அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 15 டிசம்பர், 2015

ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி.யில், இன்டர்நெட் இணைப்பதற்கான வழி

“Connect to Internet” என ஐகான் எதுவும் ஹோம் ஸ்கிரீனில் இருக்காது. டேப்ளட் பி.சி.யில், “Settings” திறக்க வேண்டும்.

அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும்.



உங்களுடைய டேப்ளட் மாடல், நிறுவனத்தைப் பொறுத்து இது வேறுபடும்.

அடுத்து, உங்கள் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

டேப்ளட் பி.சி.யில், airplane mode ஆப் செய்திருக்க வேண்டும்.

ஏனென்றால், இது இயக்கப்பட்டிருந்தால், வயர்லெஸ் இணைய இணைப்பினைத் தடுத்துவிடும்.

இனி, வை பி அல்லது நெட்வொர்க் கனெக்ஷன் பகுதியில், உங்கள் டேப்ளட் பி.சி. உணர்ந்தறியும் அனைத்து வை பி இணைப்புகளின் பெயர்களும் காட்டப்படும்.

உங்கள் இணைப்பின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இருக்கும்.

அதில் தட்டி, இயக்கினால், உடன் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.

சரியாக பாஸ்வேர்டைக் கொடுத்தால், இணைப்பு கிடைக்கும். அடுத்த முறை, உங்கள் இணைய இணைப்பினை நீங்கள் இயக்கி இருந்தால், டேப்ளட் பி.சி. தானாகவே உணர்ந்து, அதில் இணைந்து கொள்ளும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக