அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 21 செப்டம்பர், 2015

ப்ளீஸ், யாராவது என் நாயை சுடுங்களேன், துப்பாகி தருகிறேன்: ஃபேஸ்புக்கில் பெண் அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொலை செய்யுமாறு மக்களுக்கு ஃபேஸ்புக் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 வயது செயின்ட் பெர்னார்ட் மற்றும் இங்கிலீஷ் புல் டாக் கலப்பின நாயை வளர்த்து வந்தார். தான் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு சின்னமன் என பெயர் வைத்தார். அந்த நாய் குப்பைத்தொட்டிகளில் ஆட்டம் போடுவது அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை.

இதையடுத்து அவர் ஃபேஸ்புக்கில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

யாராவது என் நாயை சுட்டுக் கொலை செய்ய வேண்டும். அதை செய்ய இங்குள்ள யாருக்கும் மனசு இல்லை. நாங்கள் துப்பாக்கி அளிக்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இதை பார்த்த விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நாய் சின்னமனை அழைத்து வந்துவிட்டனர். தற்போது அந்த நாயை தற்காலிகமாக ஒரு குடும்பத்திடம் அளித்துள்ளனர். விரைவில் அதை முறைப்படி யாருக்காவது தத்துக் கொடுக்க உள்ளனர்.

இது குறித்து விலங்குகள் பாதுகாப்பு இல்ல நிர்வாகி நானெட் மாஸ் கூறுகையில்,

நான் தினமும் நாய்களுடன் பணியாற்றுகிறேன். அவை நான் என் வாழ்க்கை. சின்னமன் ஒரு அன்பான நாய். அப்படி இருக்கையில் அதைப் போய் சுட அவருக்கு எப்படி தான் மனம் வந்ததோ? என்றார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக