அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 24 செப்டம்பர், 2015

வேர்ட் டிப்ஸ்! டேபிள் ஒன்றை வரைய

டேபிள் ஒன்றை வரையலாம்: வழக்கமாக வேர்ட் புரோகிராமில், ரிப்பனில் கிடைக்கும் insert டூலைப் பயன்படுத்தி, நாம் டேபிள் ஒன்றை டாகுமெண்ட்டில் இணைப்போம். இதற்குப் பதிலாக, டேபிள் ஒன்றை நாம் வரையும் வகையில், வேர்ட் draw~-a~-table என்ற டூலைத் தந்துள்ளது. இதனைப் பயன்படுத்தியும் நாம் டேபிள் ஒன்றை உருவாக்கலாம்; அதாவது வரையலாம். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.



1. ரிப்பனில் Insert டேப்பினை இயக்கவும்.

2. இங்கு Table என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். வேர்ட் இங்கு கீழ்விரி மெனு ஒன்றைக் காட்டுகிறது.

3. இந்த மெனுவில் Draw Table என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே Print Layout வியூவிற்கு மாறிக் கொள்ளும். உங்கள் மவுஸ் பாய்ண்ட்டரும் ஒரு பென்சில் வடிவத்தில் மாற்றம் பெற்று இருக்கும்.

4. இந்த மவுஸ் பாய்ண்ட்டரைப் பயன்படுத்தி, டேபிளின் வெளிக் கோடுகளை வரையவும். அப்படியே நெட்டுவரிசை மற்றும் படுக்கை வரிசைகளையும் வரையவும்.

5. முடிந்தவுடன் எஸ்கேப் கீயை அழுத்தினால், உடன் பென்சில் மறைந்து வழக்கமான கர்சர் கிடைக்கும்.


பாராவின் அனைத்து டேப்களையும் நீக்க: டாகுமெண்ட் ஒன்றை அமைத்து முடித்த பின்னர், குறிப்பிட்ட ஒரு பாராவில், நீங்கள் உங்கள் வசதிக்காக முன்பு அமைத்த அனைத்து டேப்களையும் மொத்தமாக நீக்க நினைக்கலாம். அல்லது, புதியதாக சில டேப்களை மாற்றி அமைக்க எண்ணலாம். அப்போதும் ஏற்கனவே உள்ள டேப்கள அனைத்தையும் நீக்கினால் மட்டுமே அது எளிதாக முடியும்.

1. எந்த பாராவில் டேப்களை நீக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த பத்தியில் கர்சர் பாய்ண்ட்டரை அமைக்கவும்.

2. ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும்.

3. Paragraph groupல், வலது கீழாக உள்ள சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே, Paragraph டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இந்த டயலாக் பாக்ஸில் கீழ் இடது மூலையில் உள்ள Tabs பட்டனில் கிளிக் செய்திடவும்.

5. வேர்ட் இப்போது, Tabs டயலாக் பாக்ஸைக் காட்டும்.

6. தொடர்ந்து Clear All என்பதில் கிளிக் செய்திடவும்.

7. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.

5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.

6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.

8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக