அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 24 செப்டம்பர், 2015

எக்ஸெல் டிப்ஸ்... நெட்டுவரிசைகளைப் பிரித்தல்

நெட்டுவரிசைகளைப் பிரித்தல்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டு வரிசை ஒன்றில் பலருடைய பெயர்களை அமைத்திருக்கிறீர்கள். அனைவருக்கும் பெயர் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எனவே இந்த நெட்டு வரிசையை மட்டும் இரண்டாகப் பிரித்து, பெயரில் உள்ள முதல் சொல்லை ஒரு வரிசையிலும், இரண்டாவது பெயரை இரண்டாவது வரிசையிலும் அமைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்?


இதற்கு ஓர் எளிதான வழி உள்ளது. இந்த வழியைத் தெரியும் முன்னர், நான் பார்முலாவில் ஸ்ட்ரிங் பங்சன் பயன்படுத்தி, நானாகப் பிரித்து அமைத்தேன்.

இது தேவையே இல்லை. எக்ஸெல் அருமையான வழி ஒன்றைத் தருகிறது.

நெட்டு வரிசை A வில், இந்த இரட்டைச் சொல் பெயர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

இதனை முதலில் ஹைலைட் செய்திட வேண்டும்.

அடுத்து Data என்னும் டேப்பிற்கு மாறவும். அங்கு Text to Columns என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது Convert Text to Columns என்னும் விஸார்ட் மேலாகக் கிடைக்கும்.

இதில் Delimited என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இது மாறா நிலையில் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்திடவும்.

அடுத்து இந்த பெயர்களில் என்ன வகை delimiter வைத்துக் கொள்ளலாம் என்பதனைத் தெரிவிக்க வேண்டும்.

அடுத்து Next செல்லவும். வேறு delimiter கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் (tab or comma), அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்டதாகக் கூடத் தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து பார்மட்டினைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிளிக் செய்து முடிக்கவும்.

இந்த டேட்டாவினை இன்னொரு வரிசையில் அமைக்க வேண்டும் எனில், Destination என்னும் பீல்டில் அமைக்கவும்.

இனி தனித்தனியான வரிசையில் அமைந்துவிடும்.

மேலாகச் சென்று இந்த வரிசைகளுக்கான தலைப்பை மட்டும் நீங்கள் மாற்றி அமைத்தால் போதும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக