அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் தாக்கப்பட்டார்? முழுமையான காணொளிகள் (video)

இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல்கைதிகள் தமக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் சுமந்திரன் அவுஸ்ரேலியா வந்துள்ளார்.


அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைவதாக குற்றம்சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திப்பதற்கும் சுமந்திரன் அங்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அங்குசென்ற புலம்பெயர் தமிழர்கள் பலர் சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வியெழுப்பினர்.

ஈழத்தமிழர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசியாகவும் செயற்படுவதாகவும் புலம்பெயர் தமிழர்கள் குற்றஞ்சுமத்தினர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுமந்திரன் பதிலளிக்க முற்பட்டபோது வாய்த்தர்க்கம் எற்பட்டதுடன் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் நிலைமையை சமாளித்ததாக அங்கிருக்கும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்.

NewTamils

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக