அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், டாகுமெண்ட் தானாக சேவ் செய்ய

வேர்ட் புரோகிராம் தானாகவே நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களை சேவ் செய்திடும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை நாம் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். இது ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கீழாக Word Options பட்டன் கிடைப்பதைப் பார்க்கலாம். இதனை அழுத்தவும்.



2. தொடர்ந்து, டயலாக் பாக்ஸ் இடதுபுறம் உள்ள Save என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய விண்டோவில், Save AutoRecover Info Every என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் அமைக்கவும். இதன் அருகே கொடுக்கப்பட்டுள்ள சிறிய பாக்ஸில், நிமிடங்கள் என்பதன் அருகே 10 என மாறா நிலையில் இருக்கும்.

அதாவது, வேர்ட் தானாக, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவ் செய்திடும் என்று பொருள்.

ஆனால், இதில் நீங்கள் விரும்பும் கால இடைவெளியை (ஒரு நிமிடம் கூட அமைக்கலாம்). அமைத்திடவும்.

1 முதல் 120 நிமிடம் வரை அமைக்கலாம்.

பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி, வேர்ட், நீங்கள் செட் செய்த கால இடைவெளியில், டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளும். இதனால், மின்சக்தி கம்ப்யூட்டருக்குத் தடை பட்டாலும், நாம் செட் செய்த கால அளவில் டாகுமெண்ட் சேவ் செய்யப்பட்டு கிடைக்கும்.

ஆனால், இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கும் குறைவான கால நேரத்தில் இதனை அமைத்தால், டாகுமெண்ட் அடிக்கடி சேவ் செய்யப்படுவது, கம்ப்யூட்டர் இயக்கத்தைத் தாமதப்படுத்தலாம்.

இன்னொன்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஆட்டோ சேவ் செய்திடுகையில், உங்கள் பைல் சேவ் செய்யப்படுவதில்லை. பைல் கிராஷ் ஆகி, அடுத்த முறை அதனை ரெகவர் செய்திட முயற்சிக்கையில், வேர்டரோகிராமிற்குத் தேவையான தகவல்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக