ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அனானிமஸ் குழுவினருடன் சேர்ந்து தற்போது சில இணையதளவாசிகள் தங்கள் குறும்பு சேட்டைகளை காட்டியுள்ளனர்.
சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் 20,000 டுவிட்டர் கணக்குகளை அனானிமஸ் அமைப்பினர் முடக்கினர், இதற்கு பதிலடியாக ஐஎஸ் அமைப்பினரும் அனானிமஸ் குழுவினரின் 10,000 டுவிட்டர் கணக்குகளை அதிடியாக முடக்கினர்.
இவ்வாறு ஐ,எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஹேக்கர் போராட்டம் நடத்தி வரும், அனானிமஸ் குழுவினருக்கு ஆதரவாக சில இணையதளவாசிகள் களமிறங்கியுள்ளனர்.
எப்போதும், முகத்தினை கருப்புத்துணியால் மூடிக்கொண்டு, தங்களுடைய தீவிரவாத அமைப்பு கொடியினை கையில் பிடித்துக்கொண்டு கொலை உணர்வோடு காட்சியளிக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கிண்டல் செய்யும் விதமாக, ரப்பர் வாத்து போன்று தீவிரவாதிகளை சித்தரித்துள்ளனர்.
அதாவது, அவர்களுடைய தலையில் ரப்பர் வாத்து பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் மஞ்சள் நிற வால்பகுதி மற்றும் அவர்கள் பிடித்திருக்கும் கொடியிலும் வாத்தினை வரைந்து புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்த சமூகதள பயன்பாட்டாளர்களும், தங்களது பங்குக்கு கிண்டலான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆன்ட்ரி என்பவர், தீவிரவாதத்தை விட நகைச்சுவை முந்திக்கொண்டது என கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் பெண்மணி ஒருவர், இந்த வாத்து புகைப்படத்தை பார்த்து எனது குழந்தையும் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக