் ஏற்பட, கல்லூரி நிர்வாகம் சுபாஷ் சந்திரபோஸை கல்லூரியை விட்டு நீக்கியது.
பின்னர், ஸ்கொட்டிஷ் சேர்ச் கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோரின் விருப்பத்தின்பேரில் 1919 ஆம் ஆண்டு ஐ.சி.எஸ். கல்வியை கற்பதற்காக லண்டனுக்கு சென்றார். அவர் ஐ.சி.எஸ். பரீட்சையில் நான்காவது மாணவனாக தேர்ச்சிப் பெற்றார். 1919 இல் நடந்த ‘ஜொலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திரபோஸை இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது.
இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜொலியன் வாலா பாக் என்ற இடத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பாராமல் ஆங்கிலேய அரசு , ரெஜினோல்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திரபோஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல், லண்டனில் தன்னுடைய பணியை துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது.
திருமண வாழ்க்கை
பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜேர்மனி, ஐரோப்பா, ஒஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜிக்கு, ஒஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது, இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து, 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் 1942 ஆம் ஆண்டு, பெண் பிள்ளையொன்றை பெற்றெடுத்தனர். அவளுக்கு அனிதா என பெயர் சூட்டினர்.
சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் பங்கு
‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது' எனக் கருதி தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர். தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்தது. இதனால் வேல்ஸ் இளவரசரின் வருகையை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவுசெய்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலரையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது.
சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர். தாஸ் மற்றும் நேருவும் கருதினர். ஆனால், காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் அதனை எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாஸுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், சி.ஆர் தாஸ். கட்சியிலிருந்து பிரிந்து , சுயாட்சிக் கட்சியை தொடங்கியது மட்டுமல்லாமல், 'சுயராஜ்ஜியா' என்ற பத்திரிகையையும் ஆரம்பித்து , அதன் பொறுப்பை நேதாஜிக்கு வழங்கினார்.
1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை, ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்குத் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.
அதன் பின்னர், 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி, “நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை" என முழங்கினார். நேதாஜி, தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் நேதாஜியை அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்குரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோல்வியடைந்தார். அதனை பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். இதன் காரணமாக, நேதாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.
‘பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம் அது. பாரத தேசத்தை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம் என கருதிய நேதாஜி, 1941 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி மாறுவேடம் அணிந்து சிறையிலிருந்து தப்பினார். அங்கிருந்து பெஷாவர் நகரை சென்ற அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே, அவரின் அழைப்பை ஏற்று பின்னர் ஜேர்மனியை சென்ற அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.
சுதந்திர இந்திய இராணுவம்
1941 ஆம் ஆண்டு 'சுதந்திர இந்திய மையம்' என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி, சுதந்திர இந்திய வானொலியை பேர்லினிலிருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார். பிறகு, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் வான் ரிப்பன் டிராபின்னின் உதவியுடன் சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸ் தலைமையில் தொடங்கப்பட்டு செயற்படாமலிருந்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தீவிர பயிற்சியளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார்.
1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே இந்திய தேசிய இராணுவப்படையை கொண்டு 1944 இல் ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால், இந்திய தேசிய இராணுவப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15, ஆம் திகதியன்று நேதாஜி வானொலி மூலம் '' இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. ஜெய் ஹிந்த் '' என வீரர்களுக்கு உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது.
மேற்கு வங்க அரசின் வெளிப்பாடு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 12, 774 பக்கங்களைக் கொண்ட 64 ஆவணங்களை இந்தியாவின் மேற்கு வங்க அரசு கடந்த 18 ஆம் திகதி வெளியிட்டது. இதன் மூலம் 1945 ஆம் ஆண்டு விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்படுவது தவறு, குறித்த ஆண்டுக்கு பிறகும் அவர் உயிருடன் இருந்தமை உண்மை என கூறப்படுகின்றது.
இந்நிலையில், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதியன்று போர் விமானம் மூலம் ஜப்பான் நோக்கி, நேதாஜி சென்றுகொண்டிருந்தபோது, விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும், நேதாஜி மரணித்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956 ஆம் ஆண்டு ஷா நவாஸ் குழுவும், 1999 ஆம் ஆண்டு முகர்ஜி ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி ஆணைக்குழுவின் அறிக்கையில், 1945 ஆம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத முடிச்சாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டில்லியில் உள்ள 'மிஷன் நேதாஜி' என்ற அமைப்பு, இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து நேதாஜியின் மரணம் தொடர்பான 33 கோப்புகளின் நகலை கேட்டு மனு செய்திருந்தது. அந்த தகவல்களை அளித்தால் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவும், நாட்டின் இறையாண்மையும் பாதிக்கப்படும் என இந்திய மத்திய அரசு கூறிவிட்டது.
நேதாஜி, தற்போதைய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கடந்த 2012 ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து இதே கோரிக்கையுடன் மேற்கு வங்காள மாநில அரசையும், மத்திய அரசையும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் விளைவாக, நேதாஜி தொடர்பாக கொல்கத்தா பொலிஸ் தலைமையக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 64 கோப்புகளை அண்மையில் மம்தா பானர்ஜி வெளியிட்டார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிவந்த டேப் நாத் தாஸ் என்பவரைப் பற்றிய பொலிஸாரின் உளவுத்தகவல்கள் மேற்கண்ட 64 கோப்புகளில் 22 ஆம் இலக்க கோப்பில் காணப்படுகின்றன.
அவரது கருத்தின்படி,1948 ஆம் ஆண்டுவரை சீனாவின் மன்சூரியா பகுதியில் நேதாஜி உயிருடன் வாழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை அவர் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
நேதாஜியின் நண்பர் தகவல்
இதற்கிடையில், நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். தனக்கு 115 வயதாவதாகக் கூறும் நிஜாமுதீன், நேதாஜி தொடர்பான இரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியின்போது, கடைசியாக நேதாஜியை 1947 ஆம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி வைத்தேன். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாகக் கூறப்பட்டது. அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணமடைந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மரணம் குறித்த சர்ச்சை
ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை.
''எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்.'' எனக் கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பாரதநாட்டை அடிமைபடுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற மாவீரன் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் முதல் இராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூரத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அர்ப்பணித்துகொண்ட நேதாஜி, ஒவ்வொரு போராட்ட வீரனின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றுள்ளமையை யாராலும் மறக்க முடியாது.
தொகுப்பு: எம்.எம்.சில்வெஸ்டர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக