அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 24 செப்டம்பர், 2015

எக்ஸெல் டிப்ஸ்... ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்

ஒரே நேரத்தில் இரண்டு ஒர்க் ஷீட்கள்: பலர், இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து, ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் பணிகளைத் தொடர விரும்புவார்கள். அல்லது ஒரே ஒர்க் ஷீட்டின் இரு நகல்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் தேவை ஏற்படலாம்.

சிலருக்கு, ஒரே ஒர்க் புக்கின், இரு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் நிலை ஏற்படலாம். இதற்கு எக்ஸெல் புரோகிராம் வழி தருகிறது.

ஒரே நேரத்தில், இரண்டு ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தலாம்.

முதலில் ஒரு ஒர்க்புக்கினைத் திறந்து வைக்கவும். ரிப்பனில் View டேப்பினைப் பெறவும்.

அடுத்து விண்டோ குரூப்பில் New Window என்பதில் கிளிக் செய்திடவும்.

எக்ஸெல் இப்போது அதே ஒர்க் புக்கினை இன்னொன்றாகத் திறக்கும்.

இன்னும் காணப்படும் ரிப்பனின் வியூ டேப்பில், Arrange All என்ற டூலில் கிளிக் செய்திடவும்.

இப்போது எந்த வகையில் எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்களைக் காட்ட வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும்.

அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

இப்போது எக்ஸெல் நீங்கள் அமைத்தபடி விண்டோக்களில் ஒர்க் ஷீட்டினைக் காட்டும்.

ஒவ்வொரு விண்டோவிலும், நீங்கள் விரும்பும் வெவ்வேறு ஒர்க்ஷீட்களை டிஸ்பிளே செய்திடலாம்.

அவை ஒரே ஒர்க்புக்கின் ஒர்க் ஷீட்டாக இருந்தாலும், அவற்றை அமைக்கலாம்.

இதே போல எத்தனை விண்டோக்கள் வேண்டுமானாலும் திறந்து ஒர்க் ஷீட்களை அமைக்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக