அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 29 நவம்பர், 2015

யாழ்ப்பாண மக்களை நரகத்தில் தள்ளும் PPT பஸ் முதலாளி யூட்

பயணிகள் சொகுசு பேரூந்து சேவை என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் போதைப்பொருட்களைப் பரிமாறும் நடவடிக்கைகளின் முக்கிய சூத்திரதாரியாக விளங்குகின்றான் PPT சொகுசுபஸ் முதலாளியான யூட் என்பவன்.



கடந்த சில வருடங்களுக்கு முன் சாதாரணமான ஒருவனாக பருத்தித்துறை தும்பளையில் உள்ள தனது மச்சானின் புடவைக்கடையில் வேலை செய்த இவன் பின்னர் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வேணு களஞ்சியத்தில் இருந்து வாகனத்தில் பொருட்களை விற்கும் முகவராகச் செயற்பட்டு வந்தான்.

இதன் பின்னர் கொழும்பு சென்ற இவன் விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை விநியோகிக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளான்.

யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த போது புலிகள் மறைந்த பின்னர் புலிகளின் பெருமளவு பணம் இவனது கைக்கு வந்ததாகத் தெரியவருகின்றது.

இதன் பின்னர் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு தரை வழியாக போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பின்னர் PPT என்ற போக்குவரத்து சேவையை ஆரம்பித்து பல சொகுசு பஸ்களை அச் சேவைக்காக பயன்படுத்தி வந்துள்ளான்.

இவன் பயணிகள் பேரூந்து என்ற போர்வையில் பொதிகள் கொண்டு செல்லும் சேவைகளையும் தனது பேரூந்துகளிலேயே தற்போதும் நடாத்தி வருகின்றான்.

உண்மையில் பயணிகள் பேரூந்தில் பொதிகள் கொண்டு செல்லும் சேவைகள் நடாத்துவது சட்டவிரோதமானது. இதே வேளை இவ்வாறு பொதிகள் கொண்டு செல்லும் சேவைகள் நடாத்துவது ஏனெனில் தன்னால் கடத்தப்படும் சட்டவிரோதமான பொருட்கள், போதைப்பொருட்கள் என்பவற்றை மூடி மறைப்பதற்காகவே.

சில வேளைகளில் குறித்த பேரூந்துகளில் இருந்து போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டால் அவற்றை பொதுமக்களே கொண்டு வந்து வைத்துள்ளதாக சுலபமாக கூறி தப்பிவிடுவதற்கான தந்திர நடவடிக்கைக்காகவே இவ்வாறு போதைப்பொருட்களை பயணிகள் சேவை பஸ்களில் கடத்துகின்றான்.

இவ்வாறான ஒரு நடவடிக்கையே நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்சினுள் பொதியுடன் புகுந்த நபர் அந்தப் பொதியை பஸ்சாரதியின் இருக்கைக்கு அருகில் வைத்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்துள்ளார். குறித்த நபர் இதே போல் ஒவ்வொரு நாளும் இந்தப் பேரூந்திலேயே பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளார். இதனை பஸ்நிலையத்தில் நிற்கும் ஏனைய பஸ்சாரதிகள்ம் மற்றும் இளைஞர்களும் அவதானித்து வந்துள்ளனர். நேற்று இரவும் குறித்த நபர் பொதியுடன் வந்து அமர்ந்த போது அந்த பஸ்சில் புகுந்த இளைஞர்கள் பொதியை ஆராய முற்பட்டனர். பொதி பிடிபடப் போகின்றது எனத் தெரிந்தவுடன் குறித்த பஸ்சின் சாரதியும் நடத்துனரும் சேர்ந்து பொதியைப் பிரித்துப் பார்த்து குறித்த நபரை மட்டும் மாட்டி விட்டதாக அங்கிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை மட்டும் மாட்டிவிட்மை பஸ் முதலாளி மற்றும் சாரதி, நடத்துனரின் திட்டமிட்ட செயற்பாடே எனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பஸ் ஒரு பஸ் போதைப்பொருட்களுடன் கனகராஜன்குளப்பகுதியில் கடந்த வருடப் பகுதியில் பிடிக்கப்பட்டிருந்தது. அந்த பஸ்சில் இருந்து 60 கிலோ போதைப்பொருள் பிடிக்கப்பட்டு அந்த பஸ் சாரதி மற்றம் நடத்துனர்களுக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

பஸ் பிடிக்கப்பட்டவுடன் குறித்த பஸ் முதலாளியான யுட் பேரூந்தில் பொருட்கள் ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து சீ.சீ.ரிவி கமராப் பதிவுகள் அனைத்தையும் அழித்திருந்தான்.

ஆனால் பொலிசார் பஸ்முதலாளியிடம் பெருமளவு லஞ்சம் பெற்று அவற்றை எல்லாம் மறைத்து பஸ் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை மட்டும் குற்றவாளிகளாக பதிவு செய்து சிறைக்குள் தள்ள நடவடிக்கை எடுத்ததாக இவனது பஸ் சாரதி கவலையுடன் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இவன் தனது பேரூந்தில் போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு சாரதி, மற்றும் நடத்துனரும் உடந்தையாக இருப்பது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - யாழ்ப்பாணம் செல்லும் போக்குவரத்துப் பாதையில் பொலிசாரின் தடைகள் ஏதாவது இருக்கின்றதா? என அவதானிப்பதற்கு தொலைபேசியை தொடர்ந்து இயக்கத்திலேயே வைத்திருந்து சாரதி பஸ்சை செலுத்திச் செல்வான்.

இவர்களது பேரூந்துக்கு குறித்த சில கிலோமீற்றர் தொலைவில் இவர்களின் நடவடிக்கைக்குரிய வாகனம் முன்னே சென்று கொண்டிருக்கும். அதிலிருந்தே இவர்களுக்கான தகவல்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். இவ்வாறு இவன் தனது நடவடிக்கைகளை கனகச்சிதமாக பல காலம் செய்து கொண்டு வந்துள்ளான்.

அத்துடன் இவனது பஸ்சில் பிரயாணம் செய்யும் பயணிகளை அச்சுறுத்துவது, பொதிகளைக் கொடுத்துவிடும் வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் பொருட்களை பரிமாற்றம் செய்யாமல் விடுவது, பயணிகள் அல்லது பொருட்களைக் கொடுத்தவர்கள் சேவைத் திருப்தி இல்லை என ஏதாவது முரண்பட்டால் அவர்களை அச்சுறுத்துவது என்பவற்றை இவன் ரவுடித்தனமான முறையில் செயற்படுத்தி வந்துள்ளான்.

இவன் படையினருக்கும் வாகனங்களை வாடகைக்கு விடும் நடவடிக்கையும் செய்து வந்துள்ளான். அவனது வாகனங்களை வாடகைக்கு எடுத்த படையினர் சிலரின் நட்பை வைத்துக் கொண்டு ஏராளமானவர்களை அச்சுறுத்தி வந்ததாகவும் தெரியவருகின்றது.

எய்தவன் இருக்க அம்பை நோவது போல் இவனது போதைப்பொருள் கடத்தலுக்கு இவனது சாரதிகளும் நடத்துனர்களுமே பலிக்கடாவாகி நீதிமன்றில் தண்டனை பெறுகின்றார்கள்.

சாதரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மோட்டார் சைக்கிள் செலுத்தும் ஒருவரைப் பொலிசார் கைது செய்தால் அந்த மோட்டார் சைக்கிளை சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு கொடுத்ததாக மோட்டார் சைக்கிள் உரிமையாளரையும் நீதிமன்றம் தண்டிப்பது வழமை.

ஆனால் இவ்வாறு சமூகத்தையே பாதாளத்தில் தள்ளும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பஸ்சின் உரிமையாளரை சட்டத்துறையும் நீதிமன்றமும் எவ்வாறு வெளியே சுதந்திரமாக நடமாட வைக்கின்றது என்பது பெரும்சந்தேகத்திற்கு ஒன்றாக கருதவேண்டி உள்ளது.

பணக்காரர்களையும் முதலாளிகளையும் நீதிமன்ற நடவடிக்கை கட்டுப்படுத்தாதா? என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே நோக்க வேண்டியுள்ளது.

குறித்த பஸ்சேவையில் பொருட்களை அனுப்புபவர்களும் அந்த பஸ்சேவையில் பயணம் செய்பவர்களும் பரிதாபப்பட்ட கடவுளால் ஆசீர்வாதிக்கப்படவேண்டியவர்களாகவே இனிவரும் காலம் இருப்பார்கள்.

newjaffna


யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட PPT சொகுசு பஸ் இளைஞர்களால் சுற்றி வளைப்பு (2ஆம் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்தான PPT பெயர் கொண்ட பேரூந்து யாழ் இளைஞர்கள் சிலரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அந்த பேருந்தில் சாரதியின் இருக்கைக்குள் கீழ் இருந்து பெருமளவு போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கு காரணமானவர்களை இளைஞர்கள் தடுத்துவைத்திருந்தபோது அங்கு வந்த பொலிசார் சந்தேகநபர்களை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


newjaffna
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக