அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

பேஸ்புக் தளத்திலிருந்து காணொளிகளை தறவிறக்க..

பேஸ்புக் தளத்தில், நம் அப்லோட் செய்த அல்லது நமது நண்பர்கள் பதிவிட்ட வீடியோ பட பைல்களை தறவிறக்கம் செய்திட கீழே தந்துள்ள வழிகளில் முயற்சி செய்திடவும்.

நீங்கள் முன்பு அப்லோட் செய்து பதிவு செய்த வீடியோ எனில், முகநூல் தளத்தில், உங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.

அங்கு Photos / Albums என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.



இதில் நீங்கள் அப்லோட் செய்த விடியோ இருக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

இயங்கத் தொடங்கியவுடன், வீடியோவின் கீழாக உள்ள Options என்னும் லிங்க்கினை கிளிக் செய்திடவும்.

இங்கு Download HD மற்றும் Download SD என்ற இரு ஆப்ஷன்ஸ் தரப்படும்.

உங்கள் விடியோவின் தரம் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்கிறீர்களோ, அதற்கேற்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், அந்த விடியோ எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டு, நீங்கள் போல்டரைத் தேர்ந்தெடுத்தவுடன், அதில் சேவ் செய்யப்படும்.

நீங்கள் அப்லோட் செய்த விடியோ பைல்களைத் தரவிறக்கம் செய்வது போல, உங்கள் நண்பர்கள் பதிவு செய்த விடியோக்களை தரவிறக்கம் செய்திட முடியாது. இருப்பினும், வேறு எந்த புரோகிராமின் துணை இல்லாமல், தரவிறக்கம் செய்திட ஒரு வழி உள்ளது.

பேஸ்புக் திறந்து, நீங்கள் தரவிறக்கம் செய்திட விரும்பும் விடியோவினைக் காணவும்.

இதனை இயக்கவும். இப்போது பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் அதற்கான இணையதளப் பக்க முகவரி கிடைக்கும். இந்த முகவரியைக் கீழ்க்கண்டபடி மாற்றவும்.

"www" என்று இருப்பதை, "m" என மாற்றவும்.

முகவரியின் தொடக்கம், https://m.facebook.com/...... என்பது போல மாற்றம் அடையும்.

இந்த மாற்றம் ஏற்பட்டவுடன், எண்டர் பட்டன் அழுத்தினால், இந்தப் பக்கத்தில் மொபைல் பதிப்பிற்கான பக்கம் காட்டப்படும்.

மொபைல் பதிப்பிற்கான பக்கம் திறக்கப்பட்டவுடன், விடியோவினை இயக்கவும். இயக்கபடுகையில், அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். அதில் கிடைக்கும் ஆப்ஷன் மெனுவில் Save video அல்லது Save target அல்லது Save link என்று கிடைக்கும். இதில் கிளிக் செய்து, பின்னர் சேவ் செய்திட வேண்டிய போல்டரைத் தேர்ந்தெடுத்தால், விடியோ சேவ் ஆகும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக