அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 18 மே, 2016

கூகுள் தளத்தில், அதன் தேடல் டூல் மூலம் நாம் மேற்கொள்ளும் தேடல்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு பெற

கூகுள் நீங்கள் மேற்கொண்ட தேடல்களை எல்லாம், தன் பதிவாகக் கொண்டிருக்கும். இவற்றை நீங்கள் மட்டுமே பார்வையிட முடியும். நீங்கள் பிரவுசர் வழி பார்த்த இணைய தளங்களை, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பது போல, இதனையும் எண்ண வேண்டாம்.

இவற்றை உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டும் தான், கூகுள் தேடல் பட்டியலைக் காட்டும். ஆகையால் நீங்கள் உங்கள் தேடல்களை, ஒரு டெக்ஸ்ட் பைலாகப் பெற்று, ரகசியமாக, மற்றவர் அறியாமல் வைத்துக் கொள்ளலாம்.

அதனைப் பெறும் வழி:



முதலில் https://history.google.com/ என்ற தளம் செல்லவும்.

நீங்கள் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருந்தாலும், மீண்டும் பாஸ்வேர்ட் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.

சரியாகக் கொடுத்த பின்னர், கிடைக்கும் தளத்தில், வலது மேல் மூலையில் இருக்கும் கியர் ஐகானில் கிளிக் செய்திட வேண்டும்.

அங்கு காட்டப்படும் கீழ்விரி மெனுவில், "Download" என்பதில் கிளிக் செய்தால், உங்களின் தேடல்கள் அனைத்தும், அவை சேர்த்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தரப்படத் தயாராய் இருக்கும்.

உங்களின் சந்தேகத்திற்குத் தீனி போடும் வகையில், கூகுள் ஒரு எச்சரிக்கையைத் தரும்.

”உங்கள் தேடல்களில், மற்றவர்கள் அறியக் கூடாத தேடல்கள் சில இருக்கலாம். மற்றவர்களுக்குக் காட்டப்படாமல் இருக்க வேண்டிய தளங்கள் இருக்கலாம்” என்று அறிவித்து, பின்னர் எப்படி எச்சரிக்கையாக, இதனைக் காப்பாற்றி வைக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறி, அந்தப் பட்டியலைத் தரும்.

அல்லது

மொத்த தேடல் தொகுப்பினையும் பெற, உங்கள் மெயில் அக்கவுண்ட்டிற்கு ஒரு லிங்க் அனுப்பும். அந்த பைல் சுருக்கப்பட்ட பைலாக இருக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக