அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 18 மே, 2016

வேர்ட் புரோகிராமில் தரப்பட்டுள்ள டிபால்ட் எழுத்தினை, நாம் விரும்பும் எழுத்துக்கு மாற்ற

நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில், வேர்ட் அந்த டாகுமெண்ட் எப்படி தோன்றுகிறது என்பதனை சில மாறா நிலை அமைப்புகளின் அடிப்படையில் அமைக்கிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவினை, இரண்டு இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும் என்றாலும், ஓர் இடத்தில் மட்டுமே அமைக்கிறது. விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் இதனைப் பதிவு செய்கிறது. இதன் அடிப்படையில் தான், Normal Template என்னும் டாகுமெண்ட்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாகிறது.



வேர்ட் மாறா நிலையில் மேலே சொல்லப்பட்ட டெம்ப்ளேட்டினை அமைக்கவில்லை என எடுத்துக் கொண்டு, நீங்கள் விரும்பும் எழுத்துரு வகையினை மாறா நிலையில் அமைக்கலாம்.

1. புதிய டாகுமெண்ட்டில், தானாக இயங்கும் எழுத்தில் ஏதேனும் சில சொற்களை டைப் செய்திடவும்.

2. நீங்கள் டைப் செய்தவற்றில் சில எழுத்துகளைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இப்போது Ctrl+D என்ற கீகளை அழுத்தவும். வேர்ட் இப்போது Font Dialogue Box ஐக் காட்டும்.

4. அந்த பாக்ஸில் தரப்பட்டுள்ள கண்ட்ரோல் டூல்களைப் பயன்படுத்தி, நீங்கள் பயன்படுத்த விரும்பும், மாறா நிலையில் அமைக்க விரும்பும், எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கவும்.

5. தொடர்ந்து Default பட்டனை அழுத்தவும். இப்படி அழுத்துகையில், விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் இந்த மாற்றம் பதியப்படும்.

6. இந்த எழுத்துருவினையே, மாறா நிலையில் அமைக்க விருப்பமா? (Default Font) என்ற கேள்விக்கு “Yes” என அழுத்தவும்.

7. தொடர்ந்து OK அழுத்தி வெளியே வரவும்.

வேர்ட் ஏற்கனவே, Normal.dotm என்ற ஒன்றை ஏற்படுத்தி இருந்தால், இன்னொரு வகையிலும், இந்த மாற்றத்தினை மேற்கொள்ளலாம். கீழ்க்கண்டவாறு செயல்படவும்.

1. உங்கள் ஹார்ட் ட்ரைவில் Normal.dotm எங்கு உள்ளது எனக் கண்டறிந்து, அதனை வேர்ட் புரோகிராமில் திறக்கவும்.

2. இப்போது வேர்ட் ரிப்பனில், Home டேப்பில், Styles குரூப் பார்க்கவும். இதில் வலது ஓரமாக, ஒரு கீழ்விரி பட்டியலுக்கான அம்புக் குறி இருக்கும். அதனை அழுத்தவும். வேர்ட் இப்போது Styles task pane ஐக் காட்டும்.

3. ஸ்டைல் பட்டியலில் கீழாகச் செல்லவும். அதில் Normal என்ற ஸ்டைல் இருக்கு.

4. இதிலும் வலதுபுற அம்புக் குறியை அழுத்திக் கிடைக்கும் பட்டியலில், Modify என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Modify Style பாக்ஸ் கிடைக்கும்.

5. இனி Format கிளிக் செய்து, Font தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பாண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

6. இங்கு கண்ட்ரோல் பயன்படுத்தி, உங்களுக்கு விருப்பமான எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கவும்.

7. தொடர்ந்து இருமுறை OK கிளிக் செய்து வெளியேறவும்.


---------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக