அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

"பேஸ்மேக்கர்" பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்கள் அல்லது இதயம் சீராக துடிக்கும் அளவிற்கு வலு குறைவாக இருப்பவர்களுக்கு பொதுவாக "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து, இதன் உதவியோடு இதயம் சீராக துடிக்க வைப்பார்கள். "பேஸ்மேக்கர்ஸ்" வைத்து இதயம் சீராக இயங்க ஆரம்பித்தாலும் கூட, "பேஸ்மேக்கர்ஸ்" வைத்தவர்கள் மற்றவர்கள் செய்யும் சில சாதாரண வேலைகளை செய்ய கூடாது, மற்றும் சில இடங்களுக்கு செல்ல கூடாது என்ற நிபந்தனைகள் இருக்கின்றன.



இந்த வகையில், "பேஸ்மேக்கர்ஸ்" பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் தான் நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கிறோம்...

உங்கள் உடலில் இடது பக்கம் "பேஸ்மேக்கர்" வைத்திருந்தால், அதற்கு மருப்பக்கமான வலது பக்கத்தில் தான் மொபைல் பயன்படுத்த வேண்டும். மொபைல் அலைவரிசையினால் "பேஸ்மேக்கர்"-ன் செயல்பாடு பாதிக்கப்படலாம்.

அதிக மின்னழுத்தம் இடங்களுக்கு சென்றால், அது உங்கள் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் "பேஸ்மேக்கரை" பாதிக்கும். வீட்டில் உள்ள மிக்ஸி, மாவாட்டும் இயந்திரம் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.

"பேஸ்மேக்கர்" வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது. மெட்டல் டிடக்டர் (Metal Dedactor) வழியே அவர்கள் செல்ல கூடாது, இது பேஸ்மேக்ரின் இயக்கத்தை செயலிழக்க செய்துவிடும்.

பேஸ்மேக்கர் வைத்திருப்பவர்கள் x-ray, CT Scan, Ultra Sound,Echocardiogram போன்ற பரிசோதனைகள் பாதுகாப்பாக தயக்கமின்றி எடுத்துக்கொள்ளலாம். ஆனால், MRI மட்டும் கூடாது என்று கூறப்படுகிறது. ஏனெனில், MRI பேஸ்மேக்கரின் Circuit-ஐ பதித்துவிடும் என்று கூறுகிறார்கள். எனவே, மருத்துவர் ஆலோசனையுடன் MRI செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

புற்றுநோய் உள்ளவர்களுக்கு கதிர்வீச்சு (Radiation Therapy) வழங்கப்படுவது வழக்கம். அனால், பேஸ்மேக்கர் வைத்துள்ளவர்கள் நேரடியாக கதிர்வீச்சு சிகிச்சைகளில் ஈடுபடக் கூடாது. கதிர்சீச்சு பேஸ்மேக்கரை பாதிக்கும்.

பேஸ்மேக்கரில், திறன் மற்றும் செயல்பாடு குறித்து நிறைய வகைகள் இருக்கிறது. சில பேஸ்மேக்கர் வைத்தல், இதயத்துடிப்பை மட்டும் தான் இயக்க முடியுமே தவிர இயல்பாக நடக்க கூட முடியாது. சிலவன, மாடிப்படி ஏறி இறங்கும் வகையில் இயங்க உதவும். எல்லாம் பணம் பொறுத்து தான் இருக்கிறது.

எச்சரிக்கை!!!!!!!!
மின்னணு உபகரணங்கள் பயன்படுத்துவதில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டியது முக்கியம். முடிந்த வரை மின்னணு உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக